(Reading time: 51 - 102 minutes)

 

( மீரா - கிருஷ்ணா )

அதே இரவு நேரம், தனதறையில் இருந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தை ஆசையாய் வருடிகொண்டிருந்தாள் மீரா ... மனம் மட்டும் கிருஷ்ணனையே வளம் வந்தது ....

" எப்படி இவனால் இப்படி தன்னை காதலிக்க முடிகிறது? " என்று சிலாகித்து கொண்டாள்... ஏனோ அவனை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது .." நாமலே கூப்பிடலாம் ஆனா நித்யா யாரவது பாத்தா கேலி பண்ணுவாங்களே "    என்று முணுமுணுத்தவள் ஏதோ யோசனை வர தன் செல்போனை எடுத்தாள்.... போன் போட போறான்னு நினைக்கிறிங்களா ? இல்லவே இல்லை .. தன் செல்போனில் இருந்த அந்த பாடலை உயிர்பித்து தன்னவனை நினைத்து கனவு காண ஆரம்பித்தாள் மீரா . ( அதானே பார்த்தேன் என்னடா , இன்னைகாச்சும் மேடம் தேடி போறாங்களான்னு ... இந்த சீன் ல யும் ஹீரோயின் வரலப்பா... அப்போ ஹீரோ தான் வரணும் ... அப்போ பாட்டை போடுங்க நான் கிருஷ்ணாவை அனுப்பி வைக்கிறேன் )

கண்ணா வருவாயா ? மீரா கேட்கிறாள்

மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்

மாலை மலர்சோலை நதியோரம் நடந்து

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

" வந்துட்டேனே " என்றபடி அங்கு கதவோரம் கை கட்டி சாய்ந்து  நின்றான் கிருஷ்ணா ..

அவ்வளவு நேரம்  அவனை தேடி கொண்டிருந்தவளின் கண்கள் அவன் மீது நிலைகுத்தி நின்றது .. ஆகாயநீல நிற புடவையில், வானிலிருந்து இறங்கிய தேவதையாய் நின்றிருந்தவளை பார்வையால் வருடினான் கிருஷ்ணன் .. அவனின் விழிகளுக்குபோட்டியாய் அவளின்  விழிகளும் அவனை பருகியது ...

நீல வானும் நிலவும்போல நான் உன்னை பார்க்கிறேன்

உண்ணும்போதும் உறங்கும்போதும்  உன் முகம் பார்க்கிறேன்

கண்ணன் வந்து தீண்டிடாது காய்ந்து போகும் பாற்கடல்

உன்னை இங்கு ஆடைபோல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

வேறில்லையே பிருந்தாவனம் ..விடிந்தாலும் நம் ஆலிங்கனம் சொர்க்கம் இதுவோ ??

மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ..

மங்கை வரும் பாதை மன்னன் பார்க்கிறான்

அவனின் விழிகளும் அதையே வினவியது ... என் மீரா வருவாளா ? என்று ? இருகரம் நீட்டி அவன் கேள்வியை பார்க்க, அவனின் அணைப்பில் இன்பமாய் சிக்கி கொண்டாள் மீரா ...  அவனின் வலிய கரங்கள்  அவளை இடையோடு அணைக்க, அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மீரா ... மெல்ல  அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான் கிருஷ்ணன்..

" ஐ லவ் யு கண்ணா " என்றாள் காதலுடன் .. " ஐ லவ் யு டூ கண்ணம்மா " என்றவன் மிருதுவாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

இங்கு கண்ணனும் மீராவும் தங்கள் காதல் கதையை மௌனமாய் பேச, நாம இப்போ அடுத்த ஜோடி பக்கம் போவோமா ?

