(Reading time: 51 - 102 minutes)

 

" டடே .. வா சிவா .. வாங்க வாங்க .. எப்படி இருக்கீங்க ? "

" நாங்க நல்லா இருக்கோம்.. நீ எப்படி இருக்க பானு ? "

" எனக்கென்ன சிவா? இப்போதான் சந்தோஷமா இருக்கேன் "

"  அந்த சந்தோஷத்தை அதிக படுத்த தான் வந்திருக்கோம் பானு" -சூர்யா

" அப்படியா அண்ணா ? " என்றவர் ஓரளவிற்கு அவர்கள் வந்த செய்தி புரிய மனநிறைவுடன் புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் .. பொதுப்படையான பேச்சுகளுக்கு பிறகு, அபிராமிதான் திருமண பேச்சை ஆரம்பித்தார்..

" கடவுள் ஆசியில நம்ம புள்ளைங்க எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சு பானு .. புள்ளைங்களா அவங்க அவங்களின் கடமையை சரியாத்தான் செய்திருக்காங்க "

" ஆமா அண்ணி "

" நல்லா படிச்சாங்க, இப்போ நல்ல வேளையில் இருக்காங்க, அது எல்லாத்தையும் விட நம்ம பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து யாரு மனசையும் கஷ்டப்படுத்தாம அவங்கவங்க ஜோடியை தேடிட்டாங்க .. இப்போ அவங்களை பெத்தவங்களா நாம அவங்களை அடுத்தகட்ட வாழ்க்கைக்கு கூட்டிட்டு  போகணும் இல்லையா ? "

" நிஜம்தான் அண்ணி ,... நானும் அதைதான் சொல்ல வந்தேன் .. ஆனா ? "

"... "

" எதுவா இருந்தாலும் சொல்லும்மா " என்றார் சந்திரப்ரகாஷ் ... ( பானு மற்றும் சூர்யா , சந்துரு எல்லாரும் இந்த சில மாதங்களில் அண்ணா - தங்கைன்னு கூப்பிடனும் அளவிற்கு பழகி இருந்தாங்க ... இதை நான் ஏன் சொல்றேன்னா ..... சொல்லுனும்னு தோணிச்சு ஹஹஹஹா.. இந்த இடத்துல இப்படி ஒரு காமிடி தேவை இல்லை என்பதினால நாம பானு என்ன சொல்றாங்க கேட்போம்  )

" நம்ம பசங்க மனசா விரும்பிட்டாங்க அண்ணா.. அதுனால இதுக்கு மேல ஜாதகம் பார்க்கனுமான்னு தயக்கமா இருக்கு .. எந்த பிரச்சனையும் இல்லனா சரிதான் .. ஆனா இருக்குனா தேவ இல்லாத மனக்கஷ்டம் தானே .... இது ஜானுவுக்காகன்னு சொல்லலன்னா , எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன் "

அவர் சொன்ன விதத்தில் அனைவருமே அவரின் முகத்தையே பார்த்தனர் ..

" ஏதும் தப்பா சொல்லிட்டேனா? "

" அடடே ... இல்ல பானு ... நாங்களும் அதைதான் நெனச்சோம் ..ஆனா உன் விருப்பம் தெரியாமல் எப்படி முடிவெடுககுறதுன்னு யோசிச்சோம் ... ஆனா நீயும் எங்களை மாதிரிதான் யோசிச்சிருக்க .. ரொம்ப சந்தோஷம்மா " என்றார் சூர்யா உண்மையான மகிழ்வுடன் ..

" உங்க எல்லாருக்கும் நான் இன்னொரு விஷயமும் சொல்லணும் " என்று பீடிகை போட்டார் அபிராமி ..

" சொல்லுங்க அண்ணி "  - பானு

" எங்க மாமா அத்தை ரெண்டு பேரும் ஊருல இருக்காங்க பானு .. அவங்களுக்கு சிட்டி லைப் ல உடன்பாடு இல்ல .. இயற்கையோடு வாழும் வரத்தை அவங்க இழக்க விரும்பல .. அதுனால நாங்களும் அவங்களை சென்னை வர்றதுக்கு வற்புறுத்தல .. அவங்க சுபா, ரகு கிருஷ்ணாவை எல்லாம் பார்த்தே ரொம்ப நாளாகுது .. இவங்க மூணு பேரின் கல்யாணம் அத்தை மாமா முன்னாடி நடந்தா நல்ல இருக்கும்னு எனக்கு தோணுது " என்று தெளிவாய் எடுத்துரைத்தவர் அனைவரின் முகத்தையும் பார்த்தார் ...

தன் பெற்றோரின்  உணர்வுகளை சீர்தூக்கி பார்க்கும் மனைவியை ஆசையாய் பார்த்தார் சூர்யா.. அவரின் மனகண்ணில், அவர்கள் திருமணம் ஆனா புதிதில் வீட்டில் நடந்தவை அனைத்தும் கண்ணில் நின்றன .. அது கிராம வாழ்கை என்பதால், சூர்யா அதிரடியாய் தன் மனதை சொல்லி திருமணம் செய்து கொண்ட பேச்சு எளிதில் முடியவில்லை .. அதனாலேயே 6 மாத காலம் அவரின் பெற்றோருமே  இரவரின் மீது கொஞ்சம் மனஸ்தாபத்தை சுமந்துதான் இருந்தனர் .. ஆனால் அந்த கசப்பான நாட்களுக்கு பிறகு  மாறிய அவர்களின் உறவுநிலை  தெவிட்டாத இன்பத்தை வாரி தந்தது.. அபிராமியை தங்கத்தட்டில் தாங்கினார் சூர்யாவின் தாயார் வள்ளியம்மாள்.  அபிராமியும் முதன்முதலில்  அவரை பிரியும்போது அழுத அழுகை இன்னமும் சூர்யாவால் மறக்க முடியாது ... அந்த அன்பின் ஆழம்குறையாமல்  இன்னும் தன் மனைவி இருப்பதை எண்ணி பூரித்து போனார் .. இருப்பினும்

" இதுல நம்ம சம்மதத்தை விட, நம்ம பசங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியனும்ல அபி .."

