(Reading time: 6 - 12 minutes)

"ப்படி?"

".............."

"உன்னை பண்ணாம வேற யாரை கட்டிப்பிடிக்கறது?"

".............."

"நானும் மனுஷன் தான் எனக்கும் ஃபிலிங்க்ஸ் இருக்கு!"

"இருக்கும்டா இருக்கும்!"-மகேந்திர குமாரியின் திக் விஜயம் உதயமானது.

"அம்மு!"-பதறினான் சிவா.

"என்னடா நீ?எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்காத என் சிவாவா இது?"

"அது....வந்து!"

"உனக்கும் ஃபிலிங்க்ஸ் இருக்குதோ?"

".............."

"அண்ணி இந்த பையனை நம்பாதீங்க!"

"அம்மூ?"

"என்ன அம்மூ?"

"ஒண்ணுமில்லை!"

"கல்யாணம் முடியுற வரைக்கும் அண்ணிக் கூட உன்னை பார்க்க கூடாது போ!"

"அம்மூ!"

"அண்ணி நீங்க போங்க அண்ணி!"-பார்வதி நாணத்தோடு ஓடிவிட்டாள்.

"நீ இந்த பக்கம் போடா!"-சிவா மறுதிசையில் நகர்ந்தான்.

தனிமையில் இருந்த ஷைரந்தரியின் பார்வையில் அந்த சிறுமி தென்பட்டாள்.

அவள் முகம் வாடியிருந்தது.

ஷைரந்தரி அவள் அருகே சென்றாள்.

"யாத்ரா!"-அக்குழந்தை குழப்பமாக பார்த்தாள்.

"உன் பெயர் யாத்ரா தானே?"

"ம்..."

"எதுக்கு சோகமாக இருக்க?"

"நானும் அக்காவும் உன்னை தப்பா நினைச்சிட்டோம் மன்னிச்சிடு!"-பஞ்சாக்ஷரி சிரித்தாள்.

"நான் கல்பனாவை பார்க்கணும் உன்னால காட்ட முடியுமா?"

"ம்...வா!"-யாத்ரா ஷைரந்தரியை கூட்டி செல்ல அங்கு நடந்தவற்றை கவனித்து கொண்டிருந்த அசோக் அவர்களை பின் தொடர்ந்தான்.

யாத்ரா இருளும் அல்லாமல் ஒளியும் அல்லாமல் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

"அக்கா!"

"கல்பனா அக்கா!"

".............."

"கல்பனா!"-ஷைரந்தரி  அழைக்க இருளாக வந்து ஒளியாக மாறி பின் மனித உரு எடுத்த ஆன்மாவாய் கல்பனா வந்தாள்.

திகைப்புற்று பார்த்தான் அசோக்.

"முதலில் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.உன்னோட இந்த நிலைமைக்கு நானும் காரணம்!மன்னிச்சிடு!"

"விதியை யாரால் மாற்ற முடியும்?என் விதி அவ்வளவு தான்!"

"மனிதனால் முடியாத பட்சத்தில் இறைவன் அதை செய்திருக்க வேண்டும்!அதை என் அப்பா செய்யலை."

"பழியை அந்த ஈஸ்வரன் மேலே சுமத்த முடியுமா?"

"தப்பு அந்த பரமேஷ்வரனுடையதே!"

".................'

"பிறப்பால் நான் சாதாரண பெண் தான்.

ஆனால் உண்மையில் நான் மகேந்திரனின் வாரிசாவேன்.

கேள் ...உனக்கு என்ன வேண்டும்?"

"..................."

"வரமாய் இல்லை.

வரம் வேண்டி நிற்கும் அரசருக்கு வரம் தா!

செய்த பாவத்திற்கு பிராயிசித்தம் செய்ய வாய்ப்பு தா!"

"கடைசி வரை மஹாதேவனின்  அருள் போதும் !"

"அப்படி என்றால் மகேந்திர குமாரியாகிய நான் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன்!

இப்பிறப்பில் அழக்கப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற நீ மீண்டும் ஒரு பிறவி எடுப்பாய்!

நான் எவ்வாறு பஞ்சாக்ஷர திதியில் பிறந்து பஞ்சாக்ஷரி ஆனேனோ அதுபோல,நீ பஞ்சகிரக கூட்டணியில் பஞ்சமுகியாய் உதிப்பாய்!

சர்வமும் உன்னுள் அடங்கும்!

உலகின் மகா கேள்வியின் விடை நீ ஆதலால் யாத்ரா என்னும் நாமத்தோடு உலகறியப்படுவாய்!

கற்பிற்கு நீ ஒரு இலக்கணம் வகுத்ததால் இந்த பாஞ்சாலபுர மண்ணின் காவல் தெய்வமாய் அருணகிரி தேவி என்னும் பெயரோடு சிறப்பிக்கப்படுவாய்!"-வரத்தை வழங்கினாள் ஷைரந்தரி.

தியானத்தில் அமர்ந்திருந்த தாண்டவப்ரியனின் முகத்தில் கள்ள நகை பூத்தது.

அவருக்கு அடுத்த விளையாட்டிற்கு ஆள் கிடைத்தது.

எனக்கு அடுத்த கதைக்கு கரு கிடைத்தது.

அப்படி என்றால் நிச்சயம் இவள் வரலாறு வரும்!!!!

பலரின் மனம் கவர்ந்த நாயகி அல்லவா????

தொடரும்

Go to Episode # 18 

Go to Episode # 20 

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.