(Reading time: 51 - 102 minutes)

 

தை அனைத்தும் தந்தையர் இருவரின் சம்மதத்துடன் ஏற்பாடு செய்து வைத்திருந்தான் .. அவனுக்கு தெரியாத இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார் சூர்ய பிரகாஷ் .

இதை அறியாத ஜானகியோ, ஆபீஸ் கார் வீட்டில் வந்து நிற்கவும் ரகுராமை தேடினாள்..

" ஏன் ராம் வரல? போனையும் எடுக்கல ? என்ன பண்ணுறிங்க ராம் ? " என்று யோசிக்கும்போதே அவள் செல்போன் சிணுங்கியது ..

" ராம் "

" ஹே ஜானு நான் சுஜாதா பேசுறேன் "

" ஓ.....சுஜா "

" ஹேய் என்ன நான் போன் பண்ணுவேன்னு எதிர்பர்கலையா ? "

" அது .... சாரி .. "

" என்னம்மா? "

" எப்படி இருக்கீங்க சுஜா ? அண்ணா எப்படி இருக்காரு ? குட்டி பாபா என்ன சொல்றாங்க ? "

" நான் நல்ல இருக்கேன்... உன் அண்ணாதானே... கூட ஒரு ஆளு சேர்ந்தாச்சுன்னு சந்தோஷமா இருக்காரு... அப்பா குரலை கேட்டாலே பேபி அம்மாவை உதைக்கிறாங்க வயித்துக்குள்ள .. "

" ஹொவ் ச்வீட் .. "

" அடிபாவி என்னை உதைக்கிறது உனக்கு ச்வீட் ஆ ? "

" ஹஹஹஹாஹ் "

" சரி நீ எப்படி  இருக்க ? என்னை மறந்தாச்சா ? "

" ஐயோ உங்களை எப்படி மறப்பேன் சுஜி ..நானே உங்ககிட்ட நிறைய பேசணும்னு நெனச்சேன்.. "

" சரிதான் .. அப்போ நாளைக்கு வர்ரிங்களா நீயும் ரகுவும் ? "

" ஏதும் விசேஷமா? "

" ஆமா உங்க அண்ணாவுக்கு பிறந்தநாள் "

" அடடே .... சூப்பர் அப்போ நாளைக்கு நாங்க கண்டிப்பா வரோம் சுஜி "

ஜானகி சுஜாதாவிடம் பேசி முடிக்கவும், அவர்களின் கார் ஆபீஸ் முன் நிற்கவும் சரியாய் இருந்தது .. கார் கதவை திறந்து அவள் பெண் மயிலாய் இறங்கி வர, அவளை ரசித்தப்படி ஒரு பூங்கொத்தை கொடுத்து வரவேற்றாள் விஷ்ணுப்ரியா ..

" குட் மோர்னிங் மேடம்"

" குட் மோர்னிங் ப்ரியா ... என்ன வரவேற்பு லாம் பலம்மா இருக்கே ?? என்ன நடக்குது ? "

" நான் சொல்ல கூடாது என்பது மேலிடத்து உத்தரவு .. உள்ள வாங்க உங்களுக்கு தெரியும் .. எனிவே யு ஆர் லுகிங் கொர்ஜியஸ்... "

ஒரு வெட்க புன்முறுவலை பதிலாய் தந்தவள், ரகுராமின் அறைக்கு சென்றாள்...

என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்

ஒரு மொழி இல்லாமல்

ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன்

உண்மையிலேயே மௌனமாகித்தான் போனான் ரகுராம் .. அவன் விழிகளோ அவளை படமெடுக்க, ஜானகி அப்போதுதான் அங்கு அமர்ந்திருந்த பெரியோர் இருவரையும் பார்த்தாள்...

" வாமா "

" நீங்க எப்போ வந்திங்க மாமா ? ராம் எதுவும் சொல்லலையே "

" ஹா ஹா சர்ப்ரைஸ் ... " என்ற ரகு, அவளை பார்வையால் அளந்தான் .. அவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த அந்த புடவை, அவளுக்கு மிக பொருத்தமாய் இருந்தது ..

" அப்பா ரெடியா ? "

" எஸ் டா  ! "

டுத்த நிமிடமே மதுவிடம் இண்டர்காமில் பேசியவன், அரைமணி நேரத்தில் கம்பனியில் பணிபுரியும் அனைவரையும் பிரத்தியேகமாக அலங்கரிக்கபட்ட அந்த அறைக்கு அழைத்திருந்தான் .. ஜானகி எதுவும் புரியாமல் நின்றிருந்தாள்.. ஏனோ அவள் கைகள் சில்லிட்டன....

