(Reading time: 27 - 53 minutes)

ண்ணா , நிலா மனசுல நீ ஆல்ரெடி இடம் புடிச்சிட்டேடா " என்று சொல்லிக் கொண்டார்.. மீண்டும் முகத்தை அப்பாவியை வைத்துக் கொண்டு வெளியில் வந்து பரிமாறினார் ...

நிலாவும் பேச்சை மாற்ற அதன் பின் இருவரும் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டு இருந்தனர் ..

நள்ளிரவு நெருங்கியும் மதியழகன் வரவில்லை .. அவனுக்காக தேன்நிலா காத்திருக்க எண்ணினாலும் அவளின் உடல் நிலை காரணத்தினால் பாட்டியும் உறங்காமல் விழித்திருதார் ... எனவே அவருக்காக உறங்குவிட்டது போல கண்களை மூடி படுத்திருந்தாள் அவள் .. சிறிது நேரத்தில் பாட்டியும் அசதியில் உறங்கிவிட்டார் ..

" டேய் எங்கடா போன நீ ? மவனே வருங்காலத்துல நீ வீட்டுக்கு லேட்டா வந்து பாரு, வாசலிலேயே முட்டி போடா வைக்கிறேன் " என்று திட்டி தீர்த்தாள் அவனை மனதினுள் .. அவளின் கோபத்தின் அளவு மதியழகனை எட்டியதோ என்னவோ அடுத்த பத்தாவது நிமிடம் கால்லிங் பெல்லை அழுத்தினான் மதி ..

" ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்

நிலவில் ஒளி இல்லை " என்ற பாடலை விசில் அடித்துக் கொண்டு நின்றவன் முன் காளி அவதாரமாய் நின்று கதவை திறந்தாள் நிலா.. விசில் அடித்துக் கொண்டிருந்தவனோ தேவர் மகன் ரேவதி ஸ்டைலில் " காத்துதான் வருது " என்று சொல்லாமல் சொன்னான் ..

" ஆஹா பீவர்ல தூங்கிகிட்டு இருப்பா பக்கத்துல போயி குட் நைட் ஸ்வீட்   ட்ரீம்ஸ் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தா, மேடம் கோபத்துல இருக்காங்களே .. இப்போ எனக்கு மரியாதை வேற ஜாஸ்தியா தருவாளே " என்று அவன் நினைத்து முடிக்குமுன்னே

" டேய் மணி என்னடா " என்று அதட்டினாள் தேன்நிலா ... அவள் கோபம் அவன் மனதிற்கு மழை சாரலாய் இருந்தது ..

" ஹே ஹனி " என்றான்

" டேய் கேள்விக்கு பதில் சொல்லுடா " என்று அவள் குரல் உயர்த்தவும் தான், தான் நிற்கும் இடத்தை பார்த்தான் மதியழகன் ..

" ஆஹா வேலைக்காராவங்க முன்னாடி என் மானத்தை வாங்கிருவா போல இருக்கே "

" நிலா அது "

" ஒன்னும் பேசாதே .. வெளிய நில்லு உனக்கு உள்ள இடம் இல்ல " என்று போலியாய் கதவை மூட போக

" அடியே " என்று மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தவன் , கதவை சாத்திவிட்டு அவளை கதவோடு நிறுத்தி அவள் மீது படர்வது போல மிக அருகில் நின்றான் .. அவளை லேசாய் தொட்டு தீண்டியது அவனது மூச்சுக் காற்று ..

" டேய் தள்ளி நில்லு "

" ம்ம்ஹ்ம்ம்ம் மாட்டேன் போடீ .. வேலை முடிஞ்சு வர்றவனை இபப்டித்தான் வரவேற்பியா ? "

" ஆமா இது என் ஸ்டைல் .. "

" இரு உனக்கு என் ஸ்டைல் என்னன்னு காட்டுறேன் " என்று அவன் இன்னும் அருகில் வர,கண்களை இறுக மூடினாள் நிலா ..அவனோ அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்

" லூசா நீ ..இன்னும் பீவர் சரி ஆகல ..எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சு இருந்த ?"

" ஹ்ம்ம் வேண்டுதல் அதான் "

" திமிரா டீ "

" ஆமா .. இப்போ என்ன அதுக்கு "

" நிலா .,.. விளையாடாத .. போபோ தூங்கு முதலில் "

" முடியாது மது நீங்க முதலில் வந்து சாப்பிடுங்க " என்று சொல்லும்போதே அவளது குரலில் தணிந்து இருந்தது..

" ஏன் இவ்வளவு லேட் மது ? இப்படித்தான் டெய்லி வருவிங்களா ? பாட்டி பாவம் தானே ? "

" ஹே இல்லமா .. இன்னும் 1 வீக் ஆபீஸ் போக கூடாதுன்னுதான் வேலையை முடிச்சிட்டு வந்தேன் "

" அதென்ன ஒரு வார கணக்கு ? "

" நீ ஒரு வாரம் நல்ல ரெஸ்ட் எடுக்கணும்"

" ஆர் யூ கிட்டிங் ?"

" ஹே நோ "

" என்ன நோ ? நான் நாளைக்கே வேலைக்கு போயிடுவேன் "

" பல்லை உடைச்சிருவேன் "

" என்னது ???"

