(Reading time: 22 - 44 minutes)

 

" நீ எடுக்குற சில முடிவுகள் சரியா பிழையான்னு நீதான் டிசைட்  பண்ணனும் ... நான் எதுவும் சொல்றதுக்கு இல்லை " என்று சொல்லி இரண்டடி திரும்பி நடந்தான் அவன் ..

" லூசு லூசு .. நான் சொல்றதை தான் நீ கேட்கனும்னு ஆர்டர்போட்டா இந்நேரம் நாய்குட்டி மாதிரி பின்னாடியே வந்திருப்பேனே .. பெரிய இவன்னாட்டம் எனக்கு சுதந்திரம் கொடுக்குறானாமாம்  ..லூசு " என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை பண்ணினாள்  சங்கமித்ரா .. ஷக்தியோ  மீண்டும் அவள் அருகில் வந்து

" ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ, நீ எதுக்காக , யாருக்காக , எந்த காரணத்துக்காக இந்த  உலகத்தில் எந்த மூலையில்  ஓடினாலும் நீ சேருற இடம் என்கிட்ட தான் .. என்னை விட்டு விட்டு நீ எங்கயும் போக நான் விட மாட்டேன் "  ( இவ்ளோபெரிய டைலாக் பேசிட்டா இது ஷக்தி ஸ்டைல் இல்லையே ..சோ இதைமனதிற்குள் சொல்லிவிட்டு ....வெளியில் அவளிடம்

" ஆனா நீ எங்க போனாலும் அது முடிவில நான் தான்  இருப்பேன் " என்று சொல்லிவிட்டு உல்லாசமாய் சிரித்துவிட்டு சென்றான் ... "ஆஅ " என்று வாய் திறக்காத குறையாய் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் சங்கமித்ரா ..

முகில்மதியை  மனம் நிறைய பார்த்து விட்டு அனைவரிடமும் பேசிவிட்டு அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டான் அன்பெழிலன் .. மீண்டும் அவன் எப்போது வருவானோ என்று அனைவருமே காத்திருக்க, அவன் விரைவில் திரும்பி வர போகும் உண்மையை அறிந்து இலகுவாய் சிரித்தது விதி !!

சென்னை ..

அதே நாள் மாலை வேளையில் நம்ம பி பி எஸ் பி  ... அதாங்க நம்ம காவியதர்ஷினி  கதிரேசனை பார்ப்பதற்காக அவனது ஹாஸ்டலுக்கு சென்றாள் ...வாசல் வரை வந்தவளுக்கு என்ன சொல்லி அவனை பார்ப்பது என்று புரியவில்லை.. ஏதோ ஒரு உந்துதலில் ஆண்கள் விடுதி வரை வந்துவிட்டாள் ..எனினும் பெண்மைக்கே உரிய தயக்கம் எட்டி பார்க்காமல் இல்லை .. இப்படி எதையும் யோசித்து பார்க்க முடியாத அளவிற்கா அவன் மீது பற்று கொண்டுள்ளேன் ? என்று எண்ணிக்கொண்டாள்..அவளுக்கு உதவுவதற்காக கடவுளே அனுப்பியது போல அங்கு வந்து நின்றான் ரிஷி ..

Related Read: என் உயிர்சக்தி! - 03

" ஹே தங்கச்சி "

" அண்ணா ..... நீங்க இங்க என்ன பண்ணுறிங்க  ? "

" அடிபாவி !! எங்க ஏரியாவுக்கே வந்துட்டு என்னை கேள்வி கேட்குறியா நீ ?"

"ஹா ஹா விடுங்க அண்ணா.. ஏதோ ஆர்வ கோளாறில் கேட்டுட்டேன் ... ஆமா கதிர் எங்க ?"

" அப்படி போடு .,... அவனை பார்க்கத்தான்  வந்தியா ?"

" ம்ம்ம்ம் ஆமா கதிர் இல்லையா ?"

" அவன் உன்கிட்ட ஒன்னும் சொல்லலியா ?"

" என்ன அண்ணா ?"

" அவன் அவங்க ஊருக்கு போயிருக்கான் காவி "

" எதுக்கு ?"

" அது .. அது .... அவனுக்கு பொண்ணு பார்த்து இருக்காங்க "

" வாட் ???? "

" ஆமா ..அவன் உன்கிட்ட சொல்லலையா ?"

" நேத்து வீட்டுல இருக்கேன்னு சொன்னாங்களே "

" ஆமா ... ஊருல அவன் வீட்டுல இருக்கறதா சொல்லி இருப்பான் ... "

