(Reading time: 51 - 102 minutes)

 

" ப்போ என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா " என்றபடி அவர் பாதம் பாதம்  பணிந்தான் கிருஷ்ணன் .. அவன் மாமா என்று அழைத்ததிலும், அதை கண்டு மீரா முக சிவந்ததை பார்த்ததுமே கிருஷ்ணனின் மீது நம்பிக்கை வந்துவிட்டது அவருக்கு ..

ஆம், மீரா அந்த விபத்திற்கு பின் ஆகாஷின் வீட்டில் இருக்கும்போது, கிருஷ்ணனை பற்றி அறிந்து கொண்டார் சரவணன்.. எனினும் வக்கீல் அல்லவா ? அவர் பார்க்காத  பிரிதலா ? அதனாலேயே அவருக்கு கிருஷ்ணனின் மீது நம்பிக்கையும் இல்லை சந்தேகமும் இல்லை .. ஒருவேளை  இருவரும் திருமணம் செய்துகொள்ள  விருப்பத்தை தெரிந்தால் மட்டும் மீராவிற்கு அதை கொடுத்துவிடலாம் என்று காத்திருந்தார் ..

அதன்பின் மீண்டும் இம்முறை அவர் கிருஷ்ணனை  அவர் சந்திக்க நேர்ந்தது.. கிருஷ்ணனிடம்  அதை பற்றி பேசியவர் மீராவை தன் வீட்டிற்கு அழைத்து வரும்படி சொன்னார் . அதிகம் சுற்றி வளைக்க விரும்பாதவர் நேரடியார் பேசினார் ...

" எப்போ கல்யாணம் மா ? "

" ஆ ...ஆங்.......... அத்தை மாமா சொன்னதும்தான்  அப்பா ... "

" தம்பி எப்படி ? நல்லவரா? நம்பி உன்னை  தரலாமா ? "

அவளின் கனிந்த முகமும் நிறைந்த புன்னகையுமே அவருக்கு வேண்டிய பதிலை சொன்னது .. அவர்களை காத்திருக்கும்படி சொன்னவர், ஒரு  அறைக்குள் சென்று அந்த பெட்டியை எடுத்து வந்து மீராவிடம் ஒப்படைத்தார் ..

" என்னப்பா இது ?"

" திறந்து பாரும்மா "

" இவ்ளோ நகையா ? "

" இது பரம்பரை நகையம்மா .. உன் அம்மாவோடது .. உன் அப்பா  அப்படி ஒரு முடிவேடுக்குரதுகு ஒரு வாரம் முன்னாடி என்கிட்ட தந்தாரு ... என்னென்னவோ பேசினாரு.. உன்னை கட்டிக்கபோறவன் எப்படின்னு  தெரிஞ்ச பிறகுதான் உனக்கிது கொடுக்கணும்னு சொல்லி இருந்தார் "

" ஆனா அப்போ நீங்க என் கிட்ட சொல்லலியே பா "

" அப்போ நீ கோவமா  இருந்தியே மா.."

"..."

" அந்த மனநிலையில் நீ நிச்சயம்  இது வேணாம்னு சொல்லி இருப்ப.. ஒரு சாதாரண நகைக்கும் பரம்பர நகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமா... இந்த நகைகளுக்கு பின்னாடி உன் அம்மாவின் நினைவுகள் இருக்கு , அப்பாவின் ஆசியும் இருக்கு "

என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருவளின்  கரம் பற்றினான் கிருஷ்ணன் ..

" நீ என்கிட்ட கேட்டியே டா.. மாமா மன்னிப்பாரான்னு ??? அவரு உனக்காக பாதுகாத்த இந்த பொக்கிஷத்தை நீ மனசார ஏற்றுகிட்டாலே எல்லாம் சரி ஆகிடும் டா " என்றான் கனிவாய் ..

அதன்பின் இருவரும் அவருடன்  பேசிவிட்டு மாலை வீடு திரும்பினர்..

ன்றிரவு,

(நித்யா- கார்த்தி )

தோட்டத்தில் அமர்ந்திருந்தவளை வலது புற தோளை தட்டிவிடு இடதுபுறம் வந்து அமர்ந்தான் கார்த்திக் .. வலது புறம் யாரும் இல்லாததை கண்டு இந்த பக்கம் திரும்பியவளை பார்த்து கேலியாய் சிரித்தான் அவன் .. எப்போதும் உள்ள நித்யா இந்நேரம் அவனை துரத்தி பிடித்து  இரண்டடி வைத்திருப்பாள்..ஆனால் அன்று இருந்த மனநிலையிலோ எதையும் யோசிக்காமல் அவள் தொழில் சாய்ந்து கொண்டு நெருங்கி அமர்ந்தாள்....