" என என்னது ? அட்வைஸ் ஊருக்குதானா ? உனக்கு இல்லையா ? "

" அடடே எனக்கு சரியா போச்சு மது .. லிசன்.. ஐ எம் எ டாக்டர் "

" இருக்கட்டும் .. அதுக்காக ? இன்னைக்கு நீ எப்படி இருந்த தெரியுமா " என்றவன் ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி கொண்டான் ..

" ப்ளீஸ் டா... எனக்காக இரு " அவன் கெஞ்சுவது ஏனோ அவளுக்கு பிடிக்கவே இல்லை .. " ஒழுங்க இருடீ " என்று அவன் மிரட்டுவான் என்று எதிர்பார்த்தவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை .. " பயந்துட்டான் போல " என்று எண்ணினாள் ...

" சரி நான் யோசிக்கிறேன் .. நீங்க சாப்பிட வாங்க "

" நீ முடிவெடுத்துட்டு சொல்லு அப்பறம் சாப்டுறேன் "

" எப்போ பார்த்தாலும் பிடிவாதம் .. புடிச்சா உடும்பு புடி "

" ஹா ஹா .. "

" சிரிகாதிங்க .. சரி இருக்கேன் .. உங்களுக்காக இல்ல . பாட்டிக்காக "

அவள் சொல்லாமல் இருந்திருந்தால் கூட அவன் அப்படி எண்ணியிருக்க மாட்டான் .. ஆனா இப்போது அவள் அப்படி சொல்லவும் , ஒரு கள்ளச்சிரிப்பை சிந்தி அவளது இதயத்தை திக்கு முக்காட வைத்தான் .. ஏதேதோ கதை பேசி அவனை உண்ண வைத்தாள் தேன்நிலா ..

" என்ன என்னையே எப்படி பார்க்குறிங்க ? "

" நான் உன்னை பாத்துக்க உன்னை அழைச்சிட்டு வந்தா நீ என்னை கவனிச்சுகிட்டு இருக்க ? "

" இருக்கட்டும் ..ஏதோ பார்க்க களைப்பா இருக்கீங்க போனா போகுதுன்னு விடுறேன் "

பேசிக்கொண்டே அவள் சோபாவில் அமர அவனும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்ந்தான் ..

" எவ்வளோ இயல்பா இருக்கான் " என்று எண்ணிக் கொண்டாள் .. அவனுக்கோ என்றும் இல்லாத திருநாளாகவோ , அல்லது இத்தனை நாளை மறைந்து இருந்ததோ என்று அறிய முடியாத தாயின் நினைவுகள் கண்முன் நின்றது ..

" என்னாச்சு மது ? முகமே சரி இல்லையே "

" அம்மா ஞாபகம் .. ."

" கொஞ்ச நேரம் தூங்குங்க சரி ஆகிடும் "

" நிலா "

" ம்ம்ம்ம்? "

" உன் கையை கொஞ்ச நேரம் புடிச்சுக்கவா ? "

" ம்ம்ம்ம் " ஏன்என்று தெரியாமலே ஆமோதித்தாள் அவள் .. அவள் கையை பிடித்துக் கொண்டு தலை சாய்த்து சோபாவில் கண் மூடினான் மதியழகன் ..

" பாசமான பாட்டி, வெளிநாட்டுல அம்மா அப்பா, நல்ல வசதி .. இருந்தும் இவன் முகத்தில் ஏன் இவ்ளோ சோகம் " மெல்ல கண்விழித்தவன் போனில் ஒரு பாடலை போட்டுவிட்டு மீண்டும் கண் மூடினான் .. அந்த பாடல் அவனுக்கா அல்லது அவளுக்கா என்று புரியாமல் இருவருமே அதில் மூழ்கினர் .. நிலா கண்மூடி இருக்க, மதி அவளது முகத்தையே பார்த்தான் ...

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா

தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா

ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே

பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே

இப்போது அவன் கண் மூட அவள் அவனது முகத்தை ரசித்தாள் ..

கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே

அதோ அதோ ஓர் பூங்குயில்

இதோ இதோ உன் வார்த்தையில்

அதோ அதோ ஓர் பொன்மயில்

இதோ இதோ உன் ஜாடையில்

யார் இந்த குயிலை அழ வைத்தது

மலர்மீது தான சுமை வைப்பது

பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே

உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

பாடலில் மூழ்கி நித்திரை தேவியின் மடியிலும் சாய்ந்துவிட்டாள் தேன்நிலா .. அவன் கையால் பிடித்திருந்தவளின் கரம் தளரவும் கண் விழித்தான் மதியழகன் .. ஒரு நிறைந்த புன்னகையுடன் பிள்ளையை போல அவளை ஏந்தி அறையில் படுக்க வைத்து விட்டு , அப்போது இருந்த மனநிலையில் ஏதும் யோசிக்காமல் அவள் நெற்றியில் இதழ் பதித்து

" குட் நைட் ஹனி " என்றுவிட்டு சென்றான் .. அவன் அறையை விட்டு சென்றதுமே, புன்னகையுடன் கண் திறந்து வாசலை பார்த்து " குட் நைட் மது " என்று சொல்லிக் கொண்டாள் அவளும் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.