(Reading time: 11 - 21 minutes)

ல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது, கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்னதாக, அவள் மாமியார் கௌசல்யாவும், அத்தை சுபத்ராவும் ஏதோ கலக்கமாக பேசிக் கொண்டிருந்தனர். எதேச்சையாக அந்த பக்கம் வந்த மைதிலியின் காதில் “அந்த ஸ்ருதி வேறு இன்னும் என்ன பிரச்சினை கிளப்பப் போகிறாளோ என்றிருக்கிறது சுபத்ரா. இப்பொழுது தான் ராமின் திருமண விளக்கம் எல்லோருக்கும் சொல்லி முடித்தோம். இனி இவளுக்கு ஆரம்பிக்க வேண்டும்.” என்று.

“ஆமாம் அண்ணி. நான் கூட அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போடுங்கள் அண்ணி” என்றார் சுபத்ரா

மைதிலி மெதுவாக நகர்ந்தாள். அவள் மனம் சிணுங்கியது. ராமிற்கு என்னைப் பிடித்தது மணந்தார். இதில் அந்த ஸ்ருதிக்கு என்ன பிரச்சினை. யார் அந்த ஸ்ருதி  என்று யோசித்தாள்.

ராம் அவள் ஒருமாதிரி இருப்பதைப் பார்த்து வினவ, ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, ஊர் திரும்பிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள். அதுவே அவளுக்கும் ராமிற்கும் இடையே பிரச்சினை வரக் காரணமாக அமைந்தது.

ஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்து ஆண்கள் எல்லோருக்கும் வேலை அதிகமாக இருந்ததால் காலை சென்றால் இரவு 7 , 8 மணிக்கே வரமுடிந்தது. ராம், மைதிலி ஒருவரையொருவர் மேலோட்டமாக புரிந்து கொண்டிருந்தனர்.

ஞாயிறுகளில் ராம் ரிலாக்ஸ்டாக இருந்தாலும், ஏதாவது புதுதம்பதிகளுக்கு விருந்து, உறவினர் விசேஷங்கள், அல்லது அதற்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களைப் பார்க்க என்று செல்வதற்கே சரியாக இருக்கும். இருவருமாகச் சென்றாலும் மைதிலியிடம் அந்த உறவினர்களைப் பற்றிய அறிமுகம், அது தொடர்பான பேச்சுக்கள் என்றே இருப்பதால் ராம், மைதிலி இருவரும் அவர்களைப் பற்றி அதிகமாக எதுவும் பேசுவதில்லை. இரவில் புதுமணமக்களுக்குரிய வகைகளில் கழிய இருவருக்கும் பேச நேரமே கிடைக்க வில்லை.

மைதிலி திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சென்றிருந்த நிலையில், அன்று காலையிலிருந்து மைதிலிக்கு ஒரே தலைசுற்றலாக இருந்தது.  காலை ராமிற்கு தேவையானதை செய்து விட்டு டிபன் சாப்பிட வந்தார்கள். எல்லோரும் கிளம்பவும் மைதிலியால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்கள் அறைக்கு வந்து படுத்து விட்டாள்.

மைதிலி மதியம் சாப்பிட வராததைக் கவனித்த கௌசல்யா மைதிலியின் அறைக்குச் செல்ல, அவளின் நிலையைப் பார்த்து விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வைத்தாள். ராமிற்கு போன் செய்து மாலை சீக்கிரம் வரச் சொல்லி விட்டு, டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினாள். மாலை வந்த ராம், மைதிலியை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றான். டாக்டர் சில டெஸ்ட் எடுத்துவிட்டு, ராமிடம்,

“கங்கிராட்ஸ். நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்” என்றார்.

மகிழ்ச்சியடைந்த இருவரும் டாக்டரிடம் நன்றி கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டில் எல்லோரிடமும் சொல்ல, அவர்கள் வருவதற்கு முன்பே கௌசல்யா இனிப்புடன் காத்திருக்க கொண்டாடி மகிழ்நதனர். அன்று இரவு தங்கள் அறைக்கு வந்த ராம், மைதிலியிடம் “சோ ஹேப்பிடா மிது.” என, மைதிலி அவன் மார்பில் சாய்ந்தாள். விஷயம் கேள்விபட்ட தாத்தா, பாட்டி, அத்தை குடும்பத்தார் அனைவரும் மகிழ்ந்தனர்.

