(Reading time: 47 - 93 minutes)

 

ண்ணிமார்கள் ஆடுவதை ஆசையாய் பார்பதா... இல்லை அதில் இருக்கும் அர்த்தம் கண்டு கன்னம் சிவப்பதா என்றே புரியாமல் பெண்கள் இருவரும் நெளிய, ஆண்களுக்கு அந்த வெட்கமும் பருக தேவிட்டாததாக இருந்தது... அருகில் மீண்டும் வருவார்கள் என்று பார்த்தால் அருகில் இருந்த அண்ணன்களும் காணாமல் போனனர்.

“கோகுலத்து ராதை வந்தாளோ இந்த கல்யாண தேரிலே...

விதிலி நகர் சீதை வந்தாளோ எங்கள் வீட்டோடு வாழவே..

அந்த தென் மதுரை மீனாள் விளகேற்ற வந்தாள்

சீதனமாய் கையில் தாய் பாசம் கொண்டு வந்தாள்..

...

பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க

பெருசா வீடு ஒன்னு கட்டுங்க...

தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க

இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க...

....

தஞ்சாவூர் பொம்மை போலதான் உங்க மாப்பிள்ளைதான் தலையாட்டுவார்...

ஆமா தலையாட்டுவார்..

தேசிங்கு ராஜன் எங்கண்ணே ஹே உங்க குதிர வாழாட்டுமா...

ஆமா வாழாட்டுமா..

ஹே பக்குவமா எங்க பொண்ணு செய்வாளே தந்திரம்

சிங்கத்தை கட்டிபோடும் தலகாணி மந்திரம்..

போட்டியெல்லாம் போட்டுபார்த்தோடி அது நமக்குள்ளதானடி..

ஜோடியத்தான் நல்லா பாருடி மதுரை மீனாச்சி சொக்கண்டி...”

அண்ணன் அண்ணிகள் எல்லாம் இப்படி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்காது அசந்து போனனர் மணமக்கள், அவர்கள் மட்டுமா வீட்டு பெரியவர்களும் தான்.. வரும் பாடல்களுக்கும் அவர்கள் ஆடுவதற்கும் அங்கு அமர முடியாமல் ரசித்து தாளம் போட்டு கொண்டு இருந்தனர் மணமக்கள்.

அனைத்து பாடல்களையும் கேட்டும் பார்த்தும் ரசித்த சொந்தங்கள் கைதட்ட அடுத்து அறிவிப்பை நவீன் தந்தான். “சரி... இவ்வளவு நேரம் நாங்க ஆடினதை பார்த்திங்க, ஒரே ஆளே ஆடினால் போர் அடிக்காதா... அதான் ரெண்டாவது பாதியை பூர்த்தி பண்ண மணமக்களே கொஞ்சம் பாடி ஆட போறாங்க” என்று கூறி கை நீட்டி அழைக்க, இது ஏதுடா ஒண்ணுமே சொல்லாமல் அழைக்கின்றனரே என்று கொஞ்சம் திரு திருவென முழித்து வேண்டாம் என்று கெஞ்சி பார்த்து வேறு வழியே இல்லாமல் அவர்களை கீழே இறக்கிவிடவும்... சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றனர்.

“ஆத்தி என நீ பார்த்த உடனே

காற்றில் வைத்த இறகானே...” என்று அஸ்வத் பாட துவங்க கூடியிருந்த தோழர்கள் எல்லாம் ஓ.... என்று கத்தி உற்சாகம் ஊட்ட, கண்ணில் காதல் சிந்தியவனின் கண்ணில் கரைய துவங்கினாள் அனு...

“காட்டு மரமா வளந்த இவனும்

ஏத்தி வச்ச மெழுகானே...” என்று அஸ்வத் அனுவை பார்த்து பாடி முடிக்க, அடுத்த வரியை நிரஞ்ஜன் தொடர்ந்தான்.

“கோரபுள் ஒர்நொடியில் வானவில்ல திருச்சாயே

பாரகல்ல மறுநொடியில் ஈரமண்ண குளச்சாயே...

ஊர அழகி உலக அழகி யாரும் இல்ல உனப்போல..

வாடி நெருங்கி பாப்போம் பழகி...”

அவன் முடிக்க அடுத்து அஸ்வத்தின் முறை ஆனது...

“ஜாடையில தேவதையா நெஞ்சில் இரு அழகாக..

பார்வையில வாசனைய தூவிடுற வசமாக..

ஊர அழகி உலக அழகி யாரும் இல்ல உனப்போல..

வாடி நெருங்கி பாப்போம் பழகி...”

இருவரும் மாற்றி மாற்றி பாடி அவர்களின் ஜோடிகளை கை நீட்டி உருகி பாட, ஒரு காதல் மழையே பொழிந்தது... அதில் நனைந்த தேவதைகளுக்கு தான் அடுத்து என்ன பாடுவது என்று புரியவில்லை...

சிறிது கிசுகிசுத்து கொண்ட தோழிகள் இருவரும் அணிந்திருந்த லெஹங்கா அழகாக விரிய அடுத்து துவங்கினர்...

“நெஞ்சுக்குள்ள... உம்ம முடிஞ்சிருக்கே...

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கே...

இங்கே எத்தி செய்ய என்பொழப்பு விடிஞ்சிருக்கோ...

வெள்ள பார்வ வீசி வெட்டிமுன்னாடி...

இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி...”

என்று தேஜு பாடி முடிக்க, அதை தொடர்ந்து அனு பாடினாள்...

“நீர் போனபின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே

நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழ்ந்திருச்சே...

அப்போ நிமிந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே...

கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே...

நெஞ்சுக்குள்ள... உம்ம முடிஞ்சிருக்கே...”

அழகாய் இதமான சங்கீதத்திற்கு ஏற்ற நடனத்தோடு ஆட, மயங்கி போனனர் ஆண்கள்.. அடுத்து அவர்களின் சுற்று...

அதிகாலை பூக்கள் உனை பார்க்க எங்கும்..

அந்திமாலை மேகம் உனை பார்த்தே தூங்கும்...

உன் கண்கள் தானே விண்மீன்கள் தேடும்...

உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா...

கனவுகள் தருகிறாய், கவிதைகள் தருகிறாய்..

உறவுகள் தருகிறாய் உறவிலே...

என்று இருவரும் ஒரு சேர அவரவர் மனைவி ஆக போகும் காதலிகளை பார்த்து பாடி முடித்தனர். அடுத்து பெண்களின் முறை...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.