(Reading time: 16 - 31 minutes)

" ஹே அமுல்பேபி .. என்னதிது ? போட்டு தாக்குற ? எப்படி கண்டுபிடிச்ச ?" என்று கேட்டாள்  அனு ..

" அன்னைக்கு ஜெனி அப்பாகிட்ட கவீன்  மாட்டின பொது , நானும் உன்னோடு தானே இருந்தேன் "

" ஹே, ஆனா நான் சந்துரு அண்ணா இல்லைன்னு எப்படி தெரியும் ?"

" உங்க அண்ணா என்ன பெர்பியும் யூஸ் பண்ணுவார் எனக்கு தெரியாதா ?" என்று சட்டென சொல்லி விட்டிருந்த  நந்து உதடுகளை கடித்து கொண்டாள் ..

" ஓஹோ இது வேறயா ? பார்க்கறதுக்கு அமுல்பேபி மாதிரி இருந்துகிட்டு , நீ அமலாபால் ரேஞ்சுக்கு டூயட் பாடுறியா ? இன்னைக்கு லேட்டா எழுந்ததுக்கு இதான் பனிஷ்மெண்ட் .,.. இரு .. இந்த கதையை அண்ணா காதில் போட்டு வைக்கிறேன் " என்றாள்  அனு ..

" ஐயோ அனு  ப்ளீஸ் வேணாம் " என்று நந்து கெஞ்ச ஆரம்பிக்கும்போது அனு  துள்ளலாய் தனது அறைக்கு சென்றுவிட்டாள் .. அவளை பின்தொடர்ந்து நந்துவும் வர

" தீப்தி இங்க இல்லைன்னு உனக்கு எப்படி தெரியும் அனு  ?" என கேட்டாள்  ஆரு .. அப்போதுதான் தீப்தி அறையில் இல்லாததை நந்துவும் நினைவு கூர்ந்தாள் .. அவள் முகம் போன போக்கிலேயே தலையசைத்த அனு 

" இப்போ புரியுதா , அனு  ஏன் உங்க ரெண்டு போரையும் துணைக்கு வெச்சுகிட்டு எதுவும் பண்ணுறது இல்லன்னு ?" என்றாள்  அனு ..

" சரி சரி ... ஓவரா யோசிச்சு இல்லாத மூளையை கசக்காதிங்க .. அவ காலையிலேயே  கெளம்பிட்டான்னு  என் ஒற்றர்களில் ஒருத்தர் செய்தி சொன்னாங்க .. இப்போ அதுவா முக்கியம் ? வாங்க கோவிலுக்கு போகலையா ?" என்றபடி உற்சாகமாய் குளிக்க சென்று விட்டாள்  அனு ..

" என்ன நந்து , இவ துள்ளலே சரியில்லையே "

" கதிர் அண்ணா வரார்ல .. அதான் .. "

" ஹ்ம்ம் ... வா அவ வர்றதுக்குள்ள நாமளும் ரெடி ஆகிடுவோம் " என்றபடி நந்துவுடன் தயாரானாள்   ஆரு ..

" ம்மு ரெடியா ?" என்று பத்தாவது முறையாக தனது தாயார் நளினியை கேள்விகேட்டு பாடாய் படுத்தி விட்டான் சந்துரு .. பேப்பர் படித்து கொண்டே மகனை நோட்டம் விட்டார் ஞானபிரகாஷ் .. என்னதான் கதிர் குணமான பிறகு, சந்துரு மாறிவிட்டான் என்றாலும் கூட , அவனது முழு மாறுதலுக்கு காரணம் இது மட்டும்தானா என்ற சந்தேகம் அவருக்கு அதிகமாகவே இருந்தது . சந்துருவின் தோற்றத்தில் இருந்து பேச்சு வரை அனைத்திலும் புத்துணர்ச்சி பிரதிபலித்தது .. என்னதான் அவருக்கு அதில் மகிழ்ச்சி என்றாலும் கூட , மகன் சரியான வழியில் தான் இருக்கிறானா என்பதில் தந்தை அக்கறை கொள்வது இயல்புதானே .. அதனாலேயே சந்துருவின் மேல்  கூடுதல் கவனம் செலுத்தினர் .. கரும்பச்சை நிற கதர்  சட்டையும் வேஷ்டியும் அணிந்து மாப்பிளை போல இருந்தான் சந்துரு ...

