(Reading time: 12 - 24 minutes)

ந்தியாவில், சென்னையில் இருக்கும், அடையார் கான்சர் இன்ஸ்ட்டிடுயூட்டில் எனக்கு ஆறு மாதம் ப்ராஜக்ட் செய்ய கிடைத்திருக்கிறது.. அப்படியே அதை சாக்காக வைத்து கொண்டு, இந்தியா போகலாம் என்று நினைக்கிறேன்" என்று நிறுத்தினான் அஜய்.

காரில் சற்று நேரம் அமைதி சூழ்ந்தது.

மீண்டும் அஜய், " ஏன் அங்கிள் நீங்கள் ஏன், பைரவியை இந்தியா அனுப்பக் கூடாது? .. உங்கள் பூர்விகமும் இந்தியா தானே?.. பைரவியும் அவள் சங்கீதம் குறித்த விஷயமாக கொஞ்சம் காலம் இந்தியாவில் தன் ஆராய்ச்சியை தொடரலாமே.. ஏன் பைரவி.. இப்பொழுது , உன் ரிசர்ச் எந்த நிலையில் இருக்கிறது?.. இந்திய பிரயாணம் உனக்கு ஏதாவது உதவியாக இருக்குமா?"

அதிர்ந்தனர் கமலாவும், விஸ்வநாதனும்.

"நீ சொல்லுவது சரி தான் அஜய்.. உனக்கே தெரியுமே, நான் இந்த ஜீன் பேட்டர்னில் என்ன செய்கிறேன் என்று.. இப்பொழுது நான் செய்வது,ஒருவருக்கு சங்கீதம் ஒருவரின் ஜீங்களின் மூலம் இயற்கையாகவே வருகிறதா? .. இல்லை, உரிய பயிற்சி எடுத்து அதன் மூலம் சங்கீதத்தில் பிரபலமடைய முடியுமா?".. இதற்காக நான் இங்கே அமெரிக்காவிலேயே எத்தனையோ பேர்களை பேட்டி எடுத்து, அவர்களுடன் பழகி கடந்த இரண்டு வருடமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்.. நீ சொல்லுவது போல இந்தியாவிற்கு போனால், சங்கீதம் பயில்பவர்கள் ஆயிரக்கணக்கானோர், இருக்கின்றனர்.. அவர்களுடன் பழகி என் ஆராய்ச்சியை செய்வது போலவும் ஆயிற்று, அதோடு எனக்கு மராட்டி ஸ்டெய்லில் அபங் பாடல்களை கற்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்"..

"அது பற்றி ஆராய்ந்ததில், போன முறை இந்த மார்கழி மகோற்சவத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்த , சென்னை மியூசிக் காலேஜ்ஜில் படிக்கும் என் தோழி கலா அது பற்றி எனக்கு மெயில் அனுப்பியிருந்தாள்.. அவளுமே இந்த வகை மராட்டி இசையை கற்பதில் ஆர்வத்துடன் இருப்பவள், சமீபத்தில்.. ஏதோ ஒரு ஆசிரியரின் அறிமுகம் கிடைத்திருக்கிறதாம்..எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது.. ஆனால் என் அப்பாவும், அம்மாவும் என்ன சொல்வார்களோ? தெரியவில்லை? " என்ற பைரவியை ஒருவித இயலாமையுடன் பார்த்தனர் அவளின் பெற்றோர்.

"என்னம்மா, உனக்கு இப்படி ஒரு ஆசையா? .. நீ இந்தியா செல்ல ஆசை படுகிறாய் என்று எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே?" என்று கேட்ட விஸ்வனாதனுக்கு,

"ஏன்னங்க நீங்க, அவ தான் புரியாது பேசறாள் என்றாலும், நாம எப்படி இந்தியாவுக்கு பைரவியை அனுப்ப முடியும்" என்று கேட்ட கமலா, சட்டென்று நாக்கை கடித்து கொண்டார்.

