(Reading time: 20 - 40 minutes)

13. வாராயோ வெண்ணிலவே - சகி

ரவானது மனிதனின் வரம் எனலாம்.அழகிய இரவு தரும் ஆழ்ந்த நித்திரை மனிதனின் துன்பங்களுக்கு விடை தர வல்லது,ஒரு தினத்தின் அனைத்து கணக்குகளும் அன்றைய இரவில் அடங்குகிறது.

இனிமை தரும் இரவு பயத்தை அளித்தாலும்,

இன்பத்தையும், நல் உறக்கத்தையும்,இரசனையும் அளிக்க தயங்குவதில்லை.

Vaarayo vennilave

ஆனால்,அந்த இரவினில் உறக்கம் தொலைத்து போராடி கொண்டிருந்தான் ரஞ்சித்!!!காதலின் அழகை உணர்ந்தவனாயிற்றே!!!

வானின் இதயமாய் வெண்ணிலா இதமாய் இசை மீட்டி கொண்டிருந்தது.

தன் இதயத்தை காணவில்லை.அவள் எங்கோ மறைந்துவிட்டாள்.

அவள் இசையை அவன் பல நாளாய் கேட்கவில்லை.

கடைசி வரை என்னை அவள் புரிந்து கொள்ள மறுத்தாள்.

'என்னை மன்னித்து விடு நிலா!'அவன் மனம் இதையே மீண்டும் மீண்டும் உரைத்தது.

காதலுக்கு என்றும் உள்ள தனித்துவம் என்ன???அது...எதையுமே எதிர்ப்பார்க்காது.எதிர் அன்பை கூட எதிர்நோக்காது!!!!

ஆனால்,ஏங்கும் தன் துணை தன்னோடு இருக்க ஏங்கும்.அச்சமயத்தில் தனிமை மட்டும் உடன் இருந்தால் அந்நொடி ஆயிரம் வாள் கொண்டு இருதயத்தை பிளக்கும் வலியை அது ஆன்மாவிற்கு தரும்!!

அந்நிலையில் தான் ரஞ்சித் உள்ளான்!!

பல விஷயங்களை யோசித்தவன் விடிந்த பின் உறங்கி போனான்.

தன் மன வேதனைகளை மறைத்து கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள் வெண்ணிலா.

எதிரில் வந்த மகேந்திரனை பார்த்து புன்னகை மட்டும் பூத்துவிட்டு நகர்ந்தாள்.

எப்போதும் துள்ளி திரியும் தன் மகள் கண்ணீரோடு திரிவதைக் கண்டு தந்தை மனம் வெதும்ப தான் செய்தது.

காரில் பயணம் செய்யும் போது கவனம் சாலையில் இல்லை.மருத்துவமனைக்குள் வந்தும் எதிலும் மனம் இலயிக்கவில்லை.

அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"நிலா!"-என்றப்படி உள்ளே நுழைந்தார் மருத்துவர்  மகேஷ்வரி.

"மேம்!நீங்களா?வாங்க!"-எழுந்து நின்றாள்.

"எப்படி இருக்கம்மா?"

"நல்லா இருக்கேன் மேம்!"

"ஏ...என்ன நிவாஸ் சார் வெளியே வெயிட் பண்றார்?நீ கவனிக்காம இருக்க?"

"நிவாஸ் சாரா?"-அப்போது தான் கவனித்தாள் நிவாஸ் வந்திருக்கிறார்.உடனடியாக ரிசப்ஷனுக்கு போன் செய்து அவரை உள்ளே வர சொன்னாள்.

"கவனிக்கலை மேம்!நீங்க ஹாஸ்பிட்டல் போகலையா?"

"போகணும்.இது கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!"

-என்று கோப்பு ஒன்று தந்தார்.

"தேங்க் யூ மேம்!"

"சரி எனக்கு டைம் ஆயிடுச்சு!அப்பறம் பார்க்கலாம்!"

"மேம்!கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க!"

"இல்லைம்மா....வேலை அதிகம்!அப்பறம் வரேன்!"-பரபரப்பாக வந்து பரபரப்பாக ஓடினார்.எதிர்ப்பட்ட நிவாஸிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு நகர்ந்தார்.

"உள்ளே வரலாமா?"

"என்ன சார் நீங்க?வாங்க!"

-அவர் சிரித்தப்படி வந்தார்.

"உட்காருங்க சார்!"-இருவரும் அமர்ந்தனர்.

"எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்மா!வாழ்த்துக்கள் ஒரு நல்ல மருத்துவரா உயர்ந்திருக்க!"

"அதுக்கு நீங்களும் முக்கிய  காரணம் சார்!எப்போ கோவை வந்தீங்க?"

"ஒரு வாரம் ஆச்சு!குடும்பத்தோட செட்டில் ஆயிட்டேன்!"

"நல்ல விஷயம்!"

"நீயுமா?!"

"இல்லை சார்!சும்மா கொஞ்ச நாள்!"

