(Reading time: 20 - 40 minutes)

காதல் என்பது ஒழுக்கப்பிறழ்வு, உடல் இச்சை, அருவருப்பு, பெரும் பாவச் செயல், இழி நிலை, கீழ்தரம் என நம்பி வளர்ந்தவள் அவள். அவள் வளர்க்கப் பட்ட விதம் அது. அதுமட்டுமின்றி ஆண்களுடன் பழக அனுமதிக்கபடாத குடும்பம் மற்றும் சமூக அமைப்பில் வளர்ந்தவள் என்பதால் ஆரம்பத்தில் சரித்ரனிடம் பழகவே தடுமாறியவள் தான்.

ஆனால் அவன் உறவினன், அவனோடு பழக சித்தப்பாவின் அனுமதியும் இருக்கிறது என்ற உணர்வு சரித்ரனுடன் பழக அவள் மனதை அனுமதித்தது. அவன் அருகாமை அவனுடனான நட்பு எல்லாம் பிடித்தாலும் அது உறவினர்களுக்கு இடையான உறவு நிலை செயலாகவே அவளுக்கு தோன்றி இருந்ததே தவிர வேறு விதமாக அவளுக்கு தோன்றவில்லை.

இப்பொழுதோ சரித்ரன் காதலை சொன்னதும் அவன் அவளை ஆரம்பத்திலிருந்தே கீழ்தரமான நினைவுடனே பார்த்திருக்கிறான் பழகி இருக்கிறான் என தோன்றிவிட்டது அவளுக்கு. நல்லவன் போல் இவளை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான் அவன் அவளைப் பொறுத்தவரை.

முதல் முதலாக அவள் முழுதாய் நம்பிய ஆண்மகன் அவள் விரும்பி ஏற்ற நட்பு அதுவும் கடைசியில் இதற்குதானா? உடைந்து போயிருந்தாள் அவள். அதோடு பெரும் அவமானமாகவும் உணர்ந்தாள்.

இதில் சித்தப்பாவை போய் பார்ப்பது எப்படி? ஒழுக்கமாய் ஒழுங்காய் நடந்து கொள்ளும் பொண்ணுட்ட எவன் ஐ லவ் யூ சொல்வான்?  எல்லாம் இவள் அவனுக்கு குடுத்த இடம் தானே என நினைப்பார்களோ…

ஆக அவள் தனிமையில் தன்னறையில் விழுந்து கிடக்கவே எண்ணினாள். ஹாஃஸ்டல் கேட்டிலிருந்து கூப்பிட்டால் உள்ளே நிச்சயம் கேட்காது என தெரியும் இருந்தும் முயற்சித்துப் பார்த்தாள். பலன் பூஜ்யம்.

எப்படியும் இரவு தூங்கப் போகும் முன் இவள் தோழி ப்ரீத்தி வாக்கிங் வருவாள் இன்னும் இரண்டு மாணவிகளுடன்.

ஆக அந்நேரம் உள்ளே போய் கொள்ளலாம். காத்திருக்க தொடங்கிவிட்டாள். மத்தபடி கொதித்து தவித்து குழம்பிக் கொண்டிருந்த மனதில் சித்தப்பா தேடுவாரகள் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை.

தூரத்தில் அவளைப் பார்த்த நொடி ஆழ்ந்த சமுத்திரம் அளவு அவன் மனதினுள் அமைதி சமாதானம் ஆறுதல் எல்லாம். சரித்திரனுக்கு தெளிவாக புரிந்தது அவன் வாழ்வு எப்படியும் இவளோடுதான்.

ஆனால் அருகில் வர வர அவனுக்குள் ஏறிக் கொண்டு சென்றது கோபம். என்னதான் இருக்கட்டுமே அவள் தன் சித்தப்பா நிலையை யோசித்திருக்க வேண்டாமா? அதோடு அவனுடன் காரில் வருவதைவிட இப்படி இங்கு தெருவில் தங்குவது பாதுகாப்பானதாமோ அவளுக்கு.

இந்த இடத்தில் அவளை யாரும் எதுவும் செய்ய முடியுமே..அவள் அலறினால் கூட யாருக்கும் கேட்காதே…..தண்ணி அடித்துவிட்டு எதாவது ஒரு செக்யூரிட்டி வந்து வம்பு செய்தால் கூட என்ன செய்வாள்? ஆக என்னைப் பார்க்க எப்படி பட்டவானாக தோன்றிவிட்டது அவளுக்கு?

அவன் காரை அவளும் அடையாளம் கண்டு கொண்டு உடல் விறைத்தாள் ஷாலு.

அவளை ஒட்டி சென்று டயர் தேய ப்ரேகிட்டு நிறுத்தினான் காரை.

கதவை திறந்து இறங்கியவன் அறைந்த வேகத்தில் அலறியது கதவு. “கிளம்பு…” உறுமினான் சரித்ரன்.

“உங்க கூட நான் ஏன் வரணும்? நீங்க யாரு எனக்கு? உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க…” அவளும் வெட்டினாள்.

“ஷாலு!!!!” இது கர்ஜனை.

“ஒழுங்கு மரியாதையா  போய்டுங்க ஐ’ல் கால் த போலிஸ்….”

