(Reading time: 51 - 102 minutes)

 

" னக்கென்ன குறை மா ? நம்ம ஊருல  தானே இருக்கேன் .. "

" நீ ஏன்மா இப்படி இளைச்சுட்ட ? " என்று சிவகாமியின் முகத்தை வருடினார் சிவகாமி ..

"ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை ... "

" நல்ல இருங்க கண்ணுங்களா " என்றவருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.. வறுமையான வாழ்வோ வசதியான வாழ்வோ உறவுகள் இல்லாத வாழ்வும் வாழ்வா என்ன? 

தயக்கமாய் அங்கு நின்றிருந்தார் பானு .. அர்ஜுனன் அவரருகில் வந்து

" அம்மா, பாட்டி " என்று அறிமுகப்படுத்தினான் ..

பெண்பிள்ளை இல்லாத குறையோ அல்லது பானுவின் முகத்தில் இருந்த சாந்தமோ திடீரென உள்ளிருந்து அவருக்கு தாய்மை பெருக்கெடுக்க பானுவை அணைத்து கொண்டார் பாட்டி..

பானுவுக்குமே ஏதோ தாய் அணைப்பில் இருக்கும் சிறுமியாய் உணர்ந்தார் .. அவரின் கலங்கிய விழிகளே அதற்கு ஆதாரமாக

" நீ அழாதம்மா ..அதான் அம்மா கிட்ட வந்துட்டியல்ல .. இனி அழாத தாயி " என்றார் .. அதற்குள் மீராவையும் ஜனனியையும் பார்த்து கை நீட்டினார் தாத்தா .. பாட்டி கலங்கி நிற்பதை கவனித்தவர் வேண்டுமென்றே

" பார்த்தியாடி ..எம்பேர புள்ளைங்களுக்கு மகராசி மாதிரி பொண்ணுங்க அமைஞ்சிருக்கு .. எனக்கும் தான் தேடி கட்டி  வெச்சிருக்காங்க பாரு" என்று பெருமூச்சு விட்டாரு .. அவரின் சீண்டல் வீண் போகவில்லை ..

" எதுக்கு இப்படி நொடிசுக்கனும் ..உங்க அத்தை பொண்ணு ஆரவல்லி இன்னும் உங்களுக்காக காத்திருகாலாம் ல .. அவளை தேடி போறது " என்றார் திரும்பி கொண்டார்..

" அட .. என் வள்ளியம்மா இருக்கும்போது எனக்கெதுக்கு ஆரவல்லியோ கோரவல்லியோ  " என சர்ரண்டர் ஆனார் தாத்தா .. அதை வாய்விட்டே சொன்னான் ரகுராம் ..

" தாத்தா நல்லாவே அந்தர் பல்ட்டி அடிக்கிறிங்க நீங்க" உடனே பாட்டி

" ஆமா அப்பு .. நீ கொஞ்சம்  பார்த்தே இரு .. உங்க தாத்தா இப்படித்தான்"  என்றார் ..

" தங்க சிலையாட்டம் இருக்கீங்க ஆயா " என்று மீரா,  ஜானகி, சுபத்ரா மூவருக்கும் சுத்தி போட்டவர் கைகளில் போட்டிருந்த தங்க வளையலை ஆளுகொன்று மாட்டி விட்டார் ..

" ஐயோ எதுக்கு பாட்டி வந்ததுமே தங்கைத்தை கலட்டுரிங்க ? " என்று சட்டென கேட்டாள் மீரா.. அவள் கேட்ட விதத்தை ரசித்தவர்

" அபிராமி நம்ம மூத்த மருமக அப்படியே உன்னுடைய மறு உருவம் போல " என்றார் ...

" ம்ம்ம் ஆமா அத்தை ...ஜானகி அப்படியே சிவகாமி மாதிரி .. " என்றார் .. எங்கே  ஜானகியை பற்றி பேசாமல் இருந்து அவள் மனம் சங்கபடுமோ என்று யோசித்து லாவகமாய் அவளையும் பேச்சில் இழுத்த அபிராமியை மனதில் மெச்சினார் வள்ளியம்மாள்..

இப்படி ஒவ்வொருவரும் அணைப்பும் பேச்சுமாய் தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டு இருந்தனர் ..

" சரி சரி .. பொழுதாகுது...வீட்டுக்கு போயி பேசலாம் வாங்க " என்றார் குடும்ப தலைவரான நம்ம தாத்தா தான் ..