" டேய் கதிர், நீயும் ஏன்டா லேட் பண்ணுற ?" என்று சந்துரு குரல் கொடுக்கும்போது அரக்கு வண்ணகதர் சட்டை அணிந்து அசைத்தலாய் இருந்தான்.

" கதிர் "- ஞானப்ரகாஷ்

" சொல்லுங்க அப்பா "

" என்ன எல்லாரும் ஒரே குஷியா இருக்குற மாதிரி இருக்கு ? வேஷ்டி சட்டையெல்லம் போட்டு கலக்கலா இருக்கீங்க  ? " ஆராயும் பார்வையுடன் கேட்டார் அவர்.. லேசாய் முதலில் தடுமாறியவன் சட்டென சுதாரித்து கொண்டு

" அம்மா , கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க அப்பா .. அதான் நாங்களும் துணைக்கு போகிறோம் " என்றான் ..

" கோவிலுக்கா " என்றவர் இருவரையும் சந்தேகமாய் பார்த்தப்படி

" ஏன்டா , அலைபாயுதே படத்துல வர்ற மாதிரி எனக்கு தெரியாமல் கல்யாணம் ஏதாச்சும் பண்ணிக்க போறிங்களா ?" என்று கேட்டு வைத்தார் .. அவர் கேட்டு வைத்த விதத்தில் இருவருமே களுக்கென சிரிக்க

" அட என்ன அங்கிள் நீங்க ? உலகமே ஓகே கண்மணி ஸ்டைலில் லிவிங் டுகெதர் ஆ இருக்கும்போது நீங்க இன்னும் பழைய  டிரென்ட் பத்தி சொல்றிங்களே " என்று சொல்லி அங்கு தானாக ஆப்பு தேடி கொள்ள ஆஜரானவன்  நம்ம கவீனேதான் ..

" டேய் , நீ இங்க என்னடா பண்ணுற ?" என்று ஒரே நேரத்தில் கேட்டனர் சந்துருவும் கதிரும் .. சந்துருவின் தந்தையோ அவன் சொன்ன பதிலில் கொஞ்சம் கொதித்து தான் போயிருந்தார் .. மூவரின் முகத்தையும் பார்த்தான் கவீன் .. " அடடே .. சிங்கம் தலையில வாயை விட்டுடியே டா ... தலையில வாயா ? ச்சை ... பயத்துல மைண்ட் வாய்ஸ்லயே  உலருரேனே... சிங்கத்தின் வாயில தலையை விட்டுடேனே ..அதுவும் மூணு சிங்கம் .. " என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு லேசாக கால்கள் தந்தி அடித்தது..

" அது ... அதுவந்து ... இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா .. என்ன பண்ணுறதுன்னு தெரில .. இந்த அருணும் செல்வாவும்  ஊருக்கு போயிட்டானுங்க .. அதான் ஆன்டி கையால சுட சுட தோசை சாப்பிடலாம்னு வந்தேன் அண்ணா " என்றான் பவ்யமாய் ..

" அண்ணா வா ? எப்போ இருந்துடா உனக்கு இவ்வளவு பணிவு ? "என்றபடி சந்துரு ஒரு பக்கம் தோளில்  கைபோட , இன்னொரு பக்கம் ஏன் சும்மா விடனும் , என்ற நல்லெண்ணத்தில் கதிரும் இணைந்து கொண்டான் .. வெளியிலிருந்து பார்க்க மூவரும் முஸ்தபா முஸ்தபா பாட்டு பாடுற மாதிரி இருந்தாலும் கதிர் மற்றும் சந்துருவின் கரங்கள் லேசாய் கவீனின்  முதுகெலும்பை எண்ணி கொண்டிருந்தன ..

