(Reading time: 17 - 33 minutes)

சை முகம் மறந்து போச்சேன்னு நான் பாடினேனே… அன்னைக்கு ராத்திரியே அவரோட அந்த முகம், காதல் கொண்ட கண்கள் எல்லாம் எனக்கு நான் இழந்த நினைவை திருப்பிக்கொடுத்ததே…

பிள்ளை போல என்னைக் கட்டிக்கொண்ட நினைவுகளை இரக்கமே இல்லாது வெளியே காட்டிக்கொள்ளாமல் நான் மனதிற்குள் வெந்து சாவதே போதும் என்று எண்ணி, என்னவனுக்கு சில நாட்களாவது சந்தோஷத்தை தர வேண்டுமென்று முடிவெடுத்து அவரை தெரியாதது போல் நடித்து, முகத்தில் புன்னகை சூழ வலம் வந்தேனே அவரை…

எதற்காக…?. எல்லாம் என்னவன் முகத்தில் பூக்கும் சிரிப்பைப் பார்க்கத்தானே… நான் மனதினுள் அழுது வெளியே சிரித்தேன்…

ஆனால் இன்று அனைத்தும் வீணாகிப் போனதே… சில நிமிடங்களில்…

உண்மையை சொல்லவும் எனக்கு வழியில்லை… அவருடன் சேர்ந்து வாழவும் எனக்கு விதியில்லையே… அய்யோ… என்றவள் உதடு துடிக்க…

என் ராம் போயிட்டார்… போயிட்டார்… திரும்பி வரவே மாட்டேன்னு போயிட்டார்… போயிட்டார்… போயிட்டார்… என்றவள் அதையே திரும்ப திரும்ப சொல்ல, அங்கிருந்தோரின் கவனம் அவள் மேல் படிந்தது…

ஹரீஷ் பட்டென்று அவளருகில் சென்று ஒன்னுமில்லைடா.. இங்கே பாரு… இங்கே பாரு… ஆதி எங்கேயும் போகலைம்மா… போகமாட்டான்… என்று சொல்ல…

அவள் அதை காதிலே வாங்கவில்லை… அவர் போயிட்டார்… போயிட்டார்… என்றவள் மேலும் அழ ஆரம்பிக்க, அனைவரும் அவளருகில் வந்தனர்…

அவள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல ஹரீஷ் வேதனையுடன் கண்மூடி அமர்ந்துவிட்டான் அவளருகில்…

சாகரி இங்கே பாரு, அண்ணனைப் பாரு…. பாருடா… என்று தினேஷ் அவள் முகம் பற்றி சொல்ல, அவள் கவனிக்கவே இல்லை…

மயூரியும் முகிலனை விட்டுவிட்டு, அவளருகில் வேகமாக வந்து, பத்மினி இங்கே பாருடி… இங்கே பாரு… அண்ணன் எங்கேயும் போகலைடி… இங்கே பாரு… பாருடி… என்று சொல்லிக்கொண்டே அழ, சாகரியின் வார்த்தையில் யாதொரு மாற்றமும் இல்லை…

போயிட்டார்… போயிட்டார்… என்று அவள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல….

அவ்னீஷ் ஹரீஷிடம் வந்து எதாவது செய்யுங்க அண்ணா… அண்ணியை இப்படி பார்க்கவே முடியலை… ப்ளீஸ் எதாவது செய்யுங்க என்று சொல்ல… அவன் முடியாது என்பது போல் தலை அசைத்தான்…

சிறிது நேரம் திகைத்து அப்படியே நின்ற அவ்னீஷ், முகிலனை அழைத்துக்கொண்டு ஆதியை தேடிச் சென்றான்…

ஹரியை பிடித்து மயூரியும், தினேஷும் எதாவது செய்யுங்கள் என்று கெஞ்ச, அவன் அப்படியே நின்றான்… ஒன்றும் செய்யாது… முகத்தில் வருத்தம் பரவ…

தினேஷ் அவளை தூக்கி மெத்தையில் கிடத்த, கை கால்களை முறுக்கினாள் அவள்…

அவள் வார்த்தைகள் அடுத்து கதறலாக மாற ஆரம்பிக்க, அவள் உடல் தூக்கி போட… தரையில் சுருண்டிருந்தவளை, ஹரி நெருங்கிய போது ஆதியுடன் அங்கே வந்தனர் முகிலனும் அவ்னீஷும்….

வாடிய மலராய் உளறிக்கொண்டிருந்தவளை பார்த்த நிமிடம் உயிர் அற்று தான் போனது ஆதிக்கு…

அவளுக்கும் அவனுக்கும் சில அடி தூர இடைவெளி தான்… ஆனாலும் அதைக் கடக்க அவன் பெரும்பாடு பட்டான்… அவன் அருகே வர, வர, அவள் உடல் அதிர்ந்து தூக்கி தூக்கிப் போட, அவன் செயலற்றுப் போனான்…

காவ்யா ஒரு கையையும், மயூரி ஒரு கையையும் பிடித்துக்கொள்ள, அவர்களால் அவளின் திமிறலை அடக்க முடியவில்லை… தினேஷ் கவலையோடு ஆதியை பார்க்க, ஆதியோ உயிரில்லாதவன் போல் இருந்தான்….

