(Reading time: 13 - 25 minutes)

மான்னா, ஹரி சொல்றா மாதிரி எல்லாத் தப்பும் உங்களாலன்னு நினைச்சு புலம்பறதை நிறுத்துங்கோ. பகவான் ஏதானும் ஒரு வழி காட்டுவார். நம்பிக்கையா இருக்கலாம். சரிடா நீ பார்த்துட்டு வா. நாம இந்த வாரத்துல இருந்து பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும். மொதல்ல கோவில்லப் போய் வச்சுட்டு மத்தவாளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். நீங்க வாங்கோ நாமப் போய் யார் யாருக்கெல்லாம் நேரப் போய் கொடுக்கணும்ன்னு ஒரு லிஸ்ட் போட்டுடலாம்.”, ஜானகி ராமனின் மனதை மாற்ற கல்யாண வேலையில் ஈடுபடுத்த, ஹரி கோபாலைக் காண கிளம்பிச் சென்றான்.

வாடா ஹரி எப்படி இருக்க? கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிண்டு இருக்கு?”, ஹரியை வரவேற்றார் கோபாலின் அன்னை பார்வதி.

“நன்னா இருக்கோம் மாமி. கல்யாண வேலை எல்லாம் ஜோரா நடந்துண்டு இருக்கு. நீங்க வெளில கிளம்பிண்டு இருக்கேளா. அண்ணா இல்லையா?”

“ஆமாம்டா, இவரோட ஒண்ணுவிட்ட மாமா பேரனுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம். அதுக்குதான் நானும் மாமாவும் போறோம். கோபாலும், ஹேமாவும் வரலைன்னு சொல்லிட்டா. ஹேமா கார்த்தாலயே கிளம்பி friend ஆத்துக்குப் போய்ட்டா. கோபால் உள்ளதான் இருக்கான். போய்ப் பாரு.”, என்றபடியே கிளம்பினார் பார்வதி.

இவர்கள் பேச்சுக் குரல் கேட்டு வெளியில் வந்த கோபால் ஹரியை வரவேற்று உள்ளறைக்கு அழைத்து வந்தான்.

“வாடா ஹரி. என் ப்ராஜெக்ட் ஹெட் நீ பதில் சொல்றதைப் பார்த்து பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகிட்டார். So எங்க ஆபீஸ்ல உனக்கு வேலை கண்டிப்பா கிடைச்சுடும். Infact உங்க காலேஜ் ப்ராஜெக்ட் முடிச்சக் கையோட நீ ஜாயின் பண்ணிக்கலாம். சோ இன்போஸிஸ் வேலை கிடைக்க லேட் ஆச்சுன்னா இங்க வந்துடு.”

“ஓ அப்படியா சந்தோஷம்ண்ணா. இன்போஸிஸ் selection மட்டும்தான் முடிஞ்சிருக்கு. Offer letter பத்தி எல்லாம் அவா ஒண்ணும் பேசலை. May be ரிசல்ட் வந்தப்பறம்தான் சொல்லுவாளோ என்னமோ. அங்க இருந்த வர்ற பதிலைப் பொறுத்து நான் உங்களுக்கு சொல்றேன்.”

“சரிடா, ஒண்ணும் அவசரம் இல்லை. மெதுவா சொல்லுப் போரும். இப்போதைக்கு உன் ப்ரொஜெக்ட்ல நிறைய concentrate பண்ணு. அப்பறம், கல்யாண வேலை எந்த அளவுல இருக்கு. நேத்து கௌரியை பஸ்ல பார்த்தேன். அவளைக் கேட்டா யாரமறியோம் பராபரமே அப்படிங்கறா. ஏதானும் உதவி வேணும்ன்னா சொல்லுடா, செய்யறேன். இப்போதைக்கு அடுத்த மாசம் வரைக்கும் ஃப்ரீயாதான் இருக்கேன்.   So anytime, any ஹெல்ப் நீ கேக்கலாம்.”

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. நீங்க சொன்னதே எனக்கு யானை பலம் வந்தா மாதிரிதான் இருக்கு. நான் உங்களை இப்போ பார்க்க வந்ததே முக்கியமா ஒரு பெரிய உதவி கேக்கத்தான். ஹேமா இப்போதைக்கு வர மாட்டா இல்லை.”

