(Reading time: 15 - 30 minutes)

தி இருந்த அறைக்கதவை திறந்து உள்ளே பார்த்தவளின் பார்வை அவன் முகத்தில் வந்து நின்றது…

விழிகள் மூடி மயக்கத்தில் இருந்தவனின் அருகே செல்ல அவள் பாதங்கள் முயன்றது…

சுகம் என்பது தொலைவானது

உனைக் கண்ட பின்னே எனைச் சேர்ந்தது…”

என்ற வரிகளுக்கு ஏற்ப அவனைப் பார்த்த தருணம் மனதிற்கு இதமாய் இருந்தது அவளுக்கு…

அவனருகில் சென்று நின்றவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்..

தோள்பட்டையில் வழிந்திருந்த குருதியை மறைத்து அதன் மேல் கட்டுடன், படுத்திருந்தவனைப் பார்க்கையில் அவள் விழிகளில் தானாக நீர் திரண்டது…

திரண்டிருந்த நீர் அவளது கன்னங்களில் வழிந்து அவன் கைகளில் பட்டு அவனை எழுப்பியது…

அதை உணராமல் அழுகையின் சத்தம் அவனை எட்டிவிடக்கூடாது என்று தரையைப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தாள்…

அவள் விழி நீரால் கண் திறந்தவன், அவள் நின்றிருந்த விதத்தையேப் பார்த்திருந்தான்…

எதுவோ உறுத்த, சட்டென நிமிர்ந்தவளின் பார்வை அவன் கண்களில் குடிகொண்டது…

அவன் உதட்டில் மெல்லிய புன்னகை, அவளை எப்போதும் ஈர்க்கும் அந்த மந்தகாச புன்னகையை சிந்திய வண்ணம் இருந்தான் அவன்…

இது தான்… இது தான்… எத்தனை வருடங்கள்… ஆயிற்று… என்னவரின் முகத்தில் இந்த புன்னகையைப் பார்த்து… என்று அவள் சிந்தனை எண்ணிய வேளை….

வாழ்வெனக்கு வசப்பட்டது

வசந்தம் என் கண்ணில் தென்பட்டது…”

என்று அந்த திசை மாறிப்போன தென்றல் மீண்டும் தன் வாசல் வந்து தந்த வசந்தத்தை கண் முன்னே கண்டாள் அவள்…

என்னவரைக் காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த அந்த அலைபாய்ந்த மனதுக்கு அமைதியைத் தந்தவனை, ஒரு நிமிடம் இமைகள் இறுக மூடி திறந்து பார்த்தாள் அவள்…

சகி… என்று அடிப்பட்டிருந்த கையை உயர்த்தி அவன் அழைக்க…

அவள் அவனருகில் அமர்ந்து முகம் மறைத்து அழுதாள் நெடுநேரம்…

நான் தேடிக்கண்ட திரவியமே

எனை உனக்காய் வார்த்தேனே

என் ஜீவன் முழுதும் வாரித்தந்து

உன் உயிரைக் காப்பேனே

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…”

என்று மென்மையாக கூறியவனை, அவள் கைவிலக்கி விட்டு அழுத முகத்துடன் ஏறிட,

அடி நீதான் என் சந்தோஷம்..

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்செல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்

உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி

நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி….”

என்று அவன் நெஞ்சில் கை வைத்தவாறு கூறி, தன் வலக்கையை அவளிடம் நீட்ட, அவள் வெட்கத்துடன் நிலம் பார்த்தாள்…

அவள் வெட்கத்தை ரசித்துக்கொண்டிருந்தவனிடம், கை நீட்டாதீங்க… கை வலிக்கும்… என்றவள், ரொம்ப வலிக்குதா தர்ஷ்… என்று கேட்டுவிட்டு அவன் கையைப்பிடித்து தன் கன்னங்களில் வைக்க முயன்ற போது, அறைக்கதவு தட்டப்பட, சட்டென்று அவன் கையைப் பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டாள் அவள் வெட்கத்துடன்…

அவளின் வெட்கம் அவள் எண்ணத்தை சொல்ல, அவனும் அதை ரசித்தான் மிக...

