(Reading time: 16 - 31 minutes)

ன்று இரவு படுக்கையறைக்குச் சென்ற மைதிலி, ராம் அருகே சென்றாள். அவன் முகத்தைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தாள். ராமிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது. அவள் அருகில் வந்த ராம் மெல்லிய குரலில் “மிது, என்னை மன்னிச்சிட்டியா? என்று கேட்க மைதிலி அவன் மார்பில் சாய்ந்தாள். அவளை இறுக்கி அணைத்தவன், பிறகு மெதுவாக முகமெங்கும் தன் உதடுகளால் அளக்க ஆரம்பித்தவன், இதழ்களில் நிலை கொண்டான். நொடிகளோ நிமிடங்களோ சுற்றுப்புறம் மறந்திருந்தவர்கள், ஷ்யாமின் குரல் கேட்டுப் பிரிந்தனர். ஐஸ்கிரிமின் உபயத்தால் லேசாக இரும ஆரம்பித்த ஷ்யாமை கவனிக்க மைதிலி சென்றாள். மைதிலி குழந்தையின் அருகில் படுக்க அவளின் அருகில் ராம் மைதிலியை அணைத்தவாறு படுத்தான். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அலைச்சலும், இருவரின் மனபாரங்கள் நீங்கிய நிம்மதியிலும் இருவரும் உறங்கினர்.

மறுநாள் காலை கண்விழித்த மைதிலி தூக்கத்திலும் தன்னை அணைத்துப் படுத்திருந்த ராமின் நெற்றயில் முத்தமிட்டவள் வெட்கம் மேலிட அவனின் கைகளை விலக்கி பாத்ரூம் சென்றாள். திரும்பி வந்தவள் இன்னும் ராம் உறங்கிக் கொண்டிருக்க வெளியே சென்று விட்டாள். வழக்கமான காலை பரபரப்பில் வீடு இயங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் ராம் மைதிலி என்று அழைக்க மேலே சென்றாள், குழந்தை விழித்திருக்கவும் அவனை கவனித்து, அவனுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டையொட்டிய விடுமுறை ஆதலால் கீழே அனுப்பி விட்டு, படுக்கையைச் சீர் செய்ய ஆரம்பித்தாள்.

பாத்ரூமலிருந்து வெளியே வந்த ராம் மைதிலியை அணைத்து “மிது, குழந்தைக்குத் தேவையானதை பேக் செய்து விட்டு, நம்மிருவருக்கும் ஒரு வாரத்திற்குத் தேவையான சாமான்களை பேக் செய். நாளை மாலை எல்லோரும் ஒன்றாக டெல்லி செல்கிறோம். அங்கிருந்து நாமிருவர் மட்டும் சிம்லா போகிறோம்” என்றான்.

“ஏன் ராம்? நாமும் அவர்களோடு செல்லாலமே அல்லது ஷ்யாமை நம்மோடு கூட்டிப் போகலாம்” என்றாள் மைதிலி.

“மைதிலி ப்ளீஸ்டா நான் உன்னோடு தனியாக இருக்க விரும்புகிறேன். திருமணமாகி 5 வருடங்கள் கழித்து நாம் ஹனிமூன் போகிறோம். அங்கே நீ என்னை மட்டுமே முழுவதுமாக கவனிக்க வேண்டும்” என்று கண்சிமிட்டினான். வெட்கத்தில அவனை மார்பில் குத்தியவள், அவனிடம் சரி என்றாள்.

மறுநாள் அனைவரும் கிளம்பிட சந்தோஷ், ஸ்ருதியை கோவாவிற்கு வழியனுப்பி விட்டு குடும்பத்தினர் அனைவரும் டெல்லிக்கு விமானத்தில் சென்றனர். அங்கிருந்தே ராம், மைதிலியையும் கிளம்பச் சொல்ல, ராம் மறுத்து விட்டு பெரியவர்கள் அனைவரையும் அவர்கள் தங்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

ஹோட்டலில் அனைவரையும் நல்ல வசதியாக தங்க விட்டு, அவன் அலுவலக கிளை மேலாளரை அழைத்து அவர்களுக்கு வசதியாக ஒரு டெம்போ ஏற்பாடு செய்யச் சொல்லி மேனேஜரையே அவர்கள் டெல்லி சுற்றுலா இடங்களையும், அருகிலுள்ள புண்ணிய இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் சுற்றிப் பார்க்கத் துணையாக போகச் சொன்னான்.

மேனேஜருக்குத் தெரிந்த இரண்டு பெண்களை அவர்களுக்கு உதவியாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான். பிறகு இரவு உணவு எல்லோருடனும் முடித்தான். அதுவரை மைதிலி ஷ்யாமோடு அமர்ந்து தாங்கள் இருவரும் ஆபீஸ் வேலையாகச் ஊருக்குச் செல்வதாகவும், அவனை சமர்த்தாக தாத்தா பாட்டியுடன் இருக்கச் சொல்லியும் கூறினாள்.

