(Reading time: 9 - 18 minutes)

ர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிகப் பின்தங்கிய கிராமம்.

“ஏலே அஞ்சல, என்னடி பண்ற.  தேவிப்புள்ள வந்துடுச்சா?”, சாராய வண்டியாக உள்ளே நுழைந்தான் மணி. 

“இன்னும் இல்லைய்யா.  என்னையா இது காலைலேயே போட்டுட்டு வந்துட்ட? நாசமாப் போறவனே”, கத்தியபடியே உள்ளே சென்றாள் அஞ்சலை.

“ஏண்டி காலைல போட்டா, உள்ள எறங்காதா.  கூமுட்டை கணக்கா கேள்வி கேக்கற,  சரி சோறு ஆக்கிட்டியா. பசிக்குதுடி”

“ஹாங் அப்படியே நாலஞ்சு மணிநேர வேல செஞ்சு சோர்ந்து போய் வந்திருக்க பசிக்க”

“மனுஷன்னா பசிக்கனும்டி. அப்போதான் உடம்பு நல்லா இருக்குதுன்னு அர்த்தம்”

“ஆமா எல்லாரும் கேட்டுக்கோங்க டாக்டர் சொல்லிட்டாரு”, அஞ்சலை தோள்பட்டையில் இடித்தபடியே மணியை நக்கலடித்தபடி செல்ல அவர்களின் செல்ல மகன் அடுத்த தண்ணி வண்டி வெற்றி  ஏகப்பட்ட விழுப்புண்களுடன் வீட்டினுள் நுழைந்தான்.

“டேய் இன்னாடா இது,  எங்க விழுந்து எழுந்து வர.  இம்மாம் அடி பட்டிருக்கு”, தள்ளாடியபடியே நடந்த மகனை அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்து, அவனின் காயங்களை ஆராய்ந்தாள் அஞ்சலை.  சட்டை அங்கங்கே கிழிந்து எல்லா இடத்திலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“யம்மா, மெதுவாம்மா.  பட்ட அடியோட வலிய விட நீ தொடும்போது இன்னும் வலிக்குது”

“நல்லா வலிக்கட்டும்.  எரும, எரும.  வீட்டுல தாங்காம கோவில் மாடுக் கணக்கா சுத்தி வர வேண்டிது.  ஒரு வேலைக்கு போகத் துப்பிருக்கா”

“அம்மா இது அநியாயம் சொல்லிட்டேன்.  ரெண்டு புள்ளப் பெத்த உன் புருசனே  இன்னும் வேலைக்குப் போகல.  என்னிய போக சொல்ற”, அவன் பேசிய நியாத்தில் கடுப்பான அஞ்சலை காயத்தை இன்னும் அழுத்தித்  துடைக்க வலியில் கத்தினான் வெற்றி.

“நாயி நாயி, இப்படியே வெட்டி நாயம் பேசிட்டு நட.  உன்னைய விட எட்டு வயசு சின்னப் புள்ள.  எத்தனை அறிவோட இருக்கு.  நீயேண்டா இப்படி என் உசுர எடுக்கற”

“அம்மா வாயாலத் திட்டும்போது எதுக்கு கை அழுத்துது.  மெதுவா தொடைமா வலிக்குது”

“எங்கடா போய் அடிபட்டுட்டு வந்த?”

“பக்கத்து ஊருல சேவ சண்டை நடந்துச்சும்மா.  நானும், சங்கரும் அதுல கலந்துட்டோம்.  பக்கத்து ஊரு நாயிங்க பொய்யாட்டம் ஆடி ஜெய்ச்சுட்டாங்க.  அதுல கடுப்பாகி நாங்க கத்த, அவங்க கத்த வாய் சண்ட அப்படியே முத்திப் போய் கை சண்ட ஆயுடுச்சு”

“ஆமா பெரிய சண்டியரு,  இவனுங்க ரெண்டு பேரும்.  நான் அடிச்சாலே குப்புற அடிச்சு விழுவ நீயி.  உனக்கு எதுக்கு இந்த வெட்டி வீராப்பு’

“அம்மா அனாவசியமா பேசாத.  சண்டைன்னு வந்தா சட்டை கிழிஞ்சாக் கூட நாங்கல்லாம் விட மாட்டோம் தெரிஞ்சுக்கோ”

“யாரு, நீங்கதானே.  சட்டைய மட்டும்தான் உங்களால கிழிக்க முடியும்”, வாய்க்கு வாய் மகனுக்கு கொடுத்தபடியே அவனின் காயங்களைத் துடைத்து மருந்திட்டாள் அஞ்சலை. இவர்களின் வாயாடலை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் மணி. 

