(Reading time: 11 - 22 minutes)

"வன்கிட்ட என்ன சொன்ன?"

"உண்மையை சொன்னேன்!"

"என்ன உண்மை?"-ஷைரந்தரி தலை குனிந்தப்படி அவனை பார்த்தாள்.

நாண புன்னகை ஒன்றை விடுத்து,அங்கிருந்து நகர்ந்தாள்.

யுதீஷ்,அவளை பார்த்தப்படி நின்றான்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனா,ஏதோ

விளங்கியது.

அவனை அறியாமல் மர்ம புன்னகை ஒன்று தோன்றியது.

அவனுக்கு அவள் கூறியதின் அர்த்தம் தெரிய வேண்டும்.

அவளை நாடி சென்றான்.

ஷைரந்தரி தன் அறையில் ஜன்னல் வழியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதில் இருந்த விருப்பம் ஒன்று சிறகடித்து பறக்க தொடங்கியது.

அதுவும் மனம் கவர்ந்து மாலையிட காத்திருக்கும் மணவாளனை நோக்கி பறந்தது அது.

"ஷைரு...!"-யுதீஷ்ட்ரன் உள்ளே பிரவேசித்தான்.

அவள் திரும்பினாள்.

நாணம் கலந்த அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

"நான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே!"

"என்ன கேள்வி கேட்டீங்க?"

"வினய்கிட்ட என்ன சொன்ன?"

"நல்லா இருக்கீங்களான்னு கேட்டேன்!"

"என்னைப் பற்றி என்ன சொன்ன?"-அவள் பதில் பேசவில்லை.

"பதில் சொல்லு!"

"நீங்க தெரிந்துக் கொண்டே கேட்கிறீங்களா?தெரியாம கேட்கிறீங்களா?"

"தெரியாம தான் கேள்வி கேட்பாங்க!"

"வினய்கிட்ட அவரோட என் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னேன்!"-யுதீஷ் முகம் பிரகாசித்தது.

"நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு சொன்னேன்!"-பிரகாசித்த முகம் இருண்டது.

"யாரு?"

"ஷைரந்தரியோட மனம் கவர்ந்தவன்."

"யாரு?"

"உங்களுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியாதா?"

"ஏன்?"

"ஒரு பொண்ணோட மனசை புரிந்துக்கொள்ள கூட முடியல??உங்களுக்கு எப்படிதான் யுதீஷ்ட்ரன்னு பேர் வைத்தார்களோ?"-கடுப்பாகிவிட்டாள் ஷைரந்தரி.

யுதீஷ் மனம் கணக்கிட்டது.

ஷைரந்தரிக்கு( திரௌபதி)   பொருந்தியவன் தர்மன்(யுதீஷ்ட்ரன்) அல்லவா?

யுதீஷ்ட்ரனால் நம்ப முடியவில்லை.

ஷைரந்தரி அவனை விலக முற்பட யுதீஷ்ட்ரன் அவள் கரத்தைப் பற்றினான்.

"நீ சொன்னது?என்னையா?"

"................."

"சொல்லு!"

"புரிந்த வரைக்கும் சந்தோஷம்!"-முனகினாள்.

"என்னது?"

"ஒண்ணுமில்லை...நீங்க இப்படியே இருங்க.

உங்களுக்கெல்லாம் இங்கே தேன்மொழி,கனிமொழின்னு எவளாவது இருப்பா..அவ தான் செட் ஆகுவா! நான் எல்லாம் உங்களுக்கு கிடைக்கவே மாட்டேன்!"-சற்று கோபமாக சொன்னாள்.

"அப்போ கிடைக்க என்ன பண்ணலாம்?"-ஷைரந்தரி அவனை பார்த்தாள்.

அவன்,கண்ணடித்தான்.

"கிடைக்கலைன்னா நானே எடுத்துக்கட்டா?"-என்றான் அவளை நெருங்கியப்படி,

"நான்...நான் போறேன்!"-அவள் ஓடிவிட்டாள்.

தனது இதயம் கவர்ந்தவள்.

தன் மனதை வைத்துக் கொண்டு,அவள் மனதை எனக்கு தாரை வார்த்தாள் என்பதே பிறவி பயனை தந்தது யுதீஷ்ட்ரனுக்கு!!!

விடிந்தால் பஞ்சாக்ஷர திதி!!!

சூரியன் இன்று உதிப்பதற்கு விரைவை காட்டுகிறான்...

அப்படி என்றால்...

நிகழ போவது தெரிந்ததா அவனுக்கு??

தனது ஆசியில் பிறப்பெடுத்த மங்கை விதியை மாற்ற இருக்கிறாள்.

ஆதிசக்தியை விடுதலை செய்ய இருக்கிறாள்...

தேவர்கள்,ரிஷிகள்,

பூதங்கணங்களால் முடியாததை சிவ பஞ்சாக்ஷரி முடிக்க இருக்கிறாள்.

அவருக்கே ஆனந்தம் பெருக்கிறது.

யாக வேள்விகள் பாஞ்சாலபுரத்தில் வளர்ந்தன.

திருவிழா தொடங்கியது.

தேர் கிளம்ப தயாராய் இருந்தது.

ஊரே திரண்டிருந்தது.

ஷைரந்தரி வினய் தடைப் பட்டத்தில் இரு குடும்பங்களும் எதிர் எதிர் திசையில் நின்றன.

அனைவரும் வந்துவிட்டனரா??இல்லையே...

பஞ்சாக்ஷரி இன்னும் வரவில்லையே!

"பூசாரி...அதான் எல்லாரும் வந்துட்டாங்கல்ல?நல்ல நேரம் முடிய போகுது!"

"இன்னும் ஷைரந்தரி வரலையேம்மா!"

"அவளுக்காக தெய்வம் காத்திருக்குமா?"-அதைக் கேட்ட ஷைரந்தரியின் தாத்தா...

"சுவாமி...நீங்க தேரை கிளப்புங்க...!"-என்றார்.

தேங்காய் உடைத்து,ஆரத்தி எடுத்தனர்.

ஊரே கூடி தேரை இழுத்தது.

ம்ஹீம்.ஒரு அசைவும் இல்லை.

மீண்டும் போராடினர்.

முடியவில்லை.

குழப்பத்தோடு நின்றவர்களின் முன் கார் வந்து நின்றது.

ஷைரந்தரி இறங்கினாள்.

ஈஸ்வரனுக்கு காட்டிய ஆரத்தி அணையாமல் அவளை வரவேற்றது.

அவள் ஷைரந்தரியாய் வரவில்லை மஹாதேவனின் பஞ்சாக்ஷரியாய் வந்திருக்கிறாள்.

தன் தாத்தாவிடம்,

"இன்னும் கிளம்பலையா?"-என்றாள்.

ஆம் என்று தலையசைத்தார்.

பூசாரி ஷைரந்தரி கையில் தேங்காயை தந்து உடைக்க சொன்னார்.

உடைத்ததும்,மீண்டும் இழுத்தனர்.

என்ன அதிசயம்???

தேர் உடனே நகர்கிறது??

அனைவரது பார்வையும் ஷைரந்தரியின் மீதே பதிந்திருந்தது.

அவள் எந்த சலனமும் இல்லாமல் தேரை இழுத்தாள்.

மகேஷ்வரன் வேண்டுதலை ஏற்றார் போலும்!!

அதன் பிரதிபலிப்பாய் தாண்டவப்ரியனின் முகத்தில் புன்சிரிப்பு!!!!

தொடரும்

Go to Episode # 16 

Go to Episode # 18 

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.