(Reading time: 51 - 102 minutes)

 

" ஹே என்ன நீயும் சுபா மாதிரி பாட்டு பாட ஆரம்பிச்சுட்ட"

" ஹா ஹா ஏன் என் நாத்தனார் மாதிரி நான் பாடக்கூடதோ?"

" தோடா .. கல்யாணத்துக்கு முன்னாடியே சப்போர்ட்டா? ஹ்ம்ம்ம்ம் அதென்னமோ நம்ம குடும்பத்துக்கே பாட்டு பாடுறது ஒரு தொற்றுநோய் மாதிரி பரவிடுச்சு"

அவன் முகத்தை சோகமாய் வைத்துகொண்டு சொன்ன விதத்தில் சட்டென சிரித்தாள் ஜானகி .

இங்க இவங்க கூலா லவ் பண்ற நேரம் அங்க அர்ஜுன் சுபி என்ன பண்றாங்க பார்ப்போம்

" சுபி வா டா போகலாம் "

" இன்னும் 2 மினிட்ஸ் அர்ஜுன் "

" ஹே லேட் ஆகுது கண்மணி "

அவ்வளோ பொறுப்பா நம்ம சுபிகுட்டி வேலை பார்க்குறாங்களா ? நோ நோ நோ .. நம்ம அர்ஜுன் சின்ன வயசு போட்டோ எல்லாத்தையும் லெப் டாப் ல பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சுபத்ரா ..

" அர்ஜுன் , இந்த போட்டோ ல உங்க கண்ணனுக்கு மை போட்டு விட்டிருக்காங்களே அது சூப்பர், அப்பறம் அந்த போட்டோ ல உங்களுக்கு கால்ல கொலுசு மாட்டி இருக்காங்க பாருங்க.. சோ கியூட் .. கண்ணுல தண்ணியோடு நீங்க பாவமா நிற்குற போட்டோ சான்ஸ் ஏ இல்ல ... அப்படியே தூக்கி கொஞ்சனும் போல இருக்கு " என்று ஒவ்வொரு போட்டோவையும் ரசித்துகொண்டிருந்தாள்...

வைட் வைட் ... ஆபீஸ் கு வந்துட்டு இங்க என்ன நடக்குதுன்னு கேக்குறிங்களா ? இதேதான் அந்த ஆபீஸ் கு காலடி எடுத்து வெச்ச அடுத்த ஒரு மணி நேரத்தில் சுபியும் கேட்டா..  என்ன நடந்தது தெரியுமா ? கிட்ட வாங்க சொல்றேன் ..

இந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல ஒரே ஒரு நாள் ஜெயம் ரவி அவங்க அப்பா ஆபீஸ் கு போவாங்க ... ஆனா அங்க அவருக்கு வேலையே இருக்காது ..எல்லாத்தையும் அல்ரெடி முடிச்சிருப்பாங்க  இல்லையா ? அந்த மாதிரி நம்ம சுபி வர்றதுக்கு முன்னாடியே அர்ஜுன் எல்லா வேலையையும் முடிச்சாச்சு .... ஆபீஸ் ல வேலை இருக்குன்னு சொன்னது எல்லாமே சும்மா கண்துடைப்பு ... எல்லாத்தையும் ரொம்ப சீக்கிரமா அணுகி செயல்படுற அர்ஜுனனுக்கு ஆபீஸ் வேலை எல்லாம் ஜுஜுபி ஆச்சே .. அதன் பிறகு ஒரு வழியா சுபத்ராவை சமாதானப்படுத்தி, பல்லாயிர ஆண்டு காலமாய் தேக்கி வைத்த காதல் கதையை பார்வைகளால் பேசி ( சொன்னா நம்பனும் .. பார்வையால் மட்டும்தான் ) இப்போ கடைசியாய் " அர்ஜுன் போட்டோ செஷன் " நடந்து கொண்டிருந்தது ..

பேச்சின் ஊடே  தன்னையும் மறந்து

" அர்ஜுன் நம்ம பசங்களும் இப்படிதான் இருப்பாங்கல..உங்களை மாதிரியே  கியூட்டா " என்றவள் நாக்கை கடித்துகொண்டாள் ..அவனோ கண்களில் மின்னல் தெறிக்க அவள் பக்கம் வந்து நின்றான் ..

" அர்ஜுன் .. "

" ம்ம்ம்ம் ?"

" மணியாச்சு வீட்டுக்கு  போகலாம்னு சொன்னிங்களே .. வாங்க போலாம் "

" அதைவிட பெரிய வேலை ஒன்னு என் இளவரசி தந்திருகாங்களே " என்றவன் இருவருக்கிடையே இருந்த இடைவெளியை குறைத்து அருகே வர, கண்களை இறுக மூடிக்கொண்டு

" அஜ்ஜு ...நோ ... " என்றாள்.... மெல்ல அவன் மூச்சு காற்று தூரம் போனதை உணர்ந்தவள் கண்விழிக்க, அவள் பார்த்து கண்சிமிட்டியவன் அவள் தலையில் தட்டி

" ஹேய் சின்ன பொண்ணு , வர வர நீயா வந்து ரொம்ப வம்பு பண்ணுற ஜாக்கரதையா  இரு " என்று அவள் எழுவதற்கு நகர்ந்து இடம் தந்தான் ..