" ஓ " என்றவளுக்கு அடுத்து என்ன சொல்வதென்றே புரியவில்லை .. அவனுக்கு திருமணமா ? அதை அவளால் நினைத்து பார்க்கவே முடியவில்லை ... ரிஷியோ அவளது முகபாவனையை வைத்தே அவளது மனதில் இருப்பதை கண்டுபிடிக்க முயன்றான் .. ஒரு பிரதானமான சாலையின் எதிரில்தான் அமைந்து இருந்தது அந்த ஹாஸ்டல் ... காவியா நின்றிருந்த இடத்தில் இருந்து ஐந்து அடி தூரத்தில் வாகனங்கள் நகர்ந்து கொண்டு இருந்த நேரம், அவளது முகத்தை பார்த்து கொண்டிருந்த ரிஷி அவள் அடுத்து என்ன செய்வாள் என்று யோசிக்கவில்லை ..காவியாவும் நிமிர்ந்து அவனது முகம் பார்க்காமல் எதையோ முணுமுணுத்து கொண்டே " போய்  வருகிறேன் " என்று கூட சொல்ல மனமில்லாமல் சட்டென ஸ்கூட்டியை எடுக்க அவள்  முன்னேறிய வேகத்தில் இன்னொரு கார் அவள் ஸ்கூட்டி மீது மோதி  தூக்கி எரியபட்டாள் ...

" காவியா " என்று கத்தியபடி ஓடி வந்தான் ரிஷி ...தன் விளையாட்டு இப்படி வினையாகும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை... ( அடுத்து என்ன ஆச்சு ? அடுத்த எபிசோட்ல சொல்றேன் )

மூன்று நாட்கள் கடந்து இருந்தது ... தினமும் வேலைக்கு சென்று பழகியதாலோ என்னவோ, அனைவரும் உபசரித்து கொண்டு இருந்தாலும் ஷக்திக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை...என்ன செய்யலாம் என்று  யோசித்தபடி போனை பார்த்து கொண்டிருந்தவன், கண்கள் பளிச்சிட சட்டென மீராவை அழைத்தான்... இரண்டு முறை அழைத்தும்  பதில் இல்லாததால் போனை வைக்க, அதே நேரம் அவளிடம் இருந்து போன் வந்தது ..

" ஹெலோ .. "

" ஹெலோ .. "

" ஹான் .. நான் ஷக்தி பேசறேன் .. மீரா இல்லையா ... இது மீரா நம்பர் ஆச்சே "

" ஹே ஷக்தி .. எப்போ துபாய்ல இருந்து  வந்திங்க ? நேத்துதான் உங்களை பத்தி பேசிட்டு இருந்தோம் ... நான் கிருஷ்ணா பேசறேன் "

" ஹாய் .. நான் இப்போதான் வந்து மூணு நாள் ஆகுது "

" அடடே மூணு நாள் ஆச்சு இப்பதான் எங்ககிட்ட சொல்லுறிங்களா ? மீரா கிட்ட போட்டு கொடுக்குறேன்  பாஸ் "

" ஹா ஹா ...ஏற்கனவே அவ நல்லா சாமி ஆடுவா இதுல நீங்க வேறயா கிருஷ்  ? ஆமா மீரா எங்க ?"

" இங்கதான் அம்மா அப்பா கூட பேசிட்டு இருக்கா .... பாஸ் நீங்க ஒரு வேலை பண்ணனுமே "

" நானா ?"

" எஸ்....ஒரு வாரத்துக்கு தேவையான டிரஸ் பேக் பண்ணிட்டு உடனே இங்க வாங்க "

" எதுக்கு ?"

" இன்னும் 4 டேஸ் ல எங்களுக்கு கல்யாணம் ஷக்தி ... "

" ஹே . வாழ்த்துக்கள் கிருஷ் ..அட்ரஸ் அனுப்புங்க வந்துடுறேன் "

" என்ன பாஸ் இந்நேரம் நீங்க  ஏன் இப்போ சொல்றிங்க ? முன்னாடி ஏன் சொல்லைன்னு ஆர்பாட்டம் பண்ணுவிங்கன்னு நெனச்சேனே "

" ஹா ஹா அதான் ஷக்தி "

" ம்ம்ம்ம் இப்போ புரியுது ஏன் மீரா உங்க கூட ரொம்ப ராசியா இருக்கான்னு ...அவளுக்கு ரொம்ப ரிஷ்ரிக்ஷன் வெச்சு பழகினா  பிடிக்காதுல..."

" ஆமா எனக்கு அப்படிதான் .... "

" ஓகே ஷக்தி அவ வர்றா ... நீங்க வர போறதை நான் அவகிட்ட சொல்ல மாட்டேன் சீக்ரெட் .... ஓகே யா "

" கண்டிப்பா ... "

" அப்பறம்  உங்க சங்கமித்ரா மேடமையும் நான் கூப்பிட்டேன்னு கூட்டிட்டு வாங்க ..... "

" ஆஹா ... மீரா ஓட்டை வாய் இதையும் சொல்லியாச்சா ? "

" இதை சொல்லிட்டு ஒரு முக்கியமான விஷயம் சொல்லாமல் போய்ட்டா ஷக்தி "

" அது என்ன ?"

" S K M ன்னு உங்க பேரை சேவ்  பண்ணி வச்சிருக்காளே ..அப்படின்னா என்ன ?"

" இன்னும் அந்த பேரை மாத்தலையா ? ஷக்தி மசாலா ன்னு என்னை கூப்பிடும் அந்த லூசு "

" ஓகே ஓகே உங்க லூசு பக்கத்துல வர்றா நான் போனை வைக்கிறேன் பாஸ் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.