(Reading time: 51 - 102 minutes)

 

" ண்ணா இதெப்படி உங்களுக்கு தெரியும் ? "

" இதெல்லாம் அநியாயம் ஜானு .. ஒரு ஆபீஸ் கே தெரிஞ்ச  விஷயம் உன் அண்ணாவுக்கு தெரியாதா ? " என்றாள் சுஜா...

" எப்டி இருக்கீங்க சுஜா .. .என்ன சொல்லுறார் என் மருமகன் ? "

" ம்ம் ஒழுங்கா அத்தையை உங்களை பார்த்து அண்ணின்னு கூப்பிட சொல்லுங்கம்மா நு சொல்றாங்க " என்றாள் சுஜாதா ..

" அடடே .. இதை நீங்களே நேரடிய கேட்கலாமே அண்ணி " என்று அவள் கணத்தில் முத்தமிட்டாள் ஜானகி .. உடனே மது,

" ஐயோ ஜானகி எதுவா இருந்தாலும் தனியா கொடுக்கலாம்ல.. பாருங்க ரவி சாரும்  பாஸ் உம் பொறாமையா பார்க்குறாங்க " என்றாள்...

" ஹே வாலு வந்ததுமே  ஆரம்பிச்சுட்டியா ? " என்ற ரவிராஜ்

" நீயாச்சும் கொஞ்சம் கேளு நண்பா " - ரகு

" ஆ .. அப்படிலாம் நீங்க எஸ்கேப் ஆகிட முடியாது பாஸ் "

" ஐயோ கீர்த்தானா நீங்க ரொம்ப சைலண்ட் டைப் நு நெனச்சேன் ...கடைசியில நீங்களும் இப்படிதானா ? "

" இதுக்கே இப்படியா .. இன்னும் நிறைய இருக்கு பாஸ்.. முதலில் உங்க காதல் கதையை இன்னைக்கு நீங்க சொல்லியே ஆகணும் " - ப்ரியா

" ஓ சொல்லிட்ட போச்சு பிரியா .. பட் பதிலுக்கு உங்ககிட்ட இருந்து கதை கிடைக்குமா ? " - ஜானகி

" அச்சோ அவசரபட்டு கேட்டுடாதிங்க ஜானு .. அப்பறம் இன்னைக்கு புல்லா ப்ரியாவின் காதல் காவியத்தை தான் கேட்கணும் "

" அடிப்பாவி மீனு .. எத்தனை நைட் நீ எனக்கு போன் பண்ணி எங்க கதையா கேட்டுருக்க "

" அதன் ரகசியம் எனக்கு தெரியும் "

" என்ன ரகசியம் மலர் ? "

" அதுவா ?? சொல்லிடவா மீனு ?? "

" இதென்ன கேள்வி மலர்? நாமல்லாம் ஒன்னு கூடியபிறகு  ரகசியமாவது  ஒன்னாவது " - மது ...

" அதானே, மலரே பொறுத்தது போதும் பொங்கி எழு "

" அதாவது ப்ரியா, நம்ம மீனுவுக்கு நைட்ல டக்குனு தூக்கம் வராது .... ஆபீஸ் வந்தா நம்ம பாஸ் வர்றதுக்கு முன்னாடி ஒரு குட்டி தூக்கம் போடலாம் " என்றவள் குறும்பாய் ரகுராமை பார்க்க

" இந்த வேலைய எப்போடா  பார்த்திங்க ? " என்று நம்ம வைகைப்புயல் சொல்ற மாதிரி ஒரு முகபாவனையை காட்டினான் ..

" ம்ம்ம்ம் அதனால தூக்கம் வாராத போதெல்லாம் மீனா உனக்கு போன் பண்ணி உன் கதையை கேட்டு பாதியில் தூங்கிடுவா ப்ரியா " என்று உண்மையை சொன்னாள் மலர் ..

" அடிப்பாவி " என்று பிரியா மீனாவை அடிக்க கண் கலங்கினாள் சுஜாதா ..

" எவ்ளோ நாளாச்சு உங்க கூடலாம் பேசி .. ரொம்ப மிஸ் பண்றேன் .. " என்றாள்..அவள் சொன்னவிதத்தில் பெண்கள் அனைவரும் அவளை கட்டிகொண்டனர் ..

" அச்சோ என்ன சுஜா இதுக்கு போயி ? "

" ம்ம்ம் நு ஒரு வார்த்தை சொல்லு கட்டின புடவையோடு உன் வீட்டுக்கு வந்திடுறேன் "

" ஆனா நீ பாயாசம்  மட்டும் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணு "

என்றபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் பேசி அவளை சிறக்க வைத்தனர் ..

" மது எங்க அது ? " - ஜானகி ...

" இதோ " என்ற மது அந்த பெட்டியில் இருந்த அழகான கண்ணாடி வளையல்களை எடுத்தாள்.....

