(Reading time: 10 - 19 minutes)

ருள் இல்லம்…”

என்ற பெயருக்கேற்றபடி அமைந்திருந்தது அந்த இல்லம்….

சுற்றிலும் மரங்கள், பசுமை, சில்லென்ற இதமான காற்று, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த விளையாட்டுத் திடல்கள்….

அந்த இல்லத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த நீர்வீழ்ச்சியின் அருகே அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை தொட்டுக்கொண்டிருந்த காவேரி….

“ருணதி….” “அழகான பேர் உன்னோடது… ஆமாம்மா இங்க வேலை இருக்குன்னு யார் சொன்னா உனக்கு?....” என கேட்டார் அவளிடம் காவேரி….

“என்னுடன் வேலைபார்த்த சரோஜா மேடம் போன வாரம் இந்த இல்லத்துக்கு வந்திருந்ததா சொன்னாங்க… அப்போதான் இங்க ஆள் வேலைக்கு தேவைன்னு தெரியப்படுத்தினாங்க….”

“ஓ… சரோஜாவா?.. மதுரையிலிருந்து மாதம் ஒருதடவை வந்துட்டு போவா… அவளுக்கு இங்க வந்து இந்த பசங்களோட இருக்க ரொம்ப பிடிக்கும்…” என்றவர், அவளிடம்,

“சரோஜா தானா வந்து உங்கிட்ட சொல்லலை… பொதுவா அவ சொன்னதை வச்சு நீ இங்க வந்திருக்க…. சந்தோஷம்… “நீ நிறைய படிச்சிருக்க… உன் படிப்புக்கேத்த வேலையைப் பார்க்கலாம் தானேம்மா…”

“படிப்புக்கேத்த வேலையைப் பார்த்தது போதும்னு தான் மேடம் வந்துட்டேன்….”

“ஆனா ருணதி,  நீ இப்போ பார்த்துட்டு இருக்குற வேலையை விடணும்னு ஏன் நினைக்குற?...”

“விடணும்னு நான் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு மேடம்…  எனக்கு சந்தோஷம் தர்ற இடத்துல வாழணும்னு ஆசப்படுறேன் மேடம்… அதனால தான் அந்த வேலையை விட்டுட்டு இப்போ இங்க வந்திருக்கேன்….”

அவள் அப்படி சொன்னதும், அவளை ஒருநிமிடம் கூர்மையாக பார்த்தவர், பின்

“உன் அம்மா, அப்பா எங்க இருக்காங்க?... என்ன பண்ணுறாங்கம்மா?....”

“அவங்க இப்போ எங்கூட இல்லை மேடம்…. தவறிட்டாங்க என்னோட சின்ன வயசிலேயே…”

“சாரி ருணதி… நீ இங்க எங்க தங்குவ வேலை கிடைச்சா?...”

“என் அப்பா அம்மா வாழ்ந்த வீடு இங்க இருக்கு மேடம்… ரொம்ப நன்றி….”

“நன்றி எதுக்கு ருணதி?...”

“எனக்கு வேலை கொடுத்ததற்கு…..”

“நான் உங்கிட்ட வேலை கொடுக்குறேன்னு சொல்லவே இல்லையே….”

“ஆனா, உங்க அக்கறை அதை சொல்லிட்டே மேடம்… வேலை தர விருப்பம் இல்லாதவங்களா இருந்திருந்தா, என்னைப்பத்தியோ, நான் எங்க தங்குவேன் என்பதையோ கேட்டிருக்கமாட்டீங்களே… அதை வைத்து தான் சொன்னேன்….”

என அவள் சொன்னதும், அவர் பார்வையில் ஒரு மெச்சுதல் உண்டானது…

“உண்மைதான் ருணதி… உனக்கு வேலை தர நான் எண்ணியிருக்கிறேன்… ஆனால், முடிவு எடுக்கும் உரிமை முழுதாக என்னை சேர்ந்தது அல்ல… நான் இந்த இல்லத்தில் பணியாற்றும் ஒரு பெண்… அவ்வளவுதான்… இந்த இல்லத்தின் பொறுப்பாளரிடம் நான் கேட்டு விட்டு உனக்கு தகவல் சொல்கிறேன்… உன் முகவரி?....”

“இது என்னோட முகவரி… இது என்னோட செல் நம்பர்…” என தன் கைப்பையிலிருந்த ஒரு துண்டு சீட்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள் ருணதி…

“சரிம்மா… நான் பேசிட்டு சொல்லுறேன்…”

“சரி மேடம்…” என்றபடி அவரிடம் புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள் ருணதி…

அவள் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார் காவேரி…

“என்னம்மா அந்த பொண்ணு போறதையே பார்த்துட்டு இருக்கீங்க?...” என அங்கு வந்த ஒரு பெண் கேட்க…

“அந்த பொண்ணு பேரு ருணதி… இங்க வேலை கேட்டு வந்திருக்கா பவித்ரா….” என்றார் அவர்…

“நீங்க இரண்டு பேரும் பேசினதை நான் கவனிச்சிட்டு தான் இருந்தேன்மா… அவங்க இங்க வேலை பார்க்க நிஜமாவே விரும்புறாங்கன்னு எனக்கு தோணுது….”