மைதிலி மகிழ்ச்சியோடு காணப்பட்டாலும் அவ்வப்போது அவள் ஒரு மாதிரி தனிமையாக உணர்ந்தாள். ராம் மைதிலியைப் பிடித்துத் திருமணம் செய்திருந்தாலும், அவ்வப்போது பிஸினஸ் டென்ஷனில் இருக்கும் போது அவளிடம் எரிந்து விழுவான். பெரிய அளவில் சண்டை எதுவும் போடாவிட்டாலும் மைதிலிக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். அவள் வளர்ந்த சூழ்நிலையில் அவளை அவள் தாயும், படிக்கும் போதும், வேலையிலும் அவள் மீது யாரும் குற்றம் சொல்லுமாறு அவள் நடந்ததில்லை.

இதைப்பற்றி அவள் கௌசல்யாவிடம் பேசும் போது இது எல்லாரும் செய்வது தான், வீட்டிலுள்ளவர்கள் கொஞ்சம் அனுசரிக்க வேண்டும் என கூறவே அவளும் விட்டு விட்டாள். ஆனால் ராம் திட்டும் போது கஷ்டாக இருக்கும். மேலும் அவனை சமாதானப் படுத்தவும் செய்வாள். ராமிற்கு அவள் மீது தவறில்லை என்று தெரிந்தாலும் அவன் அவளைச் சமாதனப்படுத்த மாட்டான்.

ஆனால் அதே சமயம் அவன் குடும்பத்தினரிடம் ஒரு சின்ன முகச்சிணுக்கம் கூட காட்டுவதில்லை. அதே மாதிரி தங்கை சபரி மற்றவரிடம் ஏதாவது சண்டை போட்டால் அவன்தான் அவளையும் மற்றவரையும் சமாதானப்படுத்துவான். 

மேலும் இரண்டு, மூன்று மாதங்கள் சென்றது. மைதிலிக்கு ஐந்தாம் மாதம் ஆகியும் மார்னிங் சிக்னெஸ் அதிகமாயிருந்தது. இந்நிலையில் ஒருநாள் ராம் போனில் “ஸ்ருதி, கல்யாணம் எல்லாம் நடக்காது. நான் என் குடும்பத்தாரின் நம்பிக்கையை கெடுக்க மாட்டேன். இந்த விஷயத்தை மறந்து விடு.” என்று பேசிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட மைதிலி துணுக்குற்றாள். அவன் அப்படியே ஆபீஸ் சென்று விட்டான்

பின் காலையில் ஏதோ வேலையாக கீழே வந்த மைதிலியின் காதுகளில், கௌசல்யா “சுபத்ரா, நாம் நினைத்த மாதிரி ஸ்ருதி ராமை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டாள். இன்னும் என்ன பிரச்சினைகள் காத்திருக்கோ?” என்று பேசுவது கேட்டது. என்ன விஷயம் என்று குழம்பிய மைதிலி, சரி மாலையில் ராம் வந்நதும் கேட்கலாம் என்று எண்ணினாள்.

ஆனால் இதற்குப் பிறகு ராம் வீட்டில் இருக்கும் நேரமே குறைந்தது. தூங்குவதற்கு மடடுமே அதுவும் நள்ளிரவில் வர ஆரம்பித்தான். அவள் உடல் நிலை குறித்த கவலையினால் அவளை எழுப்பாது அவனுடைய அறையில் உறங்க ஆரம்பித்தான். காலையிலும் ஏழு மணிக்கே கிளம்பி விடுவதால் அவனால் மைதிலியிடம் பேச முடியவில்லை.

ஆனால் அந்த அதிகாலையிலும் தினமும் ஸ்ருதியின் போன் பேசியபடியே வெளியே செல்வதைப் பார்த்த மைதிலிக்கு கலக்கமாக இருந்தது.  அவள் மனம் சஞ்சலமடைந்து இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யா அவளை ஒழுங்காக சாப்பிட வைத்தார்.

தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எண்ணிய மைதிலி, அன்று இரவு அவன் வரும் நேரம் கணக்கிட்டு அலாரம் வைத்து விழித்திருந்தாள். களைப்புடன் வந்த ராம். மைதிலியைப் பார்த்து “ஹேய் இன்னும் நீ தூங்க வில்லையா” என்று வினவியபடி சட்டையைக் கழற்ற ஆரம்பித்தான்.

மைதிலி “யார் அந்த ஸ்ருதி? அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?” என்றாள்.

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.