" ஹே என்ன இதெல்லாம் " - சுஜாதா

" இது எங்க அத்தைமார்களின் அன்பு பரிசு " என்றபடி  அனைவரும் அவளுக்கு மாட்டி விட்டனர் ...

இன்ப அதிர்ச்சியில் கண்கள் பனிக்க அமர்ந்திருந்தான்  ரவிராஜ் .. சுஜாதாவும் அதே நேரம் அவனை பார்த்தாள்..ரகுராமின் கண்கள் தன்னிச்சையாகவே ஜானகியின் மேல் மொய்க்க, நம்ம பஞ்ச பாண்டவர்கள் சும்மா விட்டுடுவாங்களா ?

அதன்பின் பெண்கள் அனைவரும் சுஜாதாவுக்காக ஆடல் பாடல் என்று ஒரு குட்டி சீமந்தமெ நடத்த்திட்டாங்கன்னு சொல்லலாம் .. முக்கியமான சில பெர்பார்மன்ஸ் மட்டும் சொல்லுறேன்..

நம்ம கீர்த்தனாவும் மலரும் " அத்தை மடி மெத்தையடி" பாடல் பாடினார்கள் ... அதன் பிறகு ப்ரியா " என்ன தவம் செய்தனை " என்ற பாடலை தன் இனிய குரலால் பாடினாள்..மீனா  " அலைபாயுதே கண்ணா " பாடலை பாடினாள்...

அப்போத்தான் " மது எங்க ? " என கேட்டாள் சுஜாதா..எல்லோரும் அப்போத்தான் " மது ..மது " என அவளை தேட .. அங்கு வந்து நின்றாள் மது .. அவள் இருந்த கோலத்தை பார்த்து அனைவருமே விழி விரிய பார்த்துவிட்டு சட்டென சிரித்தனர். வயிற்றில் தலையணை வைத்துகொண்டு கர்ப்பிணி பெண்போல வந்து நின்றாள் மது...

1...2...3... ஸ்டார்ட் மியுசிக் எனவும் கீர்த்தனா அந்த பாடலை போட , அந்த பாடலுக்கு ஆடி சுஜாதாவையும் எழுப்பி ஆட வைத்தாள் ... அதென்ன பாட்டு கேக்குறிங்களா ? எல்லாம் நம்ம பாட்டுதான் ..

"ஜூன் ஜூலை மாசத்தில் ரோஜா பூவின் வாசத்தில் "

அதை தொடர்ந்து

" அடி ராக்கு முத்து ராக்கு" நம்ம எஜமான் பாட்டு , அதன் பிறகு எல்லோரும் சேர்ந்து " லுங்கி டான்ஸ் " பாட்டுக்கு ஆட அன்றைய நாள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சென்றது ... மாலை நேரம் , அங்கிருந்து அனைவரும் புறப்படும் முன்பு அனைவரும் சேர்த்து நிற்க வைத்து திருஷ்டி சுத்தினான் ரகுராம் ..

" உங்களுக்கு இதெல்லாம் எப்டி தெரியும் பாஸ் ? " - கீர்த்தானா

" எங்க வீட்டு குரங்கு குட்டி எதுலயாவது ஜெயிச்சிட்டு வந்த எங்கம்மா இப்படி சுத்தி போடுவாங்க" என்றான் ..உடனே ஜானு

" சுபி ஒன்னும் குரங்கு இல்லை "

" அடடா .. .போச்சுட... ஆரம்பிக்காதே ஜானு " என்று கண்ணடித்தவன்

அந்த சந்தோஷமான செய்தியை அனைவரிடமும் சொன்னான்...

அவர்களின் திருமணம் கிராமத்தில் நடக்கவிருப்பதாக சொன்னதுமே

" வாவ் அப்போ நாங்க வரோம்" என்று ஒரே நேரத்தில் ஐவரும் கூறினர்..சுஜாதா மட்டும் ஏக்கமாய் பார்க்க

" சுஜா உங்களுக்காகவே சென்னை வந்ததும் ஒரு ரிசப்ஷன் வைக்கிறோம் " என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான் ரகுராம்..

இப்படியாய் மூன்று வாரம் சிட்டாக பறந்துவிட நம் காதல் கிளிகள் படபடப்புடன் காத்திருந்த அந்த நாட்களும் இதோ நாங்க வந்துட்டோம் என்று வந்தே விட்டது ... ( எதுக்கு கிராமம் நு கேட்டிங்களே .. இப்போ  பதில் கிடைச்சதா ? )

அந்த கார் பயணம் அனைவருக்கும் மிக இனிமையாய் அமைந்தது .. அந்த காலத்தில் சூர்யா, சந்துரு காதலிச்ச கதை எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் ரகுராம் ஓட்டிவந்த கார் அந்த கிராமம் சேரும் நேரம் பஞ்சர் ஆகிவிட்டது .. முதலில் சந்தோஷத்தில் துள்ளியது சுபத்ரா தான் ....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.