அவ்வளவுதான் சரித்ரனின் பொறுமை எல்லை கண்டிருந்தது. அவள் பேக்கை தூக்கி பின் இறுக்கையில் போட்டவன், குட்டியாய் ஒல்லியாய் இருந்த ஷாலுவை தன் வலக்கையால் இடையோடு வளைத்து தூக்கியபடி முன் கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை சென்டர் லாக் செய்தான்.

அவனிடமிருந்து துள்ளிப் போய் அடுத்த இருக்கையில் விழாத குறையாக அமர்ந்தாள் ஷாலு.

நிச்சயமாய் இப்படி ஒரு செயலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை…..இப்பொழுதோ பயந்து நடுங்கினாள். என்ன செய்யப் போகிறான் இவன் அவளை? சீண்டப்பட்ட ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வானாமே? எதேதோ ஞாபகம் வர மிரண்டாள். இப்படிப் பட்டவனா இவன்? ஐயோ…..

அவரமாக தன் பக்க கதவை திறக்க முயன்றாள். சென்ட்ரல் லாக் காரணமாக அது திறக்க மறுத்தது. பயம் மற்றும் அதிர்ச்சியில் அவளுக்கு வாயில் சத்தம் கூட வரவில்லை.

கதவோடு பம்மியவளின் முகத்திலிருந்து வேர்வை முத்துக்கள். இதற்குள் கார் அவளது வளாகம் தாண்டி முக்கிய சாலை வந்திருந்தது.

பறந்து கொண்டிருந்தது கார் அவன் கையில்.

எக்கிரும்பாய் எரிமலையாய் அவன் முகம். இவள் பார்வை உணர்ந்தானோ அவள் முகம் பார்த்தான் திரும்பி.

அவள் பயப்பார்வை கண்டவனுக்கு அவள் எண்ண ஓட்டம் புரிய இன்னுமாய் ஏறியது எரிச்சல். கூடவே அவனுக்கு ஏதோ ஒரு சிறு புரிதல்.

“போடி இவளே….உன்னை ஹர்ட் செய்துட்டு மீதி வாழ்க்கைக்கு நான் என்னடி செய்யப் போறேன்….போ….உன்னை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம்…”

ன்  மொபைலை எடுத்து மாமாவிற்கு ஷாலுவை கூட்டி வருவதாக தகவல் சொன்னவன் அதன் பின் ஒன்றும் பேசவில்லை. சாலையை விட்டு பார்வையை திருப்பவும் இல்லை.

அவன் முகத்தையே அடிக்கடி ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டு வந்தாள் ஷாலு.

அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற எண்ணம் தான் காரணம்.

சரித்ரன் தன் அத்தை வீட்டு போர்டிகோவை அடையும் போது அங்கு அத்தையும் மாமாவும் இவர்களுக்காக காத்து நின்றனர்.

கார் நிற்கவும் விழுந்தடித்து இறங்கினாள் ஷாலு. சரித்ரனோ காரிலிருந்து இறங்காமலே பின் புற இருக்கையில் கிடந்த அவளது பேக்கை கை நீட்டி எடுத்தவன் அதை வெளியே வீசாத குறையாய் தூக்கிப் போட்டான்….

“இனிமே இங்க வரமாட்டேன் அத்தை…குறஞ்சது இவ கல்யாணம் வரைக்காவது….” சொல்லிவிட்டு யார் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க கூட செய்யாமல் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

யோ தேவனே!! ரேயா மனம் அலற, மூளையோ இதயம் வெடிப்பதை உணர ஆரம்பித்த நொடி அவளை இழுத்த கை, இரும்பென்றிருந்த ஒரு தோளில் சாய்த்தது.

தாறுமாறான கற்பனை அவளை கொல்ல தொடங்கிய நொடி “ஏய் முயல் குட்டி, நான் தான் என்றது மென் குரல். ஆதிக்!!!!!!

கனவா இது! இந்த சூழலிலும் அவன் நினைவா?

ஆனாலும் அவன் ஃஸ்பரிசம் இது கனவல்ல நிஜம் என்றது.

 தன் தோளோடு சேர்த்து அவன் அவளை பிடித்திருந்த விதத்தில், அங்கிருந்த சிறு வெளிச்சத்தில்  கண் உயர்த்திய அவளுக்கு தெளிவாக தெரிகிறது அவன் தாடையும் முகமும். இவள் பின்னிருந்து  இவளை போல் முட்டு மடக்கி தரையில் அமர்ந்திருந்தான் அவனும்.

 ஓர் புறம் உயிர் வரைப் பாய்கிறது நிம்மதி எனினும், இன்னும் பயம் குறைய மறுக்கிறது. அந்த குண்டர்களின் சத்தம் அருகே கேட்கிறதுதானே… இவன் ஒருவன். அவர்கள் எத்தனை பேரோ? எப்படி இவர்கள் தப்பிக்கப் போகிறார்கள்?

அவன் இவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டால் பயத்தில் இவள் ஏதும் சத்தமிட்டுவிடுவாளோ என்ற கலவர உணர்வு தோன்ற தன் இரு கைகளாலும் அவன் கையை தன் வாயோடு சேர்த்து அழுத்திப் பிடிக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.