உள்ளே வரலாமாடா மச்சான்…?... என்றபடி ஹரி கேட்க…

ஹ்ம்ம்… வாடா… என்றான் ஆதியும்…

அவன் முகத்தில் விரிந்திருந்த புன்னகையும், தங்கையின் முகத்தில் இருந்த செம்மையும், அவனுக்கு மகிழ்வைத்தர,

சாரிடா.. மச்சான்… உன்னை செக் பண்ண தான் வந்தேன்… என்று கூறியவன், அவனை பரிசோதித்துவிட்டு அங்கிருந்து அகல முற்பட, அண்ணா இருங்க நானும் வரேன்… என்றாள் ரிகா…

நீ கொஞ்ச நேரம் பேசிட்டு வாடா… என்றான் ஹரி…

இல்லண்ணா… பேசிட்டேன்… நாம போகலாம்… அவர் தூங்கட்டும்… என்றாள் அவள்..

ஆமாடா.. உன் தங்கை நிறைய பேசிட்டாள்…. அவள் நினைத்ததை கூட செய்துவிட்டாள்… என்றான் அவளையேப் பார்த்தபடி…

அவள் முகம் பல மடங்கு செம்மையாயிற்று அவன் வார்த்தைகளில்…

ஹரிக்கு அவனின் பேச்சு புரிய…. அவன் அங்கிருந்து அகன்றான் மெதுவாக…

ஹரி கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று நினைத்தேன்… இப்போது அவன் தான் போய்விட்டானே… உன் எண்ணப்படி… நீ… என்று கையை அவள் புறமாக நீட்டி அவன் இழுக்க…

அவள்… தர்ஷ்… ப்ளீஸ்… போதும்… என்றபடி வெட்கம் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்…

அவள் சென்றதையேப் பார்த்திருந்தவனின் இதழ்களில் புன்னகை தானாக வளர்ந்தது….

ரண்டு வாரங்களுக்குப் பிறகு ஊட்டிக்கு அனைவரும் கிளம்ப முனைந்த நேரம், வீட்டின் அழைப்பு மணி அழைக்க, சாகரி சென்று பார்த்தாள்…

அங்கே ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்…. அவரைப் பார்த்ததும் அவளுக்கு பரிச்சயமானவர் போல் இருக்க, வாங்கப்பா… உட்காருங்க… இதோ வந்துடுறேன் என்று சென்றவள் விரைந்து சென்று ஆதியை அழைத்து வந்தாள்…

வாங்கப்பா… என்றழைத்த வண்ணம் ஆதியும் அங்கே வந்தான்… சாகரி அவருக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்…

எடுத்துக்கோங்கப்பா… என்று கூறியவளுக்கு பதில் அளிக்கும் விதமாக அங்கு வந்தான் ஹரீஷ் பெரும் கோபத்துடன்…

யாரை எடுத்துக்க சொல்லுற… இவரையா?... ஏன் இவர் இதுவரை எடுத்தது போதாதா?... இன்னும் இங்க என்ன இருக்குன்னு எடுத்துக்க சொல்லுற நீ?...

அண்ணா… நீங்க புரிந்து தான் பேசுறீங்களா?... என்றவளை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தவன்,

நான் நன்றாக புரிந்துகொண்டதால் தான் சொல்லுறேன்…. இன்னும் எடுத்துக்க என் உயிர் தான் இருக்கு இங்க… வேற எதுவுமில்லை… அதுவும் வேணும்னா சொல்ல சொல்லு… கொடுத்துடுறேன்… அப்புறம் நிம்மதியா இருக்கட்டும்… என்றவனை வலியோடு பார்த்தார் அந்த பெரியவர்…

அண்ணா… எதுக்கு இப்போ நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க… முதலில் நீங்க பேசினதுக்கு மன்னிப்பு கேளுங்க அப்பாவிடம்… என்றாள் அவள்…

அப்பா……………. யார் இவரா?... உனக்கா?... அந்த வார்த்தைக்கு இவருக்கு அர்த்தம் தெரியுமா முதலில்?...

ஹரி… முதலில் உனக்கு அவர் யாரென்ற மரியாதை இருக்கிறதாடா?... பெற்ற தகப்பனைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது?... என்று அதட்டினான் ஆதி..

உனக்கு தெரியாது ஆதி… இவரைப் பற்றி… அவரை இங்கிருந்து முதலில் போக சொல்… என் கண் முன்னாடி அவர் இருக்க கூடாது… என்று கத்தியவனை ஆதியின் பதில் மௌனிக்க வைத்தது…

தொடரும்

Go to episode # 27

Go to episode # 29

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.