“எனக்கும் அப்படித்தான் தோணுது பவித்ரா… ஆனாலும் அவளை வேலைக்கு வர சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கேட்டுக்கணும்னு விரும்புறேன்….”

“என்னம்மா நீங்க?... சாருக்கு மட்டும் நீங்க இப்படி பேசுறது தெரிஞ்சது எனக்கும் சேர்த்து திட்டு விழும் இப்போ….”

அவள் அப்படி சொன்னதும் அவர் முகத்தில் புன்னகை தவழ,

“நீங்க வேற இந்த அருள் இல்லம் வேற இல்லன்னு சாரே சொல்லியிருக்கிறார்ம்மா… நீங்க என்னடான்னா, அவர்கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு சொல்லுறீங்க… அவரோ, என்கிட்ட கேட்கவே வேண்டாம்… நீங்க என்ன செஞ்சாலும் அது இந்த இல்லம் நன்மைக்குத்தான்னு சொல்லுவார்…. கடைசியில உங்க இரண்டு பேருக்கும் இடையில மாட்டிகிட்டு நாங்க தான் முழிக்கிறோம்… அய்யோ… இல்ல இல்ல…. நான் மட்டும் தான் முழிக்கிறேன்… இப்படி…” என அவள் தன் பெரிய கண்களை உருட்டி மிரட்டி அவரிடம் சொல்ல,

அவர், அவளின் காதை திருகி, “வாயாடி…. வா போகலாம்….” என அழைத்துச் சென்றார்…

அருள் இல்லத்திலிருந்து வெளிவந்த ருணதியின் கால்கள் நேரே அந்த கண்ணனின் திருவடியைக் காணச் சென்றது….

ஸ்ரீரங்கம்….

அந்த பெருமாள் குடிகொண்டிருக்கும் இடத்தை தேடி அவள் பயணித்தாள்…

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது அவள் இந்த கோவிலுக்கு வந்து இந்த பெருமாளை சேவித்து…

கோவிலின் உள்ளே நுழையும் முன் உயர்ந்து வானளாவ பரவியிருந்த அந்த கோபுரத்தை தரிசித்தாள் அவள்…

உயர்ந்த கோபுர தரிசனம் புண்ணிய தரிசனம் என சொல்வார்கள்…

அவளுக்கும், அப்படித்தான் தோன்றிற்று…. அந்த கோபுரத்தை கண்டவுடனே மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் உயரப் பறந்து போனது போல் இருந்தது அவளுக்கு…

முதல் அடி கோவிலின் உள்ளே எடுத்து வைக்க முனைந்த நேரம், அவளது விழி நீர் சட்டென தரையில் பதிந்தது அவள் கால்களுக்கு முன்னே கோவிலின் உள்ளே…

அதே நேரம், பீச்சில் மர பெஞ்சில் இரு கை விரித்து பின்னால் தலை சாய்த்து அண்ணார்ந்து பார்த்தபடி கண் மூடி அமர்ந்திருந்த மகத்-ன் முகத்தில் சட்டென ஒரு துளி நீர் பட, அவன் தான் இருந்த தியான நிலையை விட்டு வெளிவந்து தன் கன்னங்களை தொட்டு பார்த்தான்…

நீர் துளி…. ஒற்றைத்துளி… அதனை தொட்டு பார்த்தவன், தன் விரல்களினிடையே தடவி பார்த்த பொழுது, அவனது முன்னே ஒரு சிறுமி அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்…

“சாரி அங்கிள்…. தான் தான் கைகழுவிட்டு கையை உதறினேன்… உங்க மேல தண்ணீர் தெறிச்சிட்டு… ஐ அம் சாரி….” என சிரித்துக்கொண்டே அந்த சிறுமி சொல்ல,

அவனும் புன்னகைத்தவாறு அவளின் அருகே சென்றான்…

“ஹ்ம்ம்… க்யூட்டி… இங்க யார் கூட வந்த?...”

“அப்பாகூட ஜாக்கிங்க் வந்தேன்…. அங்கிள்….”

“ஓ சரி… அப்பா எங்க?...”

“அதோ அங்க இருக்குறார் அங்கிள்….” என அவள் கைகாட்டிய திசையில் ஒரு ஆடவன் நின்றிருந்தான்…

“ஹ்ம்ம்… அப்பா கூடவே இருக்கணும்… தண்ணீர் பக்கத்துல போககூடாது தனியாக சரியா???” என அவன் கேட்க…

“சரி…” என்றபடி “நான் அப்பாகிட்ட போறேன் அங்கிள்…. டாட்டா….” என்றபடி அவனுக்கு கையசைத்துக்கொண்டே சென்றவளையே சற்று நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான் அவன்….

தொடரும்

Episode # 02

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.