பிறகு இருவரும் கிளம்பி டுரிஸ்ட் பஸ்ஸில் ஏறி சிம்லாவுக்குக் கிளம்பினர். இருவரும் இரட்டை இருக்கையில் அமர்ந்தனர். ராம் மைதிலியைப் பார்த்து மெலிதாக கண்ணடித்தவன் அவள் தோளை அணைத்தாற் போல் அமர்ந்தான் மைதிலி சங்கடமாக நெளிய ராம் அவளை இறுக்கி அணைத்தான்

மைதிலி “ராம் என்ன இது? பப்ளிக் பிளேஸில் இப்படி?”

ராம் “நீ கொஞ்சம் பஸ்ஸில் எல்லாரையும் பார்”

அவர்கள் சென்ற பஸ் முழுக்க தேநிலவு தம்பதியினரே இருக்க எல்லோரும் ஒருவரோடு ஒருவர் அணைத்துக் கொண்டும், மடியில் படுத்துக் கொண்டும், நெருக்கமாக பேசிக் கொண்டும் இருந்தனர். அதிலும் ஒரு ஜோடி மெல்லிய விளக்கு ஒளியே பஸ்ஸில் இருந்ததால் இதழ் முத்தம் கொடுக்க, மைதிலியின் முகம் நாணம் கொண்டது.

மைதிலி “ நாம் என்ன தேநிலவு தம்பதியா? நமக்கு நான்கு வயதில் மகன் இருக்கிறான்.”

ராம் “அதற்கென்ன? எத்தனை வயதானலும் நாம் தேநிலவு ஜோடிதான்” என்றான்

மெல்லிய குரலில்

“வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதாது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.

மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாமராஜ்ஜியமே. ”

என்று ராம் பாட, மைதிலி அவன் தோள் சாய்ந்தாள். பிறகு இருவரும் அலுப்பில் உறங்க ஆரம்பிக்க, விடியும் வேளையில் கண் விழித்தனர். வெளியே பனி படர்ந்த மலைகளிடையே பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த இயற்கை அழகிற்காகவே ராம் பஸ் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

இயற்கையை ரசித்துக் கொண்டே சிம்லாவில் அவர்கள் தங்கப் போகும் ஹோட்டலில் சென்று சேர்ந்தனர். ஒரு சிறிய சிங்கிள் பெட்ரூம் வீடு போல் ஹால், பெட்ரூம் அட்டாச்டூ பாத்ரும் மற்றும் பால்கனி ஹீட்டர் வசதியுடன் அந்த அறை இருந்தது.

சூடாக டீ வரவழைத்துக் குடித்து விட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். பிறகு குளித்துச் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். ரிசெப்ஷனில் சாவி கொடுக்கும் போது ராம் ஒரு 15 நிமடம் ஏதோ பேசி விட்டு வந்தான். பிறகு இருவரும் ஊர் சுற்றினர். திருமணமான புதிதில் கூட ராமோடு அதிகமாக வெளியே செல்லாததால், இப்போது எந்தக் கவலையுமின்றி ஒருவரோடொருவர் கைகோர்த்துச் சுற்றினர்.

மைதிலி அந்த பனிமலைகளைப் பார்த்து “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று பாட ராம் ஆச்சரியமடைந்தான்.

ஹேய்.. நீ நன்றாகப் பாடுகிறாயே எப்படி? என்று வினவ

அவனை முறைத்த மைதிலி “நான் எட்டு வருஷம் பாட்டுக் கற்றுக் கொண்டவள். நான் தான் ஷ்யாமிற்கு பாடச் சொல்லிக் கொடுக்கிறேன். மேலும் அம்மாவிற்கு பிறகு நான் என் தனிமையைத் தள்ளுவது பாட்டோடுதான்.”

என்னிடம் சொல்லவில்லையே என்று கேட்ட ராமிடம் என்னிடம் என்றைக்காவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா என்று வினவினாள்.

ராம் அவளிடம் வருத்தத்துடன் “ஆமாம் நான் கேட்டதில்லை. இன்று சொல் கண்ணம்மா உன்னைப் பற்றி உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்னன்ன தெரியும்” என்று கேட்க அன்றைக்குத்தான் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

மைதிலி “ராம் என் பெரியம்மா, அத்தை வீட்டிற்குச் சென்று வரலாமா என்று கேட்க, “கண்டிப்பாக மிது மா. நாம் ஊருக்குச் சென்ற பிறகு போகலாம்” என்று கூறினான்.

இரவு 8 மணி அளவில் அறைக்குத் திரும்பினர். அறையினுள் சென்றவுடன் மைதிலி குளிக்கச் செல்ல ராம் அவளுக்காக வாங்கிய உடையை எடுத்து வெளியே வைத்தான். குளித்து விட்டு இரவு உடையுடன் வந்த மைதிலியிடம் அந்த பார்சலை கொடுத்து அதிலுள்ள உடையை அணிந்து கொள்ளச் சொன்னான். கேள்வியாய் பார்த்த மைதிலியிடம்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.