அன்று மாலை,

" பாட்டி " என்றபடி சமையலறைக்கு வந்தனர் பெண்கள் மூவரும் ..

" அடடே .. என்ன கண்ணுகளா .. ? அசதியா இருக்கும்னு ஓய்வெடுக்க சொன்னேனே "

" நீங்க இங்க இருக்கும்போது எங்களுகென்ன ஓய்வு அவசியம் பாட்டி ? " என்ற மீரா, பாத்திரங்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்... ஜானகி காய்கறிகளை நறுக்க, சுபத்ரா பாட்டியிடம் பேச்சு கொடுக்க துவங்கினாள்....

" பாட்டி நான் ஒன்னு கேட்கவா ? "

" கேளு தாயி "

" எப்படி  பாட்டி தினமும் சமையல் பண்ணுறிங்க ? " அவளின் கல்வியில் மற்ற இருவரும் சிரித்து கொண்டனர் ...

" ஏன் தாயி ? "

" ஆமா .. பொண்ணுங்கன்னா  இப்படி அடுப்படியில் தான் அடிமையாய் இருக்கனுமா என்ன? "

" என் செல்ல பேத்திக்கு இன்னும் அடிப்படி ரகசியம் தெரியலையா ? "

" அதென்ன ரகசியம் பாட்டி ? "

" நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல  தாயி .. சமையலும்  ஒரு தந்திரம் தான்  .... "

" தந்திரமா ?  " என்று மூவரும் ஆர்வமாக கேட்டனர் ..

" அட ஆமா தாயி .. சமையல் மருந்தாகும், விருந்தாகும், சண்டையை தீர்த்து வைக்கும், சுமூகமான உறவை ஆரம்பிச்சு வைக்கும் ..சில நேரம் சமையல் தூது போகும் தெரியுமா ?  "

" தூதா ??? "

" அதோ அங்க திண்ணையில உட்கார்ந்து வியாக்கானம் பேசிகிட்டு இருக்காரே உங்க தாத்தா, அவரை பார்க்க யாரவது வந்தா, நான் எப்படி செய்தி சொல்வேன் தெரியுமா ? "

" எப்புடி ? "

" சமையல் ருசியை  வெச்சுதான் தான் "

" கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாட்டி "

" இப்போ வேண்டாதவன் வந்திருக்காங்க .. நாசுக்கா பேசி  அனுப்பி வைங்க .. அவங்க கூட உறவு பாராட்ட வேணாம்னு நான் சொல்லனும்னா, காரசாரமா  இஞ்சி டீ யோ இல்ல சுக்கு காப்பி யோ போட்டு உன் தாத்தா கையில கொடுப்பேன் .. அதை குடிச்சதுமே அவுகளுக்கு  நான் சொல்ல வர்றது புரியும் .. "

" இதுவே சமாதனம்னா ? " - ஜானகி

" சமாதனம்னா  மோர் எடுத்துட்டு போயி கொடுப்பேன் "

" கலக்குறிங்க பாட்டி "

" இதுவே நல்ல செய்தி பேசி முடிச்சிருங்க நு என் சம்மதத்தை  சொல்லனும்னா, ஏதாச்சும் இனிப்பு செஞ்சு கொடுப்பேன் "

" பாட்டி இப்படிலாம் கூட பேசிக்க முடியுமா ? "- சுபத்ரா

" ஆமா தாயி .. வந்தவங்க மனசும் கஷ்டபடாது, அதே நேரம் சொல்ல வந்ததையும் சொல்லிடாலம்ல ! " என்று சிரித்தார் பாட்டி ..

வயசானவங்களுக்கு இப்போ உள்ள உலகம் தெரியாதுன்னு நாம நினைக்கிறோம் .. ஆனா கஷ்டத்தை கரும்பாக்கி, கண்ணீரை வைரமாக்கும் கலை அறிந்தவங்க நம்ம முன்னோர்கள் .. பாட்டியிடம்  கற்றுக்கொள்ள நிறைய இருக்கே என்ற ஆர்வம் மூவரிடமும் உண்டானது ..

நண்பர்களே, இந்த தொடர் கூடிய சீக்கிரம் முடிய போகுது .. என்றாலும் சில சம்பவங்களை மிக நுணுக்கமாக  ரசித்து எழுத விரும்புகிறேன் .. அதனால் இந்த எபிசொட் இங்கே முடிவடைகிறது.. அவர்களோடு சேர்த்து நாமும் நிறைய கத்துப்போம் அடுத்த எபிசொட் .. நன்றி :)

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.