"அப்போ!இது பிரான்ச்சா?( branch)"

"ஆமா சார்!"

"கிரேட்!"

"ஹாஸ்பிட்டல் வந்திருக்கீங்க?எதாவது பிரச்சனையா?"

"ச்சே!ச்சே!ஒரு ஜென்ரல் செக் அப்! ரிப்போர்ட் வாங்க வந்தேன்!"

"ஓ...உடனே தர சொல்றேன்!"-போனை எடுத்து ஏதேதோ ஆணை பிறப்பித்தாள்.

பேசி முடித்து தொலைப்பேசியை வைத்தவளிடத்தில்,

"ரஞ்சித் எப்படி இருக்கான்?"என்று கேட்டார் நிவாஸ்.அவள் விழி விரிய பார்த்தாள்.

"உண்மையிலே!நீ ரொம்ப லக்கி!சதா சர்வ நேரமும் உன்னைப் பற்றி தான் பேசுவான்!"-அவளிடம் மௌனம்.

"அந்த ரிப்போர்ட்ல தான் பாவம் மனசு உடைந்து போயிட்டான்!"

"என்ன ரிப்போர்ட்?"

-குழப்பமாய் கேட்டாள்.

"என்ன தெரியாத மாதிரி கேட்கிற?ரஞ்சித்துக்கு கேன்சர்னு ரிப்போர்ட் வந்தது உனக்கு தெரியாதா?"-அவள் ஆடிப் போனாள்.

"என்ன சொல்றீங்க சார்?"

"என்னம்மா ரஞ்சித் உன்கிட்ட சொல்லலை?!"-என்று விவரத்தை கூறினார்.

"கடைசியில தான் ரிப்போர்ட் மாறினது தெரிந்தது!அப்பறம்...தான் இன்னும் உடைந்து போயிட்டான்."-அவள் கண்களில் கண்ணீர்.

அப்படி என்றால்,அவன் செய்தது எல்லாம் எனக்காக தான் இருக்கும்.தவறு செய்துவிட்டேனே!!

"சரி நிலா!எனக்கு டைம் ஆயிடுச்சி!நான் கிளம்புறேன்!"

"சார்...உங்க ரிப்போர்ட் ரிசப்ஷன்ல வாங்கிக்கோங்க சார்!"

"தேங்க்ஸ்மா!"

"ரஞ்சித்தை கேட்டேன்னு சொல்லு!"-என்றப்படி நகர்ந்தார்.அப்படியே அமர்ந்தாள் நிலா.

இறைவன் பல நேரங்களில் வேடிக்கை பார்ப்பான்.எப்போதும் பார்த்தப்படி இருக்க மாட்டான்!"

இப்போது என்ன செய்ய?அவன் பேச்சை கேட்காமல் அவனை திட்டி விட்டேனே!!!

ஆனாலும் அவளுக்கு கோபம் இறங்கவில்லை.

கைப்பேசியை எடுத்து அவனுக்கு தொடர்பு கொண்டாள்.

நல்ல உறக்கத்தில் இருந்தவன்,கண்களை திறந்தான்.கைப்பேசி திரையில் அவளின் புகைப்படத்தை கண்டதும் சற்று அதிர்ச்சி தான்.அன்று போல மாற்றி அழைக்கிறாளா????

தயக்கத்தோடு எடுத்தான்.

"நீ நினைக்கிறா மாதிரி இது உன் ஃப்ரண்ட் நம்பர் இல்லை.நான் ரஞ்சித் பேசுறேன்!"-அவன் பேசிக்கொண்டே போனான்.

"உஷ்!"-அமைதிப்படுத்தினாள்.

"என்ன?"

"என்ன வேலை பண்ணிட்டு இருந்தாலும் விட்டுட்டு அன்னிக்கு வந்த அதே இடத்துக்கு வா!"-இணைப்பை துண்டித்தாள்.

குழப்பத்தில் உறக்கமே போனது அவனுக்கு!!!

"என்ன ஆயிற்று இவளுக்கு?மீண்டும் திட்ட போகிறாளா?நான் கட்டிய தாலியை என்னிடமே தர அழைக்கிறாளா?போகலாமா?வேண்டாம்..."-தலையணையை அணைத்து கொண்டு நீண்ட நேரம் யோசித்தான்.

பின் ஏதோ முடிவு வந்தவனாய்,தயாராகினான்.

இது தானே கடைசி சந்திப்பு என்ற எண்ணத்தோடு!!!!

30 நிமிடத்தில் அவள் அழைத்த இடத்திற்கு வந்தாள்.அவள் முன்னால் வந்துவிட்டிருந்தாள்.

இவன்,கோபமாக முகத்தை செய்து கொண்டு,

"என்ன வேணும் உனக்கு?அதான் வேணாம்னு போக சொன்னல்ல?இப்போ எதுக்காக வர சொன்ன?"-அதீத கோபத்தோடு கத்தினான்.இவள் கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.