(Reading time: 11 - 21 minutes)

ய்... என்ன தான் நினைக்கற என்னைபத்தி? உதாசீனப்படுத்தற?? உன்னைப் போய்... ச்சச...' என்று அவன் நகர..

அவன் கையைப்பிடித்து நிறுத்தினாள் குழலீ. 'நில்லுங்க...!' சற்றே அவள் குரல் உயர்ந்தது.

ஏய்!!'

சும்மா சும்மா கத்தற வேலையேல்லாம் என்கிட்ட வேண்டாம்... சொல்லிட்டேன்!

என்ன மிரட்டறியா? என் அம்மா, அப்பா, கீதா எல்லாரையும் கைக்குள்ள வெச்சிருக்க திமிரு...!

ஆமாம்! அதுக்கு என்னங்கறிங்க? அவங்க மட்டுமில்ல நீங்களும் தான் என் கைக்குள்ள...' என்று அவள் பிடித்திருந்த கையை காட்டினாள்.

ச்சச...

ரொம்பவும் சலிச்சுக்காதீங்க... உங்களை இப்படி சீண்டருத்துக்கே இப்படி ரியாக்ட் செய்யறீங்க! என்னை சீண்டும் போது எனக்கு எப்படியிருக்கும்?' நிறுத்தி நிதானமாக கேட்டாள் பூங்குழலீ.

ஏய்ய்ய்!! என்னடீ....' அவன் குரல் உயர்த்தவும் கைகளால் அவன் வாயை மூடினாள்.

ஷ்ஷ்....! கத்தாதீங்க! இந்த 'டீ' போடுற வேலையேல்லாம் என்கிட்ட வேண்டாம். 

மலங்க மலங்க விழித்தான் பிரபு!

என்ன முழிக்கிறீங்க? ம்ம்ம்... எவ்வளவு நாள்தான் நானும் பொறுமையா இருக்கறது? நீங்க என்ன செய்தாலும் நான் அமைதியா இருக்கனும் இல்ல?

இவ்வளவு நாள் நீங்க போட்ட ஆட்டத்திற்கும் செய்த அலப்பறைக்கும் நான் அமைதியா இருந்தா... பொறுமையா இருந்தா... என்னை என்ன லூசுனு நினைச்சுக்கிட்டீங்களா?

......

என்னைய கண்டாலே உங்களுக்கு ஆகாது.... பிடிக்காது! அருவெறுப்பாய்... ஒரு புழுவை பார்க்கராப்பல தானே பார்ப்பீங்க!

ஏய்! நீ என்னை லவ் பண்ணற டீ..,,நான் சொல்ல வரத....

எண்ண சொல்ல போறீங்க? 'எனக்கு உன்னைய பிடிக்கல தான். இந்த அப்பாவுக்காக தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்! நீ வேற என்னை லவ் செய்து தொலச்சிட்ட...அதனால என் தேவைகளுக்காக மனைவிங்கற உரிமையை நானே எடுத்துக்கறேன்!' அப்படிம்பீங்க... உங்களை எனக்கு தெரியாதா?

வேண்டாம் குழலீ! போதும் நிறுத்து! இதுக்கு மேல பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்.

இப்போ மட்டும் மனுசனா நீங்க?

அடுத்த நொடி கையை அவன் ஓங்கியவுடன் அதை தடுத்து நிறுத்திவிட்டாள்.

'போதும் பிரபு! எனக்கும் கையிருக்கு! உங்க மேல இன்னும் அதிகமா கோபம் இருக்கு!

………..

அது எப்படி ப்ரியாவை நான் கல்யாணம் செய்துக்கனும்... உன் நண்பன் அர்ஜுனை விலகிக்க சொல்லுனு என்கிட்டவே வந்து கேட்டீங்க! அடுத்த நாலாவது நாள் என்னைய வந்து பெண் பார்த்துட்டு கல்யாணமும் செய்துக்குட்டீங்க! அந்த பக்கம் ப்ரியாவுக்கு கல்யாணம் ஆகும் போது என் பக்கத்துல வந்து உரிமை எடுத்துக்கறீங்க...எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும்னு உங்க மேல அளவு கடந்த காதல் இருக்குனு சொன்னவுடன் நீங்களா வந்து ஹக் செய்து முத்தம் கொடுப்பீங்க... அடுத்த நொடி விலகி 'சொல்லு ப்ரி!' நு அவளை செல்லம் கொஞ்சுவீங்க!