“ஏன்யா இங்க என்ன பயாஸ்கோப் படமாக் காட்டறோம்.  அப்படியே ஆன்னு பாக்கற.  போங்க ரெண்டு பேரும்.  சோறு வடிச்சு வச்சிருக்கேன்.  போய்க் கொட்டிக்கோங்க”

“ஆமா, அப்படியே சிக்கன் பிரியாணி பண்ணி வச்சிருக்கற  மாதிரி அலுத்துக்கற.  ஒரு சோறும், கொழம்பும் இருக்கப் போகுது.  இதுக்கு இம்புட்டு அலட்டல்”, மணி அலுத்தபடியே, வெற்றியுடன் சென்று சாப்பிட அமர்ந்தான்.  அப்பொழுது அவர்களின் மகள் தேவி உள்ளே நுழைந்தாள்.

“எல்லாரும் இன்னைக்கு வீட்டுல இருக்கீங்களே.  வானம் இன்னைக்கு பொத்துட்டு ஊத்தப் போகுது”, என்று கிண்டலடித்தாள்.

“ஏய் சின்னக் குட்டி.  எங்களை கிண்டல் பண்ணினது போதும்.  நீ எங்க போய் ஊரை சுத்திட்டு வர்ற”

“நான் ஒண்ணும் ஊர் சுத்தப் போகலை.  இன்னைக்கு எனக்கு பரீட்சை ரிசல்ட் வருது.  அது பாக்கத்தான் ஸ்கூல்க்கு போய் இருந்தேன்”

“என்னாச்சு ஊத்திக்கிச்சா.  உன் மொகறையைப் பார்த்தாலே தெரியுதே.  நீ எல்லாம் எங்க பாஸ் பண்ணி இருக்கப் போற.  மணியக்கவுண்டர் வீட்டுல சாணி தட்ற வேல இருக்குதாம்.  நாளைல இருந்து போய்டு”, வெற்றி சொல்ல தேவி அவனை முறைத்தாள்.

“ஏண்டா அவளை என்ன உன்னைய மாதிரி தற்குறின்னு நினைச்சியா.  என் பொண்ணு அந்த சரஸ்வதி சாமி மாதிரிடா.  இதுவரைக்கும் எல்லாப் பரிட்ச்சைலயும் அவதான் மொதோ வந்திருக்கா.  இப்போவும் நல்லாத்தான் வாங்கி இருக்கும்.  ஏம்மா தேவி, அம்மா சொல்றது சரிதானே”

“ஆமாமா, 470/500  மார்க்கு.  பத்தாங்கிளாஸ்ல நான்தான் எங்க ஸ்கூல்லயே மொதோ வந்திருக்கேன்.  எங்க டீச்சர் எல்லாம் எப்படி பாராட்டினாங்க தெரியுமா.  நாளைக்கு HM உன்னையும், அப்பாவையும் அவங்களை வந்து பாக்க சொன்னாங்கம்மா.  மேல  படிக்கறதப்பத்தி பேசணும்ன்னு சொன்னாங்க”

“என்னது மேலப் படிக்க போறியா.  அதெல்லாம் வேணாம் புள்ள.  ஒழுங்கா வீட்டோட இரு.  இம்புட்டு படிச்சதுக்கே உனக்கு மாப்ள கெடக்கறது கஸ்டம்”

“அடப்போய்யா, பெரிய மாப்ள.  இந்தாள் கெடக்கராறு.  நீ விடுடி ராசாத்தி.  அம்மா உன்னைய படிக்க வைக்கிறேன்.  நாளைக்கு அம்மா வந்து உங்க HM பார்க்கறேன்”, என்று கூற சந்தோஷத்துடன் சாப்பிட ஆரம்பித்தாள் தேவி.  அவளின் சந்தோஷம் இன்னும் எத்தனை நாளோ??????? 

தொடரும்

Episode # 07

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.