"ஏன் ஆன்ட்டி, ஏன் இந்தியா செல்வது என்ன குதிரை கொம்பா?.. ஏன் பைரவியை என்னுடன் அனுப்பக் கூடாது?" என்றான் அஜய்.

"அது வந்து" இழுத்த கமலாவை பார்த்த விஸ்வனாதன்,

"அப்படியில்லை அஜய்.. பைரவி இந்தியா செல்வதில் எங்களுக்கு எந்த அப்ஜெக்க்ஷனும் இல்லை.. எங்கள் இருவரது இந்திய உறவுகளும் எப்பொழுதுதோ துண்டிக்கபட்டு விட்டது.. இதில் சொல்லுவதற்கு என்ன போயிற்று.. நானோ யாருமற்றவன்.. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இரு தங்கைகள் இருந்தாலும் உறவு விட்டுப் போய் விட்டது.. நான் உதவி தொகையுடன் மருத்துவம் படித்து அந்த சமயத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்திருந்தேன்.. கமலாவுமே தாய் தந்தை இல்லாமல், தன் அண்ணன் அண்ணியுடன் சென்னையில் இருந்தாள்.. அவள் என் தங்கையின் தோழியும் கூட. என் தங்கையின் தோழி கமலத்தை கண்டு ஆசைபட்டு திருமண முடிக்க நினைத்து முறைப்படி அணுகினேன்..அப்போது என் தங்கைக்கு கல்யாணம் ஆகவில்லை.. அதனால் என் தாய் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.. எப்படியோ நண்பர்களின் உதவியுடன் இரு வீட்டாரின் எதிர்ப்புடன் எங்கள் திருமணம் முடிந்தது.. நாங்களுமே சந்தோஷமாகவே இருந்தோம்..பல வருஷங்கள் குழந்தை இல்லை என்ற குறையைத் தவிர..எப்படியோ குழந்தை உண்டாகி..பைரவி பிரசவத்திற்கு அண்ணன் வீட்டுக்கு செல்ல பிரிய பட, என் அம்மா அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை.. பைரவியின் மாமாவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை அப்போது..பைரவி பிறந்த நான்காம் நாள் எதோ சொத்து சம்மந்தமாக பேச்சு வர, கமலாவின் அண்ணன் அவள் கையெழுத்தை வாங்கி கொண்டு தேவையில்லாமல் அவளிடம் சண்டையிட, அப்பொழுதே நாங்கள் எங்கள் பெண் பைரவியுடன் தில்லிக்கு வேலை மாறி வந்து விட்டோம்.. அத்துடன் அவர்கள் வீட்டு உறவும் முறிந்தது.. என் வீட்டு உறவும் என் தாய்க்குப் பின் விட்டுப் போய்விட்டது.. அவர்களுமே அதைத் தான் விரும்பினர். அடுத்த கொஞ்ச நாட்களிலேயே, எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, இங்கே வந்து செட்டிலாகி விட்டோம்.. என்னவோ, எங்கள் இருவருக்கும் இந்தியாவில் யார் இருக்கிறார்கள்.. அதனால் தான் அங்கே செல்ல இத்தனை நாட்களாக இஷ்டபடவில்லை?" என்றார் விஸ்வனாதன்.

தற்குள் வீட்டை அடைந்தவர்கள், கமலா காஃபி குடிக்க அஜய்யை அழைக்க, மறுக்காமல் உள்ளே நுழைந்தான்.

கமலத்தின் பில்டர் காப்பியை ரசித்து குடித்து கொண்டிருந்தவனை, "அது சரி அஜய், உன்னை தந்தையின் பூர்விகத்தை பற்றி ஏதாவது தெரிந்து கொண்டாயா?" என கேட்ட விஸ்வனாதனுக்கு,

"ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அங்கிள்.. அவருக்கு திருமணமான சமயத்தில் ஒரு மணமான தங்கை இருந்திருக்கிறார்.. என் சொந்த ஊர் மயிலாடுதுறை.. அவ்வளவு தான் தெரியும்..என் தந்தையின் டயரியில் எதோ அட்ரஸ் இருக்கிறது.. இந்தியா போன பின்னால் தேட வேண்டும்.. அடுத்த மாதம் போகலாம் என்று இருக்கிறேன்.. பைரவி இந்தியா வர இஷ்டப்பட்டால் சொல்லுங்கள்" என்றவன்

"தாங்க்ஸ் பார் தெ காஃபி ஆன்ட்டி" விடை பெற்று அங்கிருந்து சென்றான்.