" நித்திஈஈ "

" ம்ம்ம் கார்த்தித்த்தி "

" என்னாச்சுடா .. ஏன் ஒருமாதிரியா இருக்க ?? "

" எப்படி கார்த்தி உன்னால இப்படி இருக்க முடியுது ? "

" அது காலையில உடற்பயிற்சி, அதுக்கப்பறம் பாதாம் பால் .. அப்பறம் ........"

" ஒய் ஒய்……….. ஸ்டாப் நான் அதையா சொன்னேன் ???? "

" பின்ன வேறென்ன ?? "

" எப்படி என்மேல கோபப்படாமல் இப்படி இருக்க நீ ? அட்லீஸ்ட் என்னை கொஞ்சம் திட்டலாமே.. ?? என்னை பேசவே விடாம பண்ணுறியே?? ஏண்டா ?? "

" என்ன பேச போற நித்தி ??? எப்பவுமே நீ பேசறதுக்கு முன்னாடியே உன் மனசை நான் படிச்சிருவேனே ... அது உனக்கு தெரியாததா ? "

" அப்படி இல்ல கார்த்தி "

" வேணாம் டா.... என்னால நீ குற்ற உணர்ச்சியோடு நின்னு பேசுறதை கேட்க முடியாது .. அதுக்கு நான் செத்துறலாம்" தன் மென் கரத்தால் அவன் வாயை பொத்தினாள் நித்யா..

" விட மாட்டேன் கார்த்தி ... உன்னை அப்படி விட மாட்டேன் ... இனி நீ என்னை விட்டு எங்கயும் போககூடாது " என்றாள்.. கண்களில் ஜீவனை தேக்கி வைத்து அவனை நோக்கினாள் நித்யா... அவள் கரத்தை தன் இரு கரங்களுக்குள்  பொத்தி வைத்தான் கார்த்தி...

" சோ .. என் உயிர் போக நீ விட மாட்ட ..? நீயே இன்ஷ்டால்மெண்ட் ல வாங்கிக்கலாம்னு இருக்கியா பேபி " என்று குறும்புடன் வினவினான் .. அவனின் குறும்பில் தன்னிலைக்கு வந்தவள் அவனை அடிப்பதற்கு வர

தன்னை தற்காத்து கொண்டவன்

" என்னடி இப்படி பேய் மாதிரி அடிக்கிற ? கல்யாணத்துக்கு அப்பறம் நான் சட்னி தானா? " என்றான் ..

" நீ இப்படி வாய் அடிச்சா, கல்யாணம் வரைக்கு கூட நீ தாங்க மாட்ட மவனே " என்றவள் அவனை துரத்த, சட்டென கார்த்தி அந்த பாட்டு பாட நித்யா அப்படியே நின்றாள்..

(உடனே அது ஒரு சூப்பர் ரோமேண்டிக் பாட்டுன்னு தானே நெனைச்சிங்க ,? நோ நோ நோ....அதாவது சிலருக்கு சில பாட்டு கேட்டா பிடிக்காது ..சிலருக்கு சில பாட்டு கேட்ட பயம் வரும் .. எனக்கே  அப்போ 5 வயசு இருக்கும்போது இந்த முத்து படத்துல " கொக்கு சைவ கொக்கு " பாட்டு வந்தா பயம்மா இருக்கும் .. ஏனோ அந்த ஜோதிலட்சுமி பாட்டி நம்ம தலைவரை துரத்தும்போது நான் பயந்துடுவேன் .. ஹ அஹஹா ..  இத வெளிய சொல்லிடாதிங்க.. )

அதே மாதிரி நம்ம நித்யாவுக்கு 5 வயசு  இருக்கும்போதுதான் பூவே உனக்காக படம் வந்தது .. அதுல நம்ம இரண்டாவது ஹீரோயினை விஜய் சார் துரத்திகிட்டே ஒரு பாட்டு பாடுவாரு .. ஏனோ அந்த பாட்டை கேட்டாலே அப்போலாம் நித்யாவுக்கு பயம்மா இருக்கும் ..

அதை  ஒருநாள் அவள் கார்த்தியிடம் சொல்லிவிட,  அவளை வம்பிழுக்க அவ்வப்போது  அவன் அந்த பாடலை பாடுவது வழக்கம் ..

சிக்குலேட்டு சிக்குலேட்டு சிட்டுக்குருவி

ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி

கட்டுலட்டு கட்டுலட்டு கன்னம் தடவி

காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி

நீ சிரிச்சதும் இப்போ எனக்கு

பீர் அடிச்சது போல இருக்கு

கூத்து நடக்குது  ஒட்டிகொள்ளதான்

குருவி தவிக்கிது கட்டிகொள்ளத்தான்

என்று அவன் பாட

" கார்த்தீஈஈஈஈஈஈ பாடாதே " என்று அவனை துரத்தினாள் நித்யா..... ஹஹஹஹ .. அதுக்கு பிறகு ரன்னிங் லவ்விங் சேசிங் தான் .. !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.