“என்னடா ஏதானும் சீரியஸ் மாட்டரா. எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்டா. கவலைப்படாம என்ன விஷயம்ன்னு சொல்லு.   ஹேமா எப்போ போனான்னு தெரியாது. நான் வெளில போயிட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் வந்தேன். ஆனா அவ friend ஆத்துக்குப் போய் இருக்கானா காலேஜ்ல இருக்கறவா மண்டை எல்லாம் உருட்டிட்டு கண்டிப்பா சாயங்காலம்தான் வருவா.   சோ நீ என்ன பேசணுமோ தயங்காமப் பேசு.”

“விஷயம் கொஞ்சம் சீரியஸ்தாண்ணா. கௌரி ஏன் உங்ககிட்ட அவளுக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னு சொன்னான்னா, அவளுக்குத் தெரியாம நாங்க வேலை செய்யறா மாதிரி வீட்டுல காமிச்சுண்டு இருக்கோம். ஆனால் நிஜத்துல இன்னும் ஒரு வேலைக் கூட ஆரம்பிக்கலை. சத்திரம் புக் பண்ணினதோட நிக்கறது.”

“என்னடா ஹரி சொல்ற. கல்யாணத்துக்கு இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட இல்லையேடா. எத்தனை வேலை இருக்கு. இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலைன்னு சொல்ற. என்ன ஆச்சு?”, என்று கோபால் பதற்றத்துடன் கேட்க, ஹரி சீட்டுக் கம்பெனியில் பணத்தைப் போட்டு ஏமாந்த விவரத்தைக் கூறினான்.

“கேக்கவே கஷ்ட்டமா இருக்குடா ஹரி. எல்லா விஷயத்தையும் ஒண்ணுக்கு நூறு வாட்டி யோசிச்சு செய்யற மாமா இப்படி பண்ணிட்டாரே. அந்தக் கம்பெனி நல்லாதானே போயிண்டு இருந்தது. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா எல்லா கஸ்ட்டமருக்கும் ஒழுங்கா பணத்தை ரிடர்ன் கொடுத்து இருக்கா. நமக்குப் பணம் வர்ற நேரம்தானா, அவனுக்கு இந்த குறுக்குப் புத்தி வரணும். சரி விடு, போனது போயாச்சு, இனிப் புலம்பி பிரயோஜனம் இல்லை. இப்போ எத்தனைப் பணம் தேவைப்படறது.”

“கல்யாணத்தை இழுத்துப் பிடிச்சு செய்யணும்ன்னாக்கூட இன்னும் ஒரு மூணுலேர்ந்து நாலு லட்சம் தேவைப்படறது.   அப்பா ஆபீஸ், பிரைவேட் அப்படிங்கறதால லோன் எதுவும் கிடையாதுன்னு சொல்லிட்டா. தெரிஞ்சவா எல்லாம் கை விரிச்சுட்டா. Infact பணம் தேவைப் படறதுன்னு தெரிஞ்ச உடனே, தெரிஞ்சவாக் கூட தெரியாதவாளா ஆகிட்டா. அதுதான் என்னப் பண்றதுன்னு தெரியாம உங்களுக்கு தெரிஞ்சவா யார்கிட்டயானும் கேக்க முடியுமான்னு வந்தேன்.”

“ஹ்ம்ம் நான் அந்த பிளாட் வாங்க முன்பணம் கொடுக்கலைன்னா உனக்கு உடனே தூக்கி கொடுத்திருப்பேன். பிரச்சனையே இருந்து இருக்காது. என்னால 1 லட்சம் வரை புரட்ட முடியும் ஹரி. அதுக்கு மேல ஒரு 3 லட்சம் வெளில கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கணும். ஒன்னும் கவலைப்படாதே. எனக்கு ஒரு வாரம் time கொடு. நான் எல்லா இடத்துலயும் try பண்ணிட்டு உனக்கு சொல்றேன். நம்பிக்கையோட இரு. கண்டிப்பா எங்கயானும் கிடைச்சுடும்.”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. நீங்க உங்களைக் கஷ்டப்படுத்திக்காதீங்கோ. மொத்தப் பணமுமே வெளில இருந்தே வாங்கிக் கொடுத்துடுங்கோ. இன்னும் ஒரு ஆறு மாசம்தான் கொஞ்சம் கஷ்டப்படணும். நான் வேலைல சேர்ந்துட்டேன்னா கஷ்டம் இல்லை சமாளிச்சுடலாம்.”

