நேரம் மாலை ஆறு.
சூரியன் மெல்ல மெல்ல மறைய துவங்கி இருந்தான்.
சுருண்டு கிடந்த பூனை மெல்ல எழுந்து அமர்ந்தது.
கார் நகர்ந்துக்கொண்டிருந்தது. எங்கேயாவது நிறுத்தி ஒரு காபி குடிப்போமா? கேட்டான் அவன்.
அவள் தலையசைத்தாள்.
உனக்கு ஏதாவது gift வாங்கணுமே என்ன பிடிக்கும் உனக்கு?
இல்லை அதெல்லாம் வேண்டாம்.
ஹேய்.. ஏதாவது சட்டுன்னு சொல்லு, உடனே வாங்கிடுவோம். கமான்...கமான்...
சில நொடிகள் யோசித்தவள் 'எனக்கு பூ வாங்கி கொடுக்கறீங்களா? நான் பூவெச்சே ரொம்ப நாள் ஆச்சு'. மெல்ல கேட்டாள் அவள்.
கண்களை சுருக்கி, தலையாட்டி அவள் அழகாய் கேட்ட விதத்தில் மொத்தமாய் உருகித்தான் போனான் அவன். தன்னவள் கேட்ட முதல் பரிசு. அந்த நொடியிலேயே அதை வாங்கிக்கொடுத்து விட வேண்டும் என்று தோன்றியது. வாங்கிக்கொடுப்பது என்ன? பூ மழையிலேயே அவளை நனைய வைத்து விட வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.
சில அடிகள் சென்று காரை நிறுத்தினான். அங்கே இருந்த ஒரு கடையில் காபியை வாங்கி அருந்திவிட்டு அந்த கடைக்காரரிடமே கேட்டான் இங்கே பூ எங்கே கிடைக்கும்?
கேட்டுக்கொண்டவன், அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும். 'அவளை எங்கேயும் தனியா விடாதே'. தாத்தா சொன்ன வார்த்தைகளை மறந்து விட்டிருந்தான்.
'நீ காரிலேயே உட்கார்ந்து இரு நான் இப்போ வந்திடறேன்' கடைக்காரர் சொன்ன திசையில் நடந்தான் அவன்.
இருள் கொஞ்சம் கொஞ்சமாக படர துவங்கி இருந்தது. கார் சீட்டில் கண்கள் மூடி சாய்ந்திருந்தாள் அவள்.
சில நொடிகள் கழித்து அவளுக்கு அருகே ஒரு குரல் கேட்டது ' மாதும்...மா'
சட்டென கண் திறந்தாள் அவள். காருக்கு அருகில் கைகெட்டும் தூரத்தில் நின்றிருந்தவனின் முகத்தில் இதுவரை இருந்ததை விட அளவு கடந்த மகழ்ச்சி நிறைந்திருப்பதை போன்றே தோன்றியது அவளுக்கு.
'ஹேய்... பூ அங்கே கிடைக்காதாம். இந்த பக்கம் கடை இருக்கு. வா என் கூட போகலாம்' அவன் சொல்ல புன்னகையுடன் காரிலிருந்து இறங்கி அவன் பின்னால் நடந்தாள் அவள்.
அதே நேரத்தில் அங்கே பூக்கடையில் நின்றிருந்தான் முகுந்தன். சரியாக அந்த நொடியில் அழைத்தார் தாத்தா 'எங்கேடா இருக்கே? எப்போ வருவே?
இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தாத்தா.
சரி அவ எங்கே? ஒண்ணும் பிரச்சனை இல்லையே. அவளை தனியா விடாதே. மறுபடியும் தாத்தா சொல்ல அவனுக்குள்ளே ஏனோ அதிர்வலைகள்.
அவள் அங்கே தனியாக இருக்கிறாளே????
ச..சரி தாத்தா அவளை பத்திரமா கூட்டிட்டு வந்திடறேன். என்றபடியே ஒரு கூடை பூக்களை அள்ளிக்கொண்டு காரை நோக்கி ஓடினான் அவன்.
தான் நடப்பது யார் பின்னால் அறியவில்லை அவள்!!!!!!!!!!!!. போகப்போவது எங்கே தெரியவில்லை அவளுக்கு.!!!!!!!!! அவள் கொலுசொலியை ரசித்தபடியே தனக்கு முன்னால் நடந்துக்கொண்டிருப்பது யாரென்று புரியவில்லை அவளுக்கு.!!!!!!!!!!!!!
காரின் டிக்கியில் கிடந்தது அந்த பூனையின் உடல். வா.. வா... இந்த பக்கம் தான் வா.... நீ இனிமே என்னை விட்டு போக மாட்டே தானே... அவளை பார்த்து கேட்டது அது. அவன் உருவத்தில் இருந்த அது.
ம்ஹூம்....வேகமாய் தலையசைத்தாள் மாதங்கி.
நான் என்ன சொன்னாலும் கேட்பே தானே.
ம்
வா என் கூட வா....
காருக்கு அருகில் வந்தவன் மொத்தமாய் குலுங்கினான். 'அவள் அங்கே இல்லை.! தெரியாத ஊரில் எங்கே போயிருப்பாள் அவள்??????
அங்கே இருந்த அந்த கடைக்காரிடம் அவன் கேட்க, இந்தபக்கம் தான் தனியா நடந்து போனாங்க என்றார் அவர்.
தாத்தாவின் மனம் ஏனோ ஒரு நிலைக்கு வர மறுத்தது. பூஜை அறையில் சென்று விளக்கேற்றிக்கொண்டு அமர்ந்தார்.
நடந்தாள் மாதங்கி. இருள் நன்றாகவே சூழ்ந்திருந்து. மரங்களுக்குள் புகுந்து நடந்தார்கள். நொடிக்கு ஒரு முறை அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு நடந்தது அது.
சில அடிகள் நடக்க அங்கே இருந்தது ஒரு குளம். அதன் அருகில் சென்று நின்றது அது. அதன் கண்களில் மகிழ்ச்சி. அவளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு விடும் தவிப்பு. உதடுகளில் சிரிப்புடன், கண்கள் விரிய கேட்டது அது
மாதும்மா இந்த குளம் அழகா இருக்கு இல்ல?
தொடரும்...
{kunena_discuss:781}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.