" இது என்ன புதுசா  இருக்கே ? " என்று எண்ணினாள்..அவளின் உணர்வுகளை படித்தவன், ஆதரவாய் அவளின் கரம் பற்றினான்..

பலரின் பார்வை அவர்களின் மீதே படிவத்தை தோன்றியது ஜானகிக்கு.. எனினும் ஏதோ ஒரு வகையில்  அவனின் செயல் அவளுக்கு இதமாய் இருந்தது .. அனைவரும் வந்துவிட்டதை உறுதிசெய்த பின் பேச ஆரம்பித்தார் சூர்ய பிரகாஷ் ..

" வெர்ரி குட் மோர்னிங் டூ யு ஆல் .. ஒரு அவசர மீட்டிங் வெச்சதும் என்னடா நடக்குதுன்னு உங்களுக்குள்ள கேள்விகள் வந்திருக்கும் .. சிலருக்கு என்ன பேச போறோம்னு கூட தெரிஞ்சிருக்கும் .. என்னத்தான் நம்ம கம்பனி மிஸ்டர் ரகுராம் அண்ட் மிஸ்டர் கிருஷ்ணன் பொறுப்பில் இருந்தாலும் வருஷா வருஷம் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் அமல்படுத்தவும் நாங்க இங்க வர்றது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் .. அந்த வகையில இந்த வருஷம் நம்ம ஆபீஸ் ல சில மாற்றங்களை கொண்டு வரப்போறோம் .. சில குட் நியுஸ் இருக்கு ..

முதல்ல மாற்றம் என்னனு சொல்லிடுறேன் .. பொதுவா மத்த ஆபீஸ் மாதிரி நம்ம ஆபீஸ் ல அட்மின் சைட் ல டீம் லீடர் வெச்சு வேலை நடத்துற சிஸ்டம் நாம பயன்படுத்தினது இல்ல .. பட் இனிமே நீங்க எல்லாரும் 5 டீம்ஸ் ஆ பிரிஞ்சு வேலை பார்க்க போறீங்க .. இதுக்கு ரீசன் ரொம்ப ஈசி..முதல் காரணம், யாருடைய ரோல் எதுன்னு ஒரு க்லேரிட்டி இருக்கும் . இரண்டாவது நம்ம கம்பனில ரொம்ப திறமைய வேலை பார்க்குறவங்களுக்கு இது ஒரு அடுத்த கட்டமாக இருக்கும் .. மூணாவது டீம்வொர்க் என்பது எவ்வளோ அவசியம்னு தெரியும்..உங்களுக்குள்ள பிணைப்பு ஜாஸ்தியாகும் . கடைசி ரீசன், நமக்கும் மேல கேள்வி கேட்க ஒருத்தர் இருக்காங்கனு ஒரு பொறுப்புணர்ச்சி  அதிகமாகும் . அதை தவிர ஆபீஸ் ல நீங்க சொல்ல நினைக்கிற பீட்பெக்ஸ், உதவிகள் பத்தி நீங்க உங்க டீம் லீடர் மூலமாக எங்களுக்கு சொல்லலாம் ..

அந்த 5 டீம் லீடர்ஸ் யாருன்னா , மிஸ் மது , மிஸ் மீனா, மிஸ் கீர்த்தனா, மிஸ் ப்ரியா அண்ட் மிஸ் மலர் .... "  அவர் அவர்களை அழைத்து கைகொடுத்து ஊக்குவிக்க, அதிர்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சியில் இருந்தனர் ஐவரும் ... ஜானகியோ இரகசிய குரலில்

" இது உங்க ஐடியா வா ராம் ? " என்றாள்...

" ம்ம்ம் ஆமா.. இதுவும் பாலிடிக்ஸ் நு வெச்சுகொயேன்"

" எப்படி ? "

" அன்னைக்கு வாணி வேணும்னே உன்கிட்ட வந்து மதுவை பத்தி  போட்டு கொடுத்தது எனக்கு தெரியும் "

" பட் நான் அதை நம்பலையே "

" அதுக்காக அவங்க பண்றது சரின்னு ஆகிடுமா ? இனி இவங்க 5 பேருல யாரவது ஒருத்தர்தான் வாணிக்கு டீம் லிடர் .. நான் கேஸ் பண்றது ரைட்னா, ஒன்னு வாணி டீம் கிட்ட  ஒரு மாற்றம் வரும் .. எப்பவும் நீச்சல் பழகுன்னு சொல்றதை விட தண்ணில தள்ளி விட்டு பழக வைக்கிறதுதான் ரைட்டு .. அதே மாதிரி தான் .. இதுவும் ... சும்மா ஒருத்தவங்களை பிடிக்கலைன்னு அவங்களை கச்டபடுத்துரத்தை விட பழகி பார்த்து உணர்ந்து வரட்டுமே "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.