" அண்ணா , கொஞ்சம் பக்கத்துல வாங்க .. " என்று தன்னைவிட உயரமாய் இருந்த சந்துருவை பார்த்து சொன்னான் ..

" ஏன் ?" என்பது போல கெத்தாய்  புருவம் உயர்த்தினான் சந்துரு ..

" உங்க உயரத்துக்கு , நான் ஏணி  மேல ஏறி நின்னுதான் ரகசியம் பேசணும்போல .. ப்ளீஸ் அண்ணா " என்று கவீன்  கெஞ்சவும் சிரிப்பை மறைத்தபடி " என்னடா ?" என்று குனிந்தபடி கேட்டான் ..

" அனு  உங்களுக்கும் , நந்து கதிர் அண்ணாவுக்கும் தங்கையாய்  இருக்கும்போது இந்த அடியேன் உனக்கு தம்பியாய்  இருக்க கூடாதா " என்று கெஞ்சும் குரலில் கேட்டு வைத்தான் கவீன் .. அவன் ரகசிய பேச்சில் கலந்து கொண்ட கதிர்

" வாய்தாண்டா  உன்னை வாழ வைக்கிறது " என்றான் ..

" அது என்னவோ சரிதான் .. இல்லனா என்னை எப்பவோ நாய் தூக்கிட்டு  போயிருக்கும் " என்றான் அவனும் சோகமாய் ..

" விடுடா .. அந்த நாய்க்கு நல்ல நேரம் " என்றான் சந்துரு .. இன்னமும் பார்வையில் இருந்த கோபத்தை கொஞ்சமும் குறைக்காமல் கோபமாய் நின்றார்  ஞானப்ரகாஷ் ..

" நீ , நந்திதா , அனுக்ரா ப்ரண்டு  தானே ?"

" ஆ .. ஆமா அங்கிள் "

" அவங்க எல்லாம் எவ்வளோ பொறுப்பா இருக்காங்க .. நீ ஏன் இப்படி இருக்க ? " என்று ஒரு பார்வையை வீசினார் .. அவர் குரலிலேயே கப் சிப் என்றாகிவிட்டான் கவீன் .. அதே நேரம் மனதிற்குள் " இந்த அனு  நம்ம அங்கிளை கூட மயக்கி வெச்சு இருக்கா பாரு " என்று நினைத்து கொண்டான் ..

" கவீன் ,இப்போதானேடா  வாய்தான்  வாழ வைக்கிதுன்னு பேரு வாங்கின ..அதற்குள் நீ அமைதி ஆகிட்டா ,  நீ பின்வாங்குற மாதிரி ஆகாதா ? " என்று அவனது உள்மனம் சீண்டிவிட சட்டென யோசித்து பதில் அளித்தான் கவீன் ..

" அது என்னவோ தெரில , என்ன மாயமோ புரியல அங்கிள் , உங்களை பார்த்ததும் எனக்கு வீட்டு ஞாபகம் வந்திருச்சு ... என் அப்பாகிட்டயும் அப்படித்தான் எதாச்சும் வாய் பேசி திட்டு வாங்கிப்பேன் ..அவர் திட்டினா எனக்கு மனசே நிறைஞ்சிடும் அங்கிள் .. அதான் இப்பவும் அப்படி பண்ணினேன் " என்று பவ்யமாய் கூறி கதிர் , சந்துரு இருவரையும் மானசீகமாய் ரத்த கண்ணீர் வடிக்க வைத்தான் .. சந்துருவின் தந்தையே இதை எதிர்பார்க்கவில்லைதான் .. " சூப்பர்  டா ..இப்போதான் நீ பார்ம்  ல இருக்க ..இப்படியே இரு " என்று தன்னைத்தானே தட்டி கொடுத்தவன் அடுத்து அவர் என்ன சொல்வார் என்று பார்த்திருந்தான் .. அவரோ அதுவரை மறைத்து வைத்திருந்த புன்னகையை பெரிதாக்கினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.