" என்னங்க ? "

" ஆமாடா ... நம்ம பசங்களுக்கு அவங்க கல்யாணத்தை பத்தி டிரிம்ஸ் இருக்கும் .. அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் வரணும்ல ? "

" ஏன் கிராமம் நா வர மாட்டாங்களா ? " என்று நேரடியாகவே கேட்டார் அபிராமி .. உடனே சந்துரு,

" அப்படி இல்ல அண்ணி .. அண்ணா  வேணாம்னு சொல்லியே .. பசங்களை ஒரு வார்த்தை கேட்போம்னு தான் சொல்றாரு .. "

" அப்போ உங்க எல்லாருக்கும் சம்மதமா ? "

" எங்களுக்கு சம்மதம்தான் அத்தை  " என்ற அர்ஜுனனின் குரல் கேட்ட திசையில்  ரகு, ஜானகி, சுபி அர்ஜுன் நால்வரும் நின்றிருந்தனர்..

சுபத்ராவோ பானுவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு  அபிராமியின் கழுத்தை கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.. ஜானகியும் பெரியவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு சிவகாமியின் அருகில்  அமர்ந்தாள்..ஆண்கள் இருவரும் அங்கே நடக்கும் அன்பு பரிமாற்றங்களை ரசித்தபடி வந்தனர் ..

அர்ஜுனை வாஞ்சையுடன் தன் தாயை அணைத்தபடி அமர்ந்தான் ..

" என்னம்மா உங்களுக்கு சம்மதமா ? "

" என்னடா கண்ணா இப்படி கேட்டுட்ட எனக்கு சம்மதம் "

" உங்களுக்கு சம்மதமா மாப்பிளை ? " - சந்துரு

" கண்டிப்பா மாமா .. எங்க எல்லாருக்குமே ரொம்ப சிம்பலா கல்யாணம்  பண்ணிகத்தான் விருப்பம் .. அழகான கல்யாண வாழ்கை எப்படி ஆரம்பம் ஆகுது என்பதை விட அதை லைப் லாங் வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு மாமா .. இப்போலாம் அவ்வளோ செலவு பண்ணி கல்யாணம் பண்ணி 3 - 4 வருஷத்துலேயே அடிப்படை புரிந்துணர்வு இல்லன்னு பிரிஞ்சிடுறாங்க .. அதை எல்லாம் பார்த்து பார்த்தே புளிச்சு போச்சு ..அப்படியே பிரண்ட்ஸ் எல்லாரும் வர முடியாதுன்னா, இங்க வந்த பிறகு ஒரு ரிசப்ஷன் வெச்சுக்கலாமே  " என்று ஒரு தீர்வையும் சொன்னான் அர்ஜுனன் .

" ஆமா அப்பா ... அர்ஜுன் சரியாதான் சொல்லுறான் .. அதுவும் தாத்தா பாட்டி ஆசிர்வாதத்தோடு கல்யாணம் பண்ணிக்க கொடுத்து வெச்சுருக்கணும் .. அவங்களை விட வேற யாரு எங்களை மனசார வாழ்த்திட முடியும் .. கிருஷ்ணா அண்ணாவும் இதேதான் சொல்லுவாரு .. வேணும்னா உங்க திருப்திக்கு அவருக்கு போன் போட்டு கேட்டுகோங்க "

மனம் குளிர்ந்தனர் பெற்றோர் மூவரும் .. அதன் பிறகு கிருஷ்ணனிடமும் பேசிவிட்டு , தாத்தா  பாட்டியிடம் சொல்ல, நல்ல நாள் பார்ப்பதில் தொடங்கி அனைத்துமே பொறுப்பேற்று கொண்டனர் இருவரும் .. இப்படியாய் மொன்று வாரங்களுக்கு பிறகு, அங்கு செல்வதை முடிவெடுத்தனர் அனைவரும்.. இதற்கிடையில் ஒரு நாள்,

" பேபி யாரோ வந்திருக்காங்க போல .. நீங்க வரிங்களா " என்றபடி அந்த  சோபாவில் இருந்து எழுவதற்கு சிரமப்பட்டாள் சுஜாதா ...

" ஹே இருடா .. நான் வரேன் " என்ற ரவிராஜ், அவள் எழுவதற்கு உதவிவிட்டு, கதவை திறக்க

" ஹாய் ......சர்ப்ரைஸ் " என்று ஒரே கோரசாக பேசியது வேற யாரும் இல்ல நம்ம ரகு, ஜானு மற்றும் நம்ம பஞ்ச பாண்டவர் அணிதான் ...!

" ஹே வாங்க வாங்க ... கல்யாண மாப்பிளை .. எம் டீ  மேடம் அண்ட் தி டீம் லீடர்ஸ் " என்று வரவேற்றான் ரவிராஜ்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.