“இல்லடா எனக்கு கஷ்டம்லாம் ஒண்ணும் இல்லை. பிளாட் இப்போதைக்கு ரெடி ஆகாது. அதோட உள்வேலைகளுக்கு வேணும்ன்னுதான் அந்தப் பணத்தை வச்சிருந்தேன். அவன் கட்டற வேகத்தைப் பார்த்தா, என்கைல வீடு வந்து சேர 2 வருஷம் ஆகிடும்ன்னு நினைக்கிறேன். மாமா பணம் போனதால ரொம்ப இடிஞ்சு போயிட்டாராடா ஹரி.”

“ஹ்ம்ம் ஆமாம்ண்ணா. ரொம்ப வருத்தப்படறார். அதுவும் கௌரியைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வுல தவிக்க ஆரம்பிச்சுடறார். இதுல பணம் போட்டவாளைப் பத்தி தினம் ஒரு தகவல் வரது. அதுவேற மூட் upset ஆகிடறார். போன வாரம் அப்பாவோட வேலை செய்யற ராமு மாமா suicide அட்டெம்ப்ட் பண்ணிட்டார். அதுலேர்ந்து இன்னும் மோசம். ரெண்டு நாள் முன்னாடி அந்த சிட்ஃபன்ட்ல போட்ட பணம் சரியான நேரத்துல கிடைக்காம ஆபரேஷன் பண்ண முடியாமப் போய் ஒருத்தர் போயே சேர்ந்துட்டார். இப்படி ஒரு ஒரு விஷயமும் கேள்விப்படறப்போ அவர் தவிக்கறதைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. தினம் தினம் எத்தனை நியூஸ் வரது, இருந்தும் மூளை கெட்டுப் போய் அதுல விழுந்தேனேன்னு புலம்ப ஆரம்பிச்சுடறார். என்னதான் நானும், அம்மாவும் தைரியப்படுத்தினாலும் அதெல்லாம் கொஞ்ச நேரம்தான். மறுபடி அவரைக் கலங்கடிக்கன்னே ஏதோ விஷயம் தெரிய வரது.”, கோபால் கேட்டவுடன் தன் மன உணர்வுகளைக் கொட்ட ஆரம்பித்தான் ஹரி.

“ப்ச் பாவம்டா அவரும். முழுக்க அவர் பண்ணின தப்பாவே பார்க்கறார். அதுதான் இந்தக் குற்ற உணர்ச்சி.   இதுல இருந்து அவர் மீண்டு வரதுக்கு கொஞ்ச காலம் ஆகும். அந்தப் பணத்தைத் திரும்ப வாங்காம அவரால நிம்மதியா இருக்கவே முடியாது. ஆனால் இத்தனை விஷயமும் எப்படி கௌரிக்கு தெரியாம இருக்கு?”

“இல்லைண்ணா, அவ ப்ரொஜெக்ட்ல பயங்கர பிஸியா இருக்கா. கார்த்தாலப் போனா ராத்திரி வரதுக்கே நேரம் ஆயிடறது. அதுவும் தவிர அவகிட்ட சொன்னா முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்கோ. நீங்க இப்படி கஷ்டப்பட்டுண்டு இருக்கறச்ச எனக்கு வாறி இறைச்சு பண்ண வேண்டாம், அப்படின்னு ஆரம்பிப்பா. கௌரிக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளை ஆத்துல எல்லாருமே ரொம்ப நல்லவாளா இருக்கா. சொன்னா புரிஞ்சுப்பாதான். ஆனாலும் அவாளண்ட சொல்ல கஷ்டமா இருக்கு. நீங்க ஹேமாகிட்டகூட எதுவும் சொல்லாதீங்கோ. அவ தினம் கௌரியோட பேசிண்டு இருக்கா. ஏதானும் வாய் தவறி உளறிட்டா கஷ்டமாப் போய்டும்.”

“இல்லைடா நான் அப்பா, அம்மா, ஹேமா யார் கிட்டயும் சொல்லலை. சரி நான் இந்த வாரத்துக்குள்ள உனக்குப் பணம் கிடைக்கற விஷயத்தை சொல்லிடறேன். சரி வா அம்மா, பூரி பண்ணி வச்சிருக்கா. சாப்பிடலாம். “

“இல்லைண்ணா எனக்கு கொஞ்சம் வெளிலப் போற வேலை இருக்கு. சோ கிளம்பறேன். நீங்க கேட்டுப் பார்த்துட்டு போன் பண்ணுங்கோ.”

ஹரியை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த கோபால் மாடிப் படிகளில் இருந்து இறங்கிய ஹேமாவை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

 

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:780}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.