(Reading time: 16 - 31 minutes)

" வீன் , நீ, அனு உங்க ரெண்டு பேருடைய சேட்டையை பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் " என்று சொல்லிவிட்டு சந்துருவிடம் " ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னபடி அவர் அறைக்குள் சென்றார் ..

" அண்ணா "

" என்னடா "

" உங்க அப்பா நல்லவரா கெட்டவரா ?"  என்று கேட்டு வைத்தான் கவீன் ..

" டேய் கதிர் "

" மச்சான் , இந்த கொசுவை நான் அடிக்கிறேன் .. நீ டென்ஷன் ஆகாதே " என்று கதிர் அவனை துரத்த  கவீன்  உயிருக்கு பயந்து ஓட அந்த காட்சியை கண்டு கலகலவென சிரித்தனர் சந்துருவும் நளினியும் ..

" மணி ஆச்சு அம்மா "

" சாரி கண்ணா .. நந்துவுக்காக குலப் ஜாமுன் செய்திட்டு இருந்தேன் " என்றார் நளினி ..

" சூப்பர் ஆன்டி நீங்க .. யாரு பேரை சொன்னா சந்துரு அண்ணா சமாதானம் ஆகிடுவார்னு தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க  " என்று அவரை மாட்டிவிட பார்த்தான் கவீன் ..

" உன்னை அனு  தண்டிப்பதில் தப்பே இல்ல .. இரு கோவிலில் இருக்கு உனக்கு " என்று அவனுக்கு சரமாரியாய் பேசி கொண்டிருந்தார் நளினி ..

" சரிடா போகலாமா ?" என்று நளினி கேட்டதுமே கார் சாவியை கைகளில் சுழற்றியபடி " எஸ் அம்மு " என்றான் சந்துரு உற்சாகமாய் ..

" டேய் அஞ்சு நிமிஷம் நில்லுன்னு சொன்னேன்ல ?  " என்ற அதட்டலுடன் வந்து சேர்ந்தார் அவனது தந்தை ..

" என்ன அப்பா இது கோலம் ?"

" ஏன்டா நான் கோவிலுக்கு வேஷ்டி சட்டை போட்டுட்டு வரக்கூடாதா ?" என்று அவர் கேட்டதும் மற்ற நால்வருமே மயக்கம் போடாத குறையாய் விழித்தனர் ..

" என்ன , நீயும் சின்ன பசங்க கூட சேர்ந்து இப்படி திருதிருன்னு விழிக்கிற ? "என்று நளினியை பார்த்து கேட்டார் அவர் ..

" அ ... அது .. நீங்க கோவிலுக்கு எல்லாம் .. திடீர்னு " என்று திக்கித்தினரினார் நளினி .. ஏனோ ஞானப்ரகாஷ்க்கு அவர்கள் நால்வரையும் பார்க்கும்போது குணாவின் ஞாபகம் வந்தது ...பல நாட்களுக்கு பிறகு இன்றுதான் தனது குடும்பம் மீண்டும் முழுமை பெற்றிருப்பது போல தோன்றியது அவருக்கு ..அதனால்தான் தானும் அவர்களோடு இணைந்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தார்..

ஆனால் அந்த காரணத்தை வெளியில் சொல்லாமல்

" நீங்க மூணு பெரும் ஏதோ திட்டம் போடுற மாதிரி இருக்கே .. அதை கண்டுபிடிக்கத்தான் வரேன் " என்றார் ..

முகத்தை சீராய் வைத்து கொண்டு " ஓகே அப்பா " என்றான் சந்துரு .. இந்த சில நொடிகளிலேயே கவீன்   அனுவிற்கு போன் செய்திருந்தான் ..

" என்னடா சொல்ற ?" -அனு  ..

" நிஜம்மாதான் .. சந்துரு அண்ணாவின் அப்பாவும் வராரு ,.,"

" டேய் குள்ளநரி .. யாரை ஏமாத்தலாம்னு  இப்படி பேசுற .. உன்னை எப்படி நம்புறது  ? அதுவும் உனக்கு சந்துரு அண்ணா வீட்டில் என்ன வேலை ? " என்று கேள்விகளை அடுக்கினாள்  அவள் ..

" தெய்வமே , எனக்கு தெரியும் நீ ரொம்ப தெளிவான பிரவிதான்னு ..ஆனா எனக்குதான் நிரூபிக்க நேரமில்லை .. வேணும்னா ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்  அப் பண்ணுறேன் .. நீங்க மூணு பேருமே எதிர்சையா மீட் பண்ணுற மாதிரி கோவிலில் இருந்தா போதும் " என்று சொல்லி போனை வைத்தான்  கவீன் .,.சொன்னது போலவே , " எல்லாரும் அழகா இருக்கோம் , ஒரு செல்பி எடுத்துப்போம் " என்று கெஞ்சி போட்டோ எடுத்து அதை அனுவிற்கு அனுப்பி வைத்தான் ..

" ன்ன யோசனை அனு  ?"

" இல்ல , அப்பபோ இந்த கவின் குரங்கு கூட ரொம்ப பொறுப்பாய்  மாறி விடுறான் பாரேன் .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியல " என்று கண்ணடித்தாள் அனு ..