( ரகு - ஜானகி )

குராமின் காரில்

" ராம் "

" சொல்லுடா "

" மணி என்ன தெரியுமா ? "

" 8 தானே ஆகுது .,..? "

" 8 தானேவா ? இதெல்லாம் அநியாயம் ... என்னை எங்க கடத்திட்டு போறீங்க ? "

" ஹா ஹா ...யார்க்கும் அஞ்சாத ஜானகி தேவியை நான் கடத்த முடியுமா ? "

" ஜானகியை இராவணன் கடத்துறதுதான் கஷ்டம்.. ராமன் அசால்ட்டா கடத்திடலாமே "

" எப்படி பேசுது பாரு இந்த பொண்ணு " என்றவன் காரை பீச்சில் நிறுத்தினான்...

" இது அந்த இடம்தானே ராம் "

" அதே இடம்தான் .. உனக்கும் ஞாபகம் இருக்கா ? "

" எப்படி மறக்கும் ?அதான் கடுவன் பூனை மாதிரி முகத்தை வெச்சுகிட்டு நின்னிங்களே ? "

" யார் நானா ? நீங்கதான் மேடம் ..என் அண்ணாகிட்ட பேசுனிங்க , சுபாகிட்ட பேசுனிங்க ஆனா என்னை பார்த்ததும் மட்டும் மழையில நனைஞ்ச  ஆடு மாதிடி நின்னிங்க "

" அச்சோ போங்கப்பா "

" ஹா ஹா .. சரி அப்படியே ஒரு வாக் போகலாம் வா "

ரகுராமின் கை பிடித்து நடந்த ஜானகி, கடல் அலையை ரசிப்பதும் அவன் முகத்தை கேள்வியை பார்ப்பதுமாக இருந்தாள்..அதை உணர்ந்தவன் வேண்டுமென்றே மௌனத்தை கவசமாக்கி அமைதியாய் நடந்தான் .. பொறுமை இழந்தவளாய் தானே பேச்சை தொடங்கினாள்...

" ராம் "

" ம்ம்ம் "

" இது தேவைதானா ? "

" எது டா ? "

" இல்ல என்னை நம்ம கம்பனில பார்ட்னர் ஆக்குறது "

" ஹா ஹா ஹா மக்கு .. என் லைப் லையே நீ பார்ட்னர் ஆகா போற, அப்போ கம்பனி மட்டும் என்ன ? அதுவும் நீயேதானே சொன்ன டார்லிங், நம்ம கம்பனின்னு ??? "

" பட் அதுக்காக"

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ............ ஜானு .. நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணவோ அல்லது நம்ம காதலுக்கு பரிசாகவோ நான் இதை பண்ணல "

" நானும் அப்படி நினைக்கல ராம் .. "

" இருடா .. நான் பேசி முடிக்கிறேன் ..."

" சரி சரி சாரி .. நீங்க பேசுங்க "

"  இந்த உலகத்துல திறமை இல்லாதவங்கன்னு யாரும் இல்லை ஜானு .. ஆனா திறமையை பயன்படுத்திகாதவங்க உண்டு.. அதே மாதிரி ஒரு வேலைக்காக தன் திறனை வளர்த்துகறதுக்கும், திறமைகேற்ற வேலை செய்றதுக்கும் கூட வித்தியாசம் இருக்கு .. எல்லாருக்குமே லீடர்ஷிப் ஸ்கில்ஸ் இருக்கணும்னு  அவசியம் இல்லை டா .. உனக்கு அது அதிகமாகவே இருக்கு .. உனக்கு திறமை இருக்கு ஜானு ..அதை நான் நம்ம வீட்டுக்குள்ள பூட்டிவெச்சு வேடிக்கை பார்க்க விரும்பல ... சுடர்விளக்கா இருக்குற உன் திறமைக்கு நான் தூண்டுகோளாய் இருக்க விரும்புறேன்.. அது தப்பா ? "  என்று தெளிவாய் கேட்டவனை பார்த்து என்ன பதில் சொல்வது ?

"..."

" என்னடா ... அப்படி பார்க்குறா ? "

" நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க

நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே

பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே…."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.