(Reading time: 17 - 33 minutes)

 

றுநாள் காலை விடிந்திருந்து. இரண்டு நாட்களாகவே விஷ்வாவின் மனமும் ஒரு நிலையில் இல்லை.

அன்று அலுவலகத்தில் இந்து பேசிய வார்த்தைகள் அவனை குலுக்கிதான் போட்டிருந்தன. இந்து  அப்படி சொல்வாள் என அவனுமே எதிர்ப்பார்க்கவில்லைதான்.

பரத் அங்கிருந்து நகர்ந்து சென்ற பிறகு தோற்றுப்போனவளாகத்தான் நின்றிருந்தாள் அவள்.

அதன் பிறகு சில நிமிடங்கள் அப்படியே நின்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து  'நான் கிளம்பறேன் விஷ்வா. வீட்டுக்கு போயிட்டு உன்கிட்டே எப்போ பேச முடியும்னு தெரியலை. நீயா எனக்கு போன் பண்ணாதே. டைம் கிடைக்கும் போது நான் பேசறேன். டேக் கேர் விஷ்வா' சொல்லிவிட்டு போனவள்தான் அதன் பிறகு பேசவில்லை..

நேற்று இரவு ஏதேதோ கெட்டக்கனவுகள் அவனுக்கு. பொதுவாக இதையெல்லாம் நம்புவதே இல்லை அவன். இருந்தாலும் கனவில் வந்தது இந்து என்பதால் மனம் ஏனோ நிலைக்கொள்ளாமல் தவித்தது. ஒரு முறை அவளிடம் பேசலாமா யோசித்துக்கொண்டே இருந்தான் அவன்.

அதே நேரத்தில் தனது  வீட்டு சமையல் அறையில் நின்றிருந்தாள் இந்துஜா. என்றும் இல்லாத திருநாளாய் அன்று புடவை கட்டியிருந்தாள் அவள். எப்போதும் சமையல் செய்யும் தியாகராஜன் அன்று வரவில்லை. மனம் அண்ணனையே சுற்றிக்கொண்டிருக்க, ஏதோதோ ஞாபகத்தில் தனது சேலை முந்தானையின் துணையுடன் அடுப்பில் இருந்த பாத்திரத்தை இறக்க, சட்டென தீப்பிடித்துக்கொண்டது அவள் முந்தானை. அதையும் கவனிக்கவில்லை அவள்.

நல்லவேளையாக அங்கே வந்த பரத்தின் கண்களில் பட்டது அந்த விபரீதம். அடுத்த நொடி அங்கே பாய்ந்து, அந்த தீயை கையால் அணைக்க முயன்று தோற்று, அங்கே இருந்த தண்ணீரை எடுத்து அவள் மீது ஊற்றி  ஒரு பிரளயம் நிகழந்து முடிந்தது அங்கே. மறுபடி அமைதி திரும்ப சில நிமிடங்கள் பிடித்தது.

எந்த காயமும் இல்லாமல் தப்பித்திருந்தாள் இந்து. பரத்தின் கையில் கொஞ்சம் தீக்காயம் ஆகி இருக்க அவன் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் இந்துஜா.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்தது எல்லாம் மறந்து விட்டதைப்போல் அவள் தலையை வருடிக்கொடுத்தப்படியே சொன்னான் பரத் 'ஒண்ணுமில்லைடா செல்லம். எல்லாம் சரியாயிடுச்சு.

அவனுக்கு அவள் மீதிருந்த கோபம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது.

அவன் காயத்தை கழுவி அதில் இந்து மருந்து போட்டுக்கொண்டிருந்த வேளையில் சரியாய் அழைத்தான் விஷ்வா.

கைப்பேசியை எடுத்துப்பார்த்தாள் இந்து. ஒரு நொடி யோசித்தவள் அழைப்பை துண்டித்து விட்டு கைப்பேசியை கீழே வைத்தாள்.

மறுபடி அழைப்பு. இப்போது எந்த பிரச்னையும் வேண்டாம் என்று தோன்ற, கைப்பேசியை அணைத்து விட்டிருந்தாள் இந்து.

தியம் உணவு இடைவேளையின் போது அபர்ணா பரத்தை அழைத்தாள்.

'என்னாச்சுப்பா ஏன்? காலேஜ் வரலை.

கொஞ்சம் உடம்பு சரியில்லை. ரெண்டு நாளிலே வரேன்.

அவன் சொன்ன பதிலில் அவளுக்கு ஏனோ திருப்தி இல்லை. அடுத்த சில நிமிடங்களில் அவன் வீட்டு வாசலில் இருந்தாள் அபர்ணா.

சோபாவில் அமர்ந்து டிவியை திருப்பிக்கொண்டிருந்தான் பரத். அவளை பார்த்தும் ஆச்சரியம் கலந்த புன்னகையுடன் வரவேற்றான்.

புன்னகையுடன் அவன் அருகில் வந்தவள் அவன் கையில் இருந்த காயத்தை பார்த்து  திடுக்கிட்டுப்போன வேளையில் சிரித்தபடியே  வந்தார் தாத்தா.