" சரி ..சரி .. நாம அவங்களுக்கு முன்னாடியே கோவிலுக்கு போகணும் .. அதற்கு ஒரு வழி சொல்லு ? " - ஆரு ..

" இதுக்கென வழி சொல்லணும் ? நாம என்ன பாத யாத்திரையா போக போகிறோம் ? போயி ஆட்டோ பிடிச்சா போச்சு .. " என்றாள்  அனு  அசால்ட்டாய் ..

" அனு ....."

" என்ன நந்து ? "

" இல்ல, அப்படியே நாம ஜெனியையும் கூட்டிட்டு போகலாமே "

" விளையாடுறியா நீ ? அவ அப்பா ஏற்கனவே நம்ம மேல கொஞ்சம் சந்தேகமும் கோபமுமாய் தான் இருக்கார் .. இதில் கவீனும்  வரான் .. என்னனு சொல்லி கூட்டிட்டு போகுறது ?"

" வேணும்னா , நளினி அம்மாவை பேச சொல்வோமா ?"

" ஆரு, நம்ம சின்ன பசங்க விஷயத்தில் பெரியவங்களை இழுக்கனு மா ?" என்றாள்  அனு .. அவள் சொல்வதும் சரிதான் என இருவரும் வாயை மூடி கொண்டனர்.. அவர்கள் முகத்தை பார்த்த அனுவிற்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது ..

" சரி நமக்கு திட்டம் போடுறது என்ன புதுசா " என்று மனதிற்குள் எண்ணியபடி அவர்களுடன் நடந்தாள்  அவள்..

கோவில்..!

சொல்லி வைத்தது போலவே அனு , ஆரு , நந்து மூவருமே மற்றவருக்கு முன்பதாகவே வந்து விட்டிருந்தனர் ..

" என்னடி இன்னமும் காணோம் ?" என்று பதினேழாவது முறை கேட்டாள்  அனு  ..

" நீ ஏன் இப்போ குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துற ? அத்தை மாமா , எல்லாரும் ஒண்ணா வராங்கன்னு நானே பதட்டத்தில் இருக்கேன் " என்றாள்  நந்து ..

" அதான் கதிரும் வரார்ல .. அதைவிட பெரியதொரு காரணம் தேவையாக்கும் " - ஆரு ..

" சரி நாம இப்படி அவங்களுக்காக காத்துகிட்டு இருக்குற மாதிரி காட்டிக்காம கொஞ்சம் கோவிலை சுத்தி நடப்போம் " என்று அனு  கூறவும் மற்ற இருவரும் அவளுடன்  இணைந்து நடந்தனர். ஏதேதோ பேசிக்கொண்டு நடந்திருந்தனர்  மூவரும் .. சட்டென நந்துவின் செல்போன் ஒலிக்கவும்

" ஹே கோவிலில் என்னடி போன் ?" என்றாள்  அனு .." அப்பா கூப்பிடுறாங்க " என்றபடி வாசலுக்கு விரைந்து தந்தையிடம்  பேச துவங்கினாள்  நந்து ..

" நந்தும்மா "

" அப்பா சொல்லுங்கப்பா "

" எப்படிம்மா இருக்க?"

" நான் நல்லா இருக்கேன் ..நீங்க நல்லா இருக்கிங்களா ? "

" நானும் நல்லா இருக்கேன் கண்ணம்மா .. நேத்து எல்லாம் உன் நியாபகம் தான் .. அதான்  உன்னை பார்க்கலாம்னு புறப்பட்டு வந்துட்டேன் " என்றார் அவர்..

" எங்கப்பா இருக்கீங்க ? நான் கோவிலுக்கு வந்தேன் .. அத்தையும் வரேன்னு சொன்னாங்க " என்றாள்  நந்து துள்ளலாய் ..

" அப்படியே நேரா பாரும்மா " என்று கனிவுடன் தந்தை கூறவும் , கோவிலின் எதிர்சாலையில் அவர் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்  நந்து .. தந்தையை கண்ட மகிழ்வில் அவள் கை காட்டிய அதே தருணம் , சந்துருவின் கார் கோவிலின் முன் நின்றது .. கார் நின்ற ஓசையில் இந்த பக்கம் திரும்பியவள் தனது மாமாவை பார்த்ததும் தான் விழிகளை விரித்தாள் ..

" அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஏதோ மனஸ்தாபம்ன்னு அத்தை சொன்னாங்களே ! இப்போ ரெண்டு பேரும்  பார்த்து கொண்டால் , என்ன ஆகுமோ ? " என்று  அவள் மனம் எகிறி துடித்தது .. தனது மருமகளை நளினியும் ,  மாமன் மகளை சந்துருவும் பார்வையாலேயே  ரசித்து கொண்டிருந்த தருணம் , தனது தந்தை கோவிலுக்கு மிக அருகில் வந்துவிட்டதை கவனித்தவள் தன்னையும் மீறி " அப்பா " என்று உரக்க கூறி இருந்தாள்  .. அந்த ஓர் அழைப்பிலேயே பலரின்  கவனமும் அவள்புறம் திரும்பியது !

யார் யாரை சந்திக்க போகிறார்கள் ? அடுத்த அத்யாயத்தில் சொல்றேன் .நன்றி 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 20

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 22

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.