(Reading time: 51 - 102 minutes)

 

" ம்ம்ம் வரோம் மா "

கிருஷ்ணன் அவளது வலது கரத்தை பற்றி வாசலுக்கு வந்தான் ..

" கார் எங்க கிருஷ்ணா ? "

" எதுக்கு கார் ..? உன் ஸ்கூட்டிலதான் போக போறோம் .. "

" என் ஸ்கூட்டியா ? "

" ஆமா அதோ பார் " என்று அவன் சுட்டிகாட்டிய இடத்தில்  அவளின் பழைய வண்டி புத்தம் புதுசு போல அங்கு நின்றது ..

" ஹே கண்ணா .. இதெல்லாம் இன்னும் இங்கதான் இருக்கா ? "

" அடிபாவி ??? என்னடி கேள்வி இது ? நீ ஊட்டியை விட்டு ஓடிட்டா உன் திங்க்ஸ் எல்லாம் உன்னோடவே ஓடி போயிருமா என்ன ? என் மீராவின் ஒவ்வொரு பொருளும் என்கிட்ட பத்திரமா இருக்கு "

ஏனோ அவன் சொன்ன விதத்தில் அவளது கண்கள் கலங்கியது .. கிருஷ்ணனோ

" ஹே வெயிட் வெயிட் அவசபட்டு அழுதுராதே .. உனக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கு இன்னைக்கு .. மொத்தத்தையும் வாங்கிகிட்டு அதுக்கு பிறகு நீ அழுமூஞ்சியா மாறிக்கோ "

" ஓஹோ அப்போ நான் அழுமூஞ்சியா ? "

" அப்போ இல்ல செல்லம் எப்பவுமே நீ அழுமூஞ்சிதான் "

" இல்ல"

" ஆமா "

" இல்ல"

" ஆமா ... சரி இல்லன்னு ப்ருவ்  பண்ணுறியா? ஓகே இன்னைக்கு புல்லா நீ அழாம இருந்தா நீ அழுமூஞ்சி இல்லன்னு நான் ஒத்துக்குறேன் ... ஓகே யா ? "

" ஓகே டீல்... போலாமா ? "

" எஸ் .. "  என்றவன் அவளது ஸ்கூட்டியில் அமர அவன் பின்னால் அமர்ந்துகொண்டாள் மீரா .. ஒரு வழியாய் தன்னவள் தன்னுடன் இணைந்து விட்டாள் என்று பரவசமடைந்தவன் இறைவனுக்கு நன்றி சொன்னான் .. இனிதான் தொடங்கிய அவர்களின் பயணம் சென்ற முதல் இடம் அந்த கோவிலுக்குதான் .. ஆம், மீராவின் வாழ்க்கையை திருப்பி போட்ட அதே கோவில் ..

கோவில் வாசலில்,

" இங்கயா ? " - மீரா

" ஆமாடா உள்ள வா "

" வேணாம் கிருஷ்ணா,,, இந்த கோவிலதானே ... " என்று சொல்லவந்தவளின் உடல் லேசாய் நடுங்கியது .. அவளை தோளோடு அணைத்தவன் கோவிலுக்குள் உள்ளே ஒரு  மண்டபத்தின் அருகே அமர்ந்து அவளின் விழி நோக்கி பேசினான் ..

" மீரா "

" மீரா என்னை பாரும்மா "

" ம்ம்ம் "

" இது பாரு கண்ணம்மா .. லைப் ல எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு .. நமக்கு கிடைக்கிற ஒரு வெற்றி எப்படி நம்மளை ஊக்குவிக்குமோ அதே மாதிரி தோல்வி நம்மளை வலுப்படுத்தும் ... லைப் ல எல்லாருக்கும் எல்லாமே கிடைக்காது மீராம்மா "

".... "

"கிடைக்கனும்னு அவசியமும் இல்ல.. நம்ம வாழ்க்கை கூட ஒரு கேம் மாதிரிதான் .. நமக்கு கொடுக்கப்படுற வசதிகளும் உறவுகளையும் வெச்சு நாம எப்படி சந்தோஷமா இருக்கோமோ அதுதான் நம்ம வெற்றி தோல்வியை குறிக்கிறது .. ஒருவேளை உனக்கிப்படி நடக்கணும் என்பது கூட கடவுளின் முடிவா இருக்கலாம்.. இது எனக்கு வைக்கபட்ட  பரிட்ச்சையா இருக்கலாம்.. நமக்கு  வைக்கபட்ட  பரிட்சையா இருக்குலாம் ..நான் தோற்று போக நீ விடுவியா ? "