வாம்மா... எப்படி இருக்கே.?

என்ன தாத்தா இது?  என்றாள் அபர்ணா. எப்படி ஆச்சு?

'அது ஒரு பெரிய கதை. 'ரெண்டு நாளா அண்ணனுக்கும், தங்கைக்கும் சண்டை. ரெண்டு பேரும் பேசிக்கவேயில்லை. என்னன்னு கேட்டா ரெண்டு பேரும் சொல்லவேயில்லை. இன்னைக்கு காலையிலே எழுந்து ரெண்டு பேரும் ஏதோ டிராமா பண்ணி, சீன்னெல்லாம் போட்டு, பழம் விட்டுட்டாங்க அவ்வளவுதான் ' சிரித்தார்  அவர்.

அய்யோ... தாத்தா இதெல்லாம் டூ மச். என்றான் பரத்

என்னடா? டூ மச். இந்த வாந்தி எடுத்தா கையிலே பிடிக்கறது, நெருப்பை கையாலே அணைக்கறது இந்த மாதிரி செண்டிமெண்ட் சீனுக்கெல்லாம் நாங்க மயங்க மாட்டோம் என்றார் அவர்.

மெல்ல சிரித்தபடியே கேட்டாள் அவள் சாப்பிடீங்களா பரத்.?

'என்ன கேளுமா முதல்லே. அண்ணனும் தங்கையும் சேர்ந்து நல்லா சாப்பிட்டாங்க. தங்கச்சி அண்ணனுக்கு ஊட்ட, அண்ணன் தங்கச்சிக்கு ஊட்ட ஒரே பாசப்போராட்டம் நம்மாலே முடியலை. கடைசியிலே என்னை யாரும் கவனிக்கலை. என்ன செய்ய.? நானே போட்டு சாப்பிட்டேன்.'

எங்கே தாத்தா உங்க பேத்தி? நான் அவங்களை பார்க்கணுமே. கேட்டாள் அபர்ணா.

இப்போதான் கடைக்கு போனாள் வந்திடுவா.

ஒவ்வவொரு தடவையும் நான் அவங்களை பார்க்கவே முடியறதில்லை. இன்னைக்கு பார்த்திட்டு போறேன்' காத்திருந்தாள் அபர்ணா .வரவில்லை இந்து. கடைசியில் கல்லூரிக்கு நேரமாகிவிட அவளை பார்க்காமலே கிளம்பி விட்டிருந்தாள் அபர்ணா.

ங்கே தனது அலுவலகத்தில் தவித்துக்கொண்டிருந்தான் விஷ்வா. இந்துவை தொடர்ப்புக்கொள்ளவே முடியவில்லை.

எங்கேயோ தேடிப்பிடித்து அவளது அலுவலக எண்ணை தொடர்ப்பு கொண்ட போது அவனுக்கு கிடைத்த தகவலில் ஆடிப்போனான் விஷ்வா. '

அவங்களுக்கு சின்ன fire accident. அதனாலே இன்னைக்கு லீவ் என்றார்கள் அவளது அலுவலகத்தில்.

fire accidentஆ என்னவாயிற்று அவளுக்கு? எப்படி நிகழந்தது.? வீட்டில் ஏதாவது பிரச்சனையா? தப்பாய் ஏதாவது யோசித்துவிட்டாளா? ஏதேதோ யோசித்தது மனம்.

பைத்தியம் பிடித்தவனைப்போல் அமர்ந்திருந்தான் அவன். என்ன செய்வது இப்போது.? வீட்டுக்கு போய் அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா?

யோசித்து யோசித்து பார்த்தவனின் மனதில் வந்து நின்றாள் அபர்ணா.

அவள் கல்லூரி முடியும் நேரத்தில் அழைத்தான் விஷ்வா. கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வரியா அப்பூ. நாம் வந்திடறேன் இப்போ.

அடுத்த சில நிமிடங்களில் அவன் முன்னால் இருந்தாள் அபர்ணா.

எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியாடா? அவன் இதுவரை உதவி என்று அவளிடம் பெரிதாக எதுவுமே கேட்டதில்லை.

சொல்லு விஷ்வா..

என் மாமா பொண்ணுக்கு fire accidentஆம். என்னாச்சுன்னு தெரியலைடா என்னாலே அங்கே போய் பார்க்க முடியாது. நீ போய் கொஞ்சம் பார்த்திட்டு வரியா? அவ நல்லா இருக்கான்னு  தெரிஞ்சா போதும் எனக்கு. வேறே எதுவும் வேண்டாம்.

அவன் முகத்தில் இருந்த பதட்டமும், கவலையும் அவளை என்னமோ செய்தது.

சரி. சரி. ஒண்ணும் ஆகியிருக்காது பதறாதே. நான் போய் பார்த்திட்டு சொல்றேன். ஆமாம் எங்கே இருக்கு உங்க மாமா வீடு?

பெசன்ட் நகர்லே...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.