அதற்கும் மேல் தினேஷால் அங்கே நிற்க முடியாமல் போக, ஒரமாய் ஒதுங்கி சென்று விட்டான், அவனைத் தொடர்ந்து காவ்யா அவனை சமாதானப்படுத்த சென்றுவிட்டாள்…

மயூரி முகிலனிடத்தில் சென்று தஞ்சமடைய, அவன் அவளை தேற்றிக்கொண்டிருந்தான் மெல்ல…

ஆதிக்கு தன் உயிர் தன் கண் முன்னே ஊசலாடும் அவலத்தைப் பார்க்க சக்தியில்லை… மொத்தமாக அவளிடம் தொலைத்த தன் உயிரை அவளுடனே விட்டு செல்ல வந்தான்… அவளை இப்படி உடல் தூக்கிபோட கண்டவன் தான் காண்பது கனவா நனவா என்ற சந்தேகம் கொண்டான்…

உன்னை மீண்டும் உடனே பார்க்கும் வரம் கிட்டியதற்காக நான் மகிழ்வதா?... இல்லை இந்த நிலையில் பார்க்க நேர்ந்ததை எண்ணி நான் அழுவதா?... என்னைப் பார் கண்மணி… நான் என்னிடம் இல்லைடி… என்னைப்பாரடி… என்றவன் அவளருகில் சென்று நிற்க, அவள் அதைக்கூட உணராமல் கண் மூடி அரற்றிக்கொண்டிருந்தாள்…

அவனின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழ, அவள் உடல் அதிர்வு லேசாக நின்றது… மனதில் தோன்றிய வலியுடன் அவள் தலை மேல் கரம் வைத்து வருடியதும், ராம் என்றவாறு சட்டென்று விழி திறந்து பார்த்தவளின் பார்வைகள் அவன் மனதில் தோன்றிய வலியை ஒரு நிமிடம் என்றாலும் தாலாட்டி உறங்க வைத்தது…

அவள் விழியோடு இவன் விழி நீர் விழுந்து கலக்க, ஒரு சிறு குறுநகை அவன் இதழ்களில் தோன்றி, நான் தான் உனை சேர தடை… என் கண்ணீர் உனைச் சேர தடை ஏதும் இல்லையே கண்மணி… என்று தான் உனை சேர்வேண்டி நான்?... அந்த நாளுக்காக ஏங்கும் என்னைப் பாராயோ சீதை… என்று அவன் கண்ணீர் கேட்ட தருணத்தில், அவள் மௌனமாய் கண் மூடிக்கொண்டாள் மீண்டும்…

பழைய படி அரற்ற ஆரம்பித்தாள்… உடல் மீண்டும் தூக்கிப்போட, ஆதர்ஷ் அவளைப் பார்க்க, அவள் விழிகள் பாதி திறந்து செறுகியபடி நிற்க, அவனுக்குள் கவலை ஆக்கிரமித்தது மீண்டும்…

ஹரி எதாவது செய்டா… என்று ஆதர்ஷ் கெஞ்சியதும், ஹரி தன்னை தேற்றிக்கொண்டு வந்து அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து உறங்க வைக்க முயன்றான்…

ருந்தின் வீரியத்தில் அவள் சற்று அமைதியடைந்தாலும், முழுமையாக அவள் உளறல் நிற்கவில்லை… ஆதியை அவளருகில் இருக்க சொல்லிவிட்டு அவனும் அவளருகில் இன்னொரு பக்கத்தில் அமர்ந்துவிட்டான்…

அப்போது, ராசு நான் சொல்வதைக் கேள் என்று சத்தம் கேட்டு அங்கே சென்றனர் அனைவரும்…

முகிலனும் மயூரியும் ஒன்று போல் அருகருகே அங்கே வந்து நிற்க, ராசு, மகளை கொலைவெறியோடு பார்க்க, அவள் முகிலனின் பின் ஒளியாமல் ஆதியின் பின் ஒளிந்தாள்…

வா இங்கே என்று அவர் உறும, அவள் மாட்டேன் என்று தலை அசைக்க… அவர் விருவிருவென்று மகளின் கைப்பிடித்து இழுத்து செல்ல முயல, ஆதி அவரை தடுத்தான்…

என் கையை விட்டுடு ஆதி… அது தான் உனக்கு நல்லது… என்றவர் கோபமாக அவளை இழுத்துச் செல்ல..

சொல்வதைக் கேள் ராசு… என்று கோதையும் சுந்தரமும் கூற… அவர் யார் பேச்சுக்கு மசியவில்லை…

ஆதியும் முடிந்த மட்டும் அவரிடம் கெஞ்சி பேசி பார்க்க அவர் கல்லென அசையாதிருந்தார்…

ஏன் என் மகனைப் பறிச்சிக்கிட்டது போதாதா?... இப்போ என் பொண்ணையும் இழக்க நான் தயாரில்லை… என்று ராசு சொல்ல,

யார் பறித்தது உங்கள் மகனை…. என்ற குரல் கேட்டு நின்றார் ராசு அப்படியே….

என்றவள் அடுத்த வார்த்தையை பேசும் முன்,

தொடரும்

Go to episode # 20

Go to episode # 22

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.