" என்ன இப்படி கேட்குறிங்க கண்ணா ? நிச்சயம் மாட்டேன் "

" அப்பறம் என்னடா ? கடவுள் எனக்கு பரிட்சை வைக்கிறார் .. நீயும் நானும் சந்தோஷமா வாழ்ந்து காட்டி வெற்றி பெறனும்.. அதுக்கு நீ உறுதுணையா இருப்ப  தானே கண்ணம்மா ? "

" கண்டிப்பா கண்ணா ... "

" அப்போ வா .. வந்து அந்த கடவுள் கிட்ட சொல்லு .. இது இல்ல இன்னும் ஆயிரம் பிரச்சனைய கொடுங்க நானும் என் கிருஷ்ணாவும் அதை சந்தோஷமா ஏத்துக்குவோம் நு " என்றவன் வலது கரத்தை நீட்ட

அவன் பேசியதை விட அவன் பார்வை தந்த தைரியத்தில் நிமம்தி அடைந்தவளாய் அவனை பின்தொடர்ந்தாள் மீரா ... இருவரின் மனமும் அமைதியாய் இருந்தது .. அந்த நேரத்தை சாதகபடுத்தி கொண்டு பேசினான் கிருஷ்ணன் ..

" மீரா "

" சொல்லுங்க "

" நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே "

"இதென்ன கேள்வி கிருஷ்ணா.. மாட்டேன் சொல்லுங்க "

" உன் அப்பா மேல நீ இன்னும் கோவமா இருக்கியா ? "

"..."

" நான் அன்னைக்கே உன் அப்பா பக்கத்துல இருக்குற நியாயத்தை எடுத்து சொன்னேன் டா. பட் அதுக்காக நீ மனசு மாறணும்னு நான் வற்புறுத்தல .. "

" தெரியும் கிருஷ்ணா ... உண்மையா சொல்லனும்னா அன்னைக்கு நீங்க எடுத்து சொன்னப்போதுதான் என் தப்பு எனக்கு புரிஞ்சது கிருஷ்ணா,, .. அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கணும் போல இருக்கு.. அவரு என்னை  மன்னிப்பாரா ??? " என்று கண் கலங்கினாள்...

அவள் அழுவதை அவன் சுட்டிகாட்ட,

" பரவாயில்ல நான் அழுமூஞ்சியாவே இருக்கேன் .. " என்று சிணுங்கினாள் மீரா.. அவளை தோளோடு அணைத்தவன்,

" மாமா உன்னை மன்னிசிருவார் கண்ணம்மா,  அதைவிட நீ ஒரு விஷயத்தை ஏத்துகிட்டா அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார் " என்றான் ..

" என்ன கிருஷ்ணா ? "

" வா நான் உன்னை அங்கேயே கூட்டிடு போறேன் " என்றான் ..

அந்த அழகிய வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்தினான்  கிருஷ்ணன்.. மிஸ்டர் சரவணன் எம் ஏ பி எல்  என்ற பெயர் பலகை அங்கு மாட்டபட்டிருந்தது...

" இது அப்பாவுடைய வக்கீல் சரவணன் அங்கிள் வீடுதானே "

" ஆமா கண்ணம்மா ... வா போலாம் " என்றவனின் வார்த்தைக்கு கட்டுண்டவள் போல பின்தொடர்ந்தாள் அவனை ..

" அடடே வா கிருஷ்ணா...வாம்மா மீரா ..நல்ல இருக்கியா " என்று வாஞ்சையுடன் வினவி அன்புடன் அவர்களை வரவேற்றார் சரவணன்.. ஏனோ அவரை பார்க்க பார்க்க மீராவிற்கு தன் தந்தையின் முகம் நியாபகம் வர, சட்டென அவர் காலில் விழுந்து ஆசிபெற்றுகொண்டாள் அவள் ..

" ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா"

" அடடா.. என்னம்ம்மா இது ? நல்லா இரும்மா .. நல்லாஇரு"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.