பைரவியுமே தன் பெற்றோர்களிடம் மிகவும் களைப்பாக இருப்பதாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

ங்கள் அறைக்குள் நுழைந்த கமலா, "என்ன பைரவி இப்படி சொல்லி விட்டாள்.. இந்த பையன் என்னவோ இந்தியா போக ஆசை படுகிறான் என்றவுடன் அவளுக்குமே அதில் விருப்பம் என்பது மாதிரி பேசுகிறாள்.. இதென்ன வேண்டாத தலைவலி.. இத்தனை நாட்களாக நாம் ஒதுங்கி தானே இருந்தோம்.. மீண்டும் இந்த இந்திய பயணத்தின் மூலம் என்னென்ன பிரச்சனைகள் வர போகின்றனவோ? ..ஈஸ்வரா.. இது என்ன சோதனை?" என புலம்ப தொடங்க,

"ஏம்மா கமலா இப்படி புலம்பறே?.. இப்ப என்னாச்சு?.. தேவையில்லாமல் எதற்கு இப்படி டென்ஷன் படறே?..நம்ம கையிலே எதுவுமே இல்லை?.. ஒரு வேளை நம்ம பைரவி அஜய்யை விரும்பினா நாம வேண்டாம்ன்னு சொல்ல முடியுமா?.. அப்ப கல்யாணம் முடிந்து அவனோட இந்தியா போக விருப்பபட்டா நாம தடுக்க முடியுமா?.. அந்த பையன் தன்னோட வருங்கால ஆசையை சொல்லிட்டான்..நீ தானே சொன்னே, பிக்கல் பிடுங்கல் இல்லாத வரன்.. நம்ம பக்கத்திலேயே பைரவி இருப்பான்னு..பார்ப்போம் பைரவி என்ன சொல்லறா?, அந்த பையன் மனசுல இவ இருக்காளா? எல்லாம் தெரிஞ்சுப்போம்".. என்ற விஸ்வனாதனை

"ஆனா அந்த புள்ளை இந்தியா போக ஆசைப்படறானே?" என இழுத்தவளை,

"அதனாலென்னம்மா.. அவன் என்ன அங்கேயே இருக்கற போறேன்னு சொல்லையே.. ஏதோ கொஞ்சம் நாட்கள் சேவை பண்ண போறான்..அதோட தன் பூர்விகத்தை கண்டு பிடிக்கனும் என்று சொன்னான்.. ஒரு வேளை பைரவி அவனை திருமணம் செய்துண்டாலும், அவ படிப்பு இங்கே இருக்கே.. பாட்டை கத்துண்டு இங்கே தானே திரும்பி வர போறா.. விடும்மா.. மனசை போட்டு குழப்பிக்காதே?.. என்னிக்கோ நடந்ததை நாம் ஏன் இப்ப நினைக்கனும்? .. அந்த ஈஸ்வரன் மீது பாரத்தை போடுவோம்.. எல்லாம் நல்ல படியாக நடக்கும்? .. வா படுக்கலாம்" என்றவர் தன் மனைவியை அனுசரணையாக படுக்க வைத்தார் அந்த அன்பு கணவர்.

ம் இவர்கள் ஒன்று நினைக்க, அந்த எல்லாம் வல்ல ஈசன் என்ன நினைத்தான்?..

மறு நாள் காலை, தன் ஆராய்ச்சி கூடத்தில் இருந்த பைரவிக்கு அவளது தந்தையிடம் இருந்து ஒரு போன்கால் வந்தது, அவளது தாய் திடீரென்று மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக...

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.