" இப்படி ஒரு சமத்து பையன் இருக்கும்போது நான் எவ்ளோ பார்டர் தாண்டினாலும் தப்பில்லை " என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள் சுபத்ரா...

"  சும்மா இருக்குற சிங்கத்தை சீண்டிவிட்டு, போகோ  சென்னல் பார்க்குறதே இந்த பொண்ணுங்க வேலையா போச்சு பா " என்று பெருமூச்சு விட்டவன் அவளின் செல்போனை எடுத்து தந்தான்..

" என்னை  பார்த்தா உலகத்தையே மறந்துடுவியா சுபீ நீ ? இந்நேரம் போனை மறந்துருப்ப பாரு " என்றான் ....

" என் உலகம் என் கண் முன்னாடி இருக்கும்போது இன்னொரு உலகம் எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும் அர்ஜுன் ? "

" இப்படி பேசி பேசியே என்னை களின் போல்ட் ஆகிட்ட டார்லிங் .. இதுக்கெல்லாம் வருங்காலத்துல நிச்சயம் தண்டனை உண்டு "

" ஹா ஹா அதெல்லாம் என் யுவராஜன் பார்த்துபாரு"

"ஹீ ஹீ .,.. போக்கிரி உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா ? வாங்க இளவரசி போகலாம் " என்று அவளை அழைத்து சென்றான் அர்ஜுனன் ..

இங்க நம்ம காதல் ஜோடிகள்  கௌதம் மேனன் சார் படம் ஜோடிங்க மாதிரி காதல் ரசத்தை பொழிய, அங்க சுபத்ரா வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் அபிராமி .. சந்துரு, சூர்யா மற்றும் சிவகாமி மூவரும் அவரையே கேள்வியை பார்த்து கொண்டிருந்தனர் ..

" அபி .. ஏன் உன் மூளையை  இப்படி போட்டு கசக்குற ? ஒன்னு ஒரு முடிவெடு இல்ல எங்க கிட்டயாவது சொல்லுமா ? " என்றார் சூர்யா ..

சட்டென  நடையை நிறுத்தியவர் சூர்யாவை ஏறிட்டார் ..

" சுபா, ரகு எங்க ? கிருஷ்ணா எப்போ வரானாம் ? "

" அக்கா ரகு தம்பி, ஜானகியை டிராப் பண்ணிட்டு வந்திடும் .. சுபாவை மாப்பிள்ளை கூட்டிட்டு வராரு .. கிருஷ்ணன் ஊட்டியில இருக்கான்...இது நமக்கு தெரிஞ்சது தானே ? " என்று கேள்வியாய் பார்த்தார் சிவகாமி

" ஐயோ சிவா .. நீயும் உன் மாமா மாதிரி ஆகிட்டியா ? "

" அண்ணனை ஏன் திட்டுறிங்க அண்ணி ? "

" உங்க அண்ணனை நான் திட்டல தம்பி .. அதுவும் உங்களை மீறி உங்க அண்ணாவை திட்ட முடியுமா ?" என்று  போலியாய் பயந்தார் அபிராமி ..

" சரி சொல்ல வந்ததை சொல்லுடா "- சூர்யா ..

" சொல்லுறேன் .. அதுக்கு முன்னாடி எல்லாரும் கெளம்புங்க .. நாம வெளில போகணும் "

" இந்த நேரத்துல எங்க அபி ? " என்று சூர்யா கேட்கும்போதே சந்துரு தனதறைக்கு தயாராக சென்றுவிட்டார் ... அவரை பின்தொடர்ந்து சிவகாமியும் செல்ல,

" பார்த்திங்களா? ரெண்டு பெரும் எப்படி சொன்னவுடன் செய்யுறாங்கன்னு...நீங்க மட்டும் ஏங்க ஆயிரம் கேள்விகள் கேட்குறிங்க ?"

அவரை பார்த்துக்கொண்டே இருந்தவர் , அபிராமியின் புருவமுடிச்சை மெதுவாய் தொட்டு " இதோ, நீ டென்ஷன் ஆகும்போது அழகா வளையுதே இந்த புருவம் அதை ரசிக்கத்தான் " என்றார்..

" பிள்ளை இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாடி கதையாகத்தான் இருக்கு ..போங்க போங்க " என்று அவர் அனுப்பிய அபிராமி, போனில் அந்த முக்கியாமான ரெண்டு  நபர்களிடம் பேசினார் ..

சிறிது நேரத்தில்,

" போலாமா ? " என்றபடி அங்கு வந்தனர் மூவரும் ..

அபிராமி, சந்துருவிடம் ஏதோ சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களின் கார் அர்ஜுனனின் வீட்டின் முன் நின்றது ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.