……..

நான் ஒரு முட்டாள்... இன்னைக்கு இல்ல என்னைக்குமே உங்களுக்கு என்னை பிடிக்க போறதில்லைனு தெரிஞ்சும்....... உங்களை போய்....ப்ச்ச்... என் மனசு தாங்கம தான் இப்போவும் சரி காலைலையும் சரி உங்களை வந்து ஹக் செய்தேன்! மற்றபடி எதுவுமில்லை!'

அப்போ உனக்கு என் மேல் எந்த இன்ட்ரஸ்டும் இல்ல???

இல்ல! நிச்சயமாய் எந்த மாதிரி இன்ட்ரஸ்டும் இல்ல!

சோ.. நீ என்னை காதலிக்கறதா சொன்னதும் பொய்!

காதலிச்சா... பிசிக்கல் ரிலெஷன்ஷிப் இருக்கனும்னு அவசியம் இல்ல! ப்ரியானு இல்லை... அனு... உங்க மாமா பொண்ணு ஸ்மிதா... புவனி.... ஸ்ரேயா...இப்படி திரும்பற திசையில எல்லாம் யாராவது ஒருத்தரை செல்லம் கொஞ்சிக்கிட்டு ரொமான்ஸ் செய்துட்டு தானே இருக்கீங்க??? அவங்ககிட்ட நடந்துக்கறதை போல என்கிட்டவும் நடக்க முயற்சி செய்தா.... நான் சும்மா இருக்கனுமா? அப்போ எனக்கும் அவங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லைனு சொல்லாம சொல்லறீங்க!

..........

சொல்லுங்க! நானும் அவங்களும் ஒன்னா? அப்படினா எனக்கு பெயரே வேற பிரபு! அந்த பெயரை எனக்கு கொடுக்க எதற்கு இந்த புனிதமான பந்தத்தை கொச்சை செய்யறீங்க?

குழலீ! வேண்டாம்! நான் பேச தயாராயில்லை! நான் இப்போ தூங்க போறேன்!

இல்ல எனக்கு இப்போ ஒரு பதில் சொல்லிட்டு போங்க! என் கேள்விக்கென பதில்?

............

இப்போ பேசலைனா... வாழ்க்கைல எப்போவுமே பேச முடியாமல் போகலாம் பிரபு!

ஐ யம் சாரி பூங்குழலீ! எக்ஸ்ட்ரீம்லி சாரி டு ஹர்ட் யு! இனி மனமறிந்து இதுபோல் என் விரல் நுனிக்கூட உன் மேல படாது! ஐ அஸ்ஸுயர் யு!' என்று உள்ளே உறங்க சென்றுவிட்டான் பிரபு!

ன்னடா வாழ்க்கையிது??

இருவரும் உறங்காமலே அந்த இரவு கழிந்தது!

அவளும் ஊருக்கு புறப்பட்டுவிட்டாள்... அதற்கப்புறம் இன்றுதான்... பிரபுவின் பிறந்தநாளன்று தான் இருவரும் பேசினார்கள்.

கட்டிலில் தலையணையை நனைத்தவாரு படுத்திருந்தாள் குழலீ!

ஏய் குழல்! ஏண்டீ அழற? - டீனா

ப்ச்ச்...

சொல்லப்போறியா... இல்லையா? - டீனா

இரு டீனா.. நான் அவளோட பிரபுவுக்கு ஃபோன் செய்யறேன் - யாழினி

யாழ்.... வேண்டாம்! அவனுக்கு ஃபோன்  செய்யாதே!

இந்த கண்ணீருக்கு சார் தான் காரணமா? - டீனா

இல்ல டீனா! நான் தான் காரணம்!

லவ் மேரேஜ் செய்துக்கிட்டு அழுதுக்கிட்டிருக்க? நீ தான் காரணம்னு வேற சொல்லற? என்ன தாண்டீ பிரச்சனை? ஏதோ சரியில்லையே?

