(Reading time: 7 - 14 minutes)

னது அறைக்கு வந்த ஆரபி அப்போது தான் க்ரிசிடம் இருந்து வந்த மெசெயை பார்த்தாள். அவள் உதடுகளில் தானாக ஒரு புன்னகை வந்து குடி கொண்டது. அவனுக்கு அதற்கேற்ற பதிலை அனுப்பி விட்டு மீண்டும் அவனது எஸ். எம் எஸ்ஸை படித்தால்.

"ஹாய் டார்லிங் நீ நல்லபடியா வீட்டுக்குள்ள போய் சேர்ந்திட்டியா? ஒரு பிரச்சனையும் இல்லயேடா?" என்று அவனனுப்பிய குறுஞ் செய்தியில் அவன் தன்மீது கொண்ட அபரிமிதமான காதலும் அக்கறையையும் உணர்ந்தால் ஆரபி.

ழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆரபியின் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்று கொடுத்து விட்டு ஹப்பி பர்த்டே ஆரபி என்று வாழ்த்தையும் தெரிவித்து விட்டு யாதவின் பின்னால் சென்று மறைந்து நின்றாள் வர்ஷிகா.

"ம்.... " என்று முனகியபடியே தனது ஈரக்கன்னத்தை துடைத்தபடியே கண்களை விரித்து பார்த்தாள் ஆரபி அவள் முன்னாள் யாதவ் கதவின் நிலைப்படியில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து குறும் சிரிப்போடு நின்றிருந்தான்.

" மகாராணியாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்." என்று சொல்லி அவளிடம் ஒரு பரிசுப் பொருளை நீட்டினான் . அதே சிரிப்போடு.

"தாங்க்யூ யாது அத்தான். .... ஆமா என்னோடவர்ஷு குட்டி எங்க ஆளக்காணோம்." என்றாள் வேண்டும் என்றே

"உன்னோட வர்ஷு குத்தி இங்க இதுக்கா" என்று மழலை மொழியில் பேசி சிரித்துக் கொண்டே யாதவின் பின்னாலிருந்து வந்தாள். அவளின் உயிரான வர்ஷினி.

(நீங்க கிசிகிசுக்கிறது எனக்கு கேட்கிறது என்னடா இவ க்ருஷை விட்டிட்டு வர்ஷினியை உயிர் என்று சொல்றாளே என்று! ஆருவுக்கு இரண்டு பேருமே உயிர் தான் அனால் வர்ஷு மேல கொஞ்சம் பாசம் ஜாஸ்தி தான் ஸ்....... இத க்ரிஷ் கிட்ட சொல்லாதீங்க கொஞ்சம் பொறாமைப்படுவார்.)

"என்னோட தங்கம் " என்று சொல்லி அவளை வாரி அனைத்து முத்தமிடாள். ஆரபி.

அதே சமயம் அவளது க்ரிஷின் கார் கொழும்பிலுள்ள தனது மிகப் பிரமாண்டமான மாளிகையின் முன்னாள் சென்று நின்றது

காரின் காரன் சத்தத்தைக் கேட்டு அவனின் தாயார் ஆவலோடு வெளியே வந்து பார்த்தார்.

"ஹாய் அம்மா.. " என்றவாறே அவரது கழுத்தை இறுக்கி கன்னத்தில் முத்தமிட்டான் மகன் முராரி கிருஷ்ணன்.

"விடுடா எனக்கு கிஸ் பண்றதை விட்டிட்டு ஒரு கலியாணத்தை காலா காலத்தில செய்து கொண்டு உன் பொண்டாட்டிக்கு இதெல்லாம் கொடு என்று கூறிக் கொண்டே மகனை உள்ளே அழித்து சென்றார்.

அவன் மனக் கண்ணில் நள்ளிரவு தனது ஆருவுக்கு தான் கொடுத்த முத்தம் னியாநிவில் வந்து இம்சித்தது.

"என்னடா? நான் பாட்டுக்கு கேள்வி கேட்கிறேன் நீ பேசாமல் உன்பாட்டுக்கு சிரிக்கிறாய் ?"

"ஆங் எ... என்னம்மா கேட்டீங்க? நான் வேற ஏதோ நினைப்பில இருந்தேன்." என்றான் சற்று அசடு வழிந்தவாறே நல்ல வேலை அவனது அசடு வழிதலை தாயார் கவனிக்க வில்லை.

"ம்.... இன்னிக்கு கலையில கிளம்பி மதியம் தானே இங்க வந்து சேருவதை சொன்னாய் இப்ப என்னடான்னா திடீரென்று இப்பிடி காலையில வந்து நிக்கிறாய். "

"ஏம்மா சொன்ன டயத்துக்கு முன்னால வந்தால் அத நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?" என்று தாயிடம் வம்பிழுத்தான்.

"அதுக்கில்லடா எதுக்கு இப்பிடி இரவிரவா கண்முழிச்சு டிரைவ் பண்ணி அவளவு தூரம் வரணும் என்று தான். அப்பிடியே ஏளியா

வாரதாயிருந்தா நேரத்தோட கிளம்பி நேத்து இரவே இங்க வந்திருக்கலாமேடா ?" என்றார் தாயார் ஆதங்கத்துடன்.

"இலம்மா நேத்து நைட் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது (உங்க மருமகளோட) என்று மதுக்குள் சொல்லிக் கொண்டான். அதமுடிச்சிட்டு நேரே இங்க கிளம்பி வந்துட்டன் நானும் விடிந்ததும் புறப்படலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இப்ப உங்களோட இன்னும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் எல்லா அது தான். சரி என்கிட்ட கதை கேட்டது போதும் நான் குழிச்சிட்டு வாறன் எனக்கு ஆப்பாடு எடுத்து வைங்க! அப்பா எங்க ஆபீஸ் கிளம்பியாச்சா"

"ம்.... அவர் எப்பவோ போயாச்சு சரி நீ போய் குழிச்சிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறான்."

அவர்கள் வீட்டில் எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் முராரிக்கு அவன் அம்மா கையால் தான் சாப்பிட வேண்டும்.

"மெல்லியதாய் ஒரு பாடலி முனுமுத்தபடியே தனது ரூமுக்குள் செல்ல மாடிப் படிகளில் தாவித்தாவி ஈரிக்கொண்டிருந்தான் அப்போது அவனது செல் ஆசாகாய் செனுங்கியது

யாரென்று எடுத்து பார்த்தான் திரையில் ஆரு என்று ஒளிர்ந்தது. சரித்துக் கொண்டே அதனை தனது காதுக்கு பொருத்தினான்.

"ஹாய் ஆரு டியர்....... குட் மோர்னிங் "

கொஞ்சம் அஜஸ் பண்ணுங்க தோழர் தோழியரே இன்றைய அத்தியாயம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அடுத்த அத்தியாயம் கொஞ்சம் பெரிதாக தருகின்றேன் என்னை மன்னித்ததற்கு மிகவும் நன்றி

தொடரும்!

Episode # 05

Episode # 07

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.