(Reading time: 22 - 44 minutes)

 

மித்ராவுடன்  கிருஷ்ணா-மீரா திருமணத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்ப தயார் ஆனான் ஷக்தி ...

" அம்மு ரெடியா ? சஞ்சய் நம்மளை டிராப் பண்ணுறான் ..சீக்கிரம் வா "

" வரேன் டா மாமா ... நீ முதல்ல என்னுடைய பேக் எல்லாம் காரில் வை " என்றவள் ரகசியமாய் சக்தியின் தந்தைக்கு போன் போட்டாள் ..

" மாமா"

" கெளம்பியாச்சா மா ?"

" ஆமா மாமா ... எல்லாம் ரெடியா ? நாளைக்கு அவனை சர்ப்ரைஸா  சென்னை கூட்டிட்டு போக போறோம் "

" எல்லாம் ரெடி .... "

" சரி மாமா .. உங்க பையன் பார்த்துகிட்டே இருக்கான் ...நான் போனை வைக்கிறேன் " என்று நிம்மதியாய் போனை வைத்தாள் சங்கமித்ரா நடக்கப்போவது தெரியாமல்...

ஷக்தியின்  வீட்டில்

" மித்ராவா அப்பா ?"

" ஆமா கதிர் .... எங்க இருக்காங்களாம் ?"

" இப்போதான் புறப்படுறாங்க "

Related Read: காதல் நதியில் - 28

" ஹ்ம்ம் நாளைக்கு அவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம்ன்னு தெரிஞ்சதும் மித்ரா எப்படி ரியாக்ட் பண்ண போறான்னு இப்போவே பார்க்கணும் போல இருக்கு அப்பா "

" அதெல்லாம் மித்ரா அண்ணி செம்ம குஷி ஆகிடுவாங்க கதிர் அண்ணா " என்று சிரித்தாள் முகில்மதிஅவளும் ...அவளும் நாளை  தனது சிரிப்பை இழக்கபோவது தெரியாமல் !!!

சென்னையில் ,

"  ஹனி  பிசியா ?"

" இல்ல மது .. இப்போதான் ஒரு கேஸ் முடிஞ்சது ... டயர்ட் ஆ இருக்கு .. காபி குடிக்க போறேன் "

" காபி குடிச்சுகிட்டே எங்க spark fm  கேட்கலாமே "

" ஹே எனி சர்ப்ரைஸ் "

" ஹ்ம்ம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் "

" டேய் உண்மைய சொல்லுடா "

"  டேயா ?  தேவைதாண்டி .. எவனோ அட்வைஸ் அழகனாம் .. அவன் தான் ஏதோ உளறிட்டு இருக்கானாம் .. உன்னை கேட்க சொல்லுறான் .. சரி ஓகே அவன் இப்போ பிஸி ... நீ ரேடியோ கேளு "  என்று சொல்லி விட்டு தேன்நிலாவுக்காக நிகழ்ச்சி படைக்க தொடங்கினான் மதியழகன் .. இல்ல இல்ல அட்வைஸ் அழகன் .. "

"  ஹாய்   நண்பர்களே, இந்த அர்த்த ராத்திரியில் என் குரலை கேட்க ஓடோடி வந்த உங்க எல்லாரையும் சந்தோஷமா வரவேற்கிறேன் .. இன்னைக்கு நாம  நிலவை பற்றிய கவிதைகளை பகிர்த்து கொள்ள போகிறோம் .. உங்க மைண்ட் ல இப்போவே சூப்பர்  கவிதை , அதுவும் நிலவு கவிதை தோன்றினாள்  போன் எடுங்க கால் பண்ணுங்க ..என்னோடு ஷேர்  பண்ணுங்க .. இதோ நான் என்னுடைய முதல் கவிதையை சொல்லிட்டு  அப்படியே ஒரு நிலவு பாட்டு போடுறேன் ..

வான் நிலவாய் வந்திருந்தால்  வானிலே நின்றிருப்பாள்  !

முழுநிலவாய் வந்திருந்தால்  பார்வையை கொள்ளை கொண்டிருப்பாள் !

வெண்ணிலவாய் வந்திருந்தால்  விழி கூச வைத்திருப்பாள் !

என்னை  உயிரில் தேன்  பாய்ச்சிடத்தான்

அவள் மதுசிந்தும் தேன்நிலவாய் வந்தாளோ  ? 

இது கவிதையான்னு கேட்காதிங்க மக்களே .... இதோ ஒரு சூப்பர் நிலவு பாட்டு உங்களுக்காக !!

"திருடா " என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள் தேன்நிலா ...  பிறகு மனதில் எழுந்த வார்த்தைகளை கோர்த்து அவனுக்கு கவிதையை அனுப்பினாள் ..

" மழையில் நனைந்தால் நோய் வருமாம்

தெரிந்து கொண்டே நனைகிறேன்

தினம் தினம் உன் காதல் மழையில் 

காதல் நோய் வரட்டுமே என்று ! "

அவளுக்கு பதில் அனுப்பினான் மதியழகன்

" நோய் தீர்ப்பவளுக்கே நோய் வந்தால்

அவளால் நோய் கொண்டவன் என்னாவேனோ? "

" என்னவனே ,

ஒரு நாளில் தீர்ந்து விடுமோ நீ தந்த காதல் நோய் ?

தினம் தினம் புது கிருமிகளை பார்வையால்  படைக்கிறாய்

அவ்வப்போது முத்தம் வைத்து கன்னங்களில் அறுவை சிகிச்சை செய்கிறாய்

பார்வை எனும் ஊசி வழியாய் காதல் நோய் ஏற்றுகிறாய்

நோய்  தீர்க்க வருகிறேன் என்று நீயும் நோய்வாய்ப்படுகிறாய்

வேண்டாம் ஒரு சிகிச்சை!

பரவட்டும் இந்நோய் !

காதல் எனும் மருத்துவமனையில்

ஒருவருக்கொருவர் நோய் தந்து நோய் தீர்ப்போம் "

(இவர்களின் சந்தோஷமான உரையாடலோடு நாமும் விடைபெறுவோமா ? ) 

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.