நாங்க லவ் மேரேஜ் செய்துக்கல டீனா. எனக்கு அவரை சின்ன வயசிலிருந்தே ரொம்பவும் பிடிக்கும். ஒரு வருடத்திற்கு முன்னாடி அவர் போட்டோவை வரனுக்காக பார்த்தபிறகு தான் அவரை இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சது... நான் தான் அவரை காதலிக்கறேன்! அவருக்கு என்னை கண்டாலே பிடிக்காது!

சும்மா கதை விடாதே குழல்! பிரபுவுக்கும் உன்னை பிடிக்கும்... உனக்காக தான் அவர் என்னோட பேசி பழகினதேனு பிரபு சொல்றார். நீ என்னடானா பிரபுவுக்கு என்னை பிடிக்காதுனு ராகம் போடற? - யாழினி

சும்மா என்னை சமாதானம் செய்ய எதாவது பொய் சொல்லாதே யாழ்!

முதல்ல உன் பிரச்சனை என்னனு சொல்லறியா? அப்போ தான் அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியும்! - டீனா.

யாழினியும் டீனாவும் வற்புறுத்த குழலீயும் பேச தொடங்கினாள். சாதாரணமாக யாரிடமும் தன் மனதை வெளிக்காட்டாத குழலீ இவர்கள் இருவரிடமும் தன் மனதை திறந்து பேசினாள்.

முதல் முறை பிரபு குழலீயை ரிஜக்ட் செய்ததிலிருந்து இன்று பேசியதுவரை எல்லாவற்றையும் கூறினாள் குழலீ.

இதுவரைக்கும் சரி... ஆனா இதுக்கெல்லாம் மூல காரணமா சின்ன வயசுல ஏதொ நடந்திருக்கு... அதையும் சொல்லு! 

1998 ஆம் ஆண்டு...

புதிதாய் வீடுக்கட்டி தென்சென்னைக்கு குடிவந்தனர் குழலீயின் குடும்பத்தினர்.

அதற்கு முன் வசித்து வந்தது வடசென்னையில்... தண்டையார்பேட்டையில்- அவள் தாய் லக்ஷ்மியின் பிறப்பிடம்!

தந்தையின் குடும்பம் மருவத்தூர் அருகேயுள்ள கிராமத்தினை சேர்ந்தாலும் அவர் ஆறு வயதிலிருந்து வளர்ந்த்து அவரைவிட இருபது வயது மூத்தவர்களான அண்ணன்களுடன் தென்சென்னையில்!

வடசென்னையில் ஏழாம் வகுப்புவரை பெண்கள் பள்ளியில் படித்து வந்த பூங்குழலீ எட்டாம் வகுப்பிற்கு கோ-எட் பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.

ஒரே காரணம் அவள் ஒரே ஆண் நண்பன் வாசுதேவன் பயிலும் பள்ளி அது.

கூடுதல் காரணங்களாய்... வாசுவின் பாட்டி வீடு பள்ளிக்கு எதிரிலேயே! அவள் பெரியப்பாவின் வீடு பள்ளிக்கு அடுத்த தெருவில்!

சைக்கிள் கூட ஓட்டத்தெரியாததால் பத்து நிமிட தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடை பயணம்.

புதிய சூழல் புதிய மனிதர்கள்!

புதிய நண்பர்களை எதிர்ப்பார்த்து அந்த பள்ளிக்குள் நுழைந்தாள் குழலீ!

ஒல்லிக்குச்சியாய் ஷாலினி பாப் கட்டுடன் துறுதுறு விழிகளுடன் வாசுவின் கொள்ளுபாட்டியிடம் ஆசி பெற்று பள்ளிக்குள் நுழைந்தவளை பிரேயரில் டீஃபால்டர்ஸ் கீயூவில் நிறுத்தப்பட்டாள் குழலீ!

காரண கர்த்தா அசிஸ்டண்ட் பீப்புள் லீடரான பிரபு ஆர் கே... காரணம் பின்னலிடாமல் வந்தது!!!

“டேய்... பாப் தலைமுடியில் எப்படிடா பின்னல் போடமுடியும்???” ஆரம்பமே அதிரடியாய்!!!

தொடரும்...

Episode # 18

Episode # 20

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.