(Reading time: 31 - 61 minutes)

டடே… வாங்க வாங்க…” என சதாசிவம் நதிகாவையும், மகத்தினையும் பார்த்து சொல்லிக்கொண்டே உள்ளே குரல் கொடுத்தார்…

“பார்வதி இங்க வா… சீக்கிரம் வந்து பாரு… யாரு வந்திருக்கான்னு…”

“இதோ வந்துட்டேங்க….” என்றவர், நதிகாவைப் பார்த்ததும், “அடடே… குட்டி பாப்பா வந்தாச்சா?... வாங்க… வாங்க… உள்ளே வாங்க….” என்றபடி அவளை கூப்பிட,

அவள் மகத்தினைப் பார்த்தாள்…

“ம்…” என அவன் தலைஅசைக்க, அவள் பார்வதியின் அருகே சென்றாள்…

அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டவர், அவளைத்தூக்கி கொள்ள,

மகத், சதாசிவம் தாத்தாவுடன் உள்ளே சென்றான்…

“மகத் உட்காருப்பா…” என அவனிடம் சொன்னவர், “ஏங்க நீங்களும் உட்காருங்க…. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்….” என சொல்லியபடி நதிகாவை மகத் அருகில் அமரவைத்துவிட்டு சாப்பாடு பாத்திரங்களை எடுத்து வந்தார் பார்வதி பாட்டி…

சூடாக இட்லி,, சாம்பார் சட்னியை வைத்து பரிமாறியவர், மகத்தினை சாப்பிட சொல்ல, அவன் மகளைப் பார்த்தான்…

“நீ சாப்பிடுப்பா… நான் நதிகாவை பார்த்துக்கறேன்…” என்றவர்,

“நதிக்குட்டி நாம சாப்பிடலாமா?...” எனக்கேட்க, அவளும், “ஹ்ம்ம்…” என தலைஅசைத்தாள்…

மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவளுக்கு இட்லியை அவர் ஊட்டி முடிக்க, அவளும் சற்று நேரத்திலேயே பார்வதியிடம் ஒட்டிக்கொண்டாள்… ஏற்கனவே அவன் பலமுறை சென்னைக்கு அவளை அழைத்து வந்திருந்த போதிலும், அவள் சதாசிவம், குருமூர்த்தி ஆகியோரை பார்த்து பேசியிருக்கிறாளே தவிர, பார்வதி பாட்டியை பார்த்ததில்லை…

“நதி…” என மகத் அழைத்ததும்,

“சொல்லு துருவ்…” என அவனருகில் வந்தாள் நதிகா…

“அப்பா இப்போ போயிட்டு மதியம் தான் வருவேன்… அதுவரை நீ சமத்தா பாட்டியை தொல்லைப் பண்ணாம இருக்கணும் சரியா?...” எனக் கேட்க

“ஹ்ம்ம்… நீ மதியம் தான் வருவீயா?...” என்றவள், முகம் வாடிய சற்று நேரத்திலேயே, “சரிப்பா… மதியம் சீக்கிரம் வந்துடுவல்ல?..” எனக் கேட்டாள்…

“கண்டிப்பாடா சீக்கிரம் வந்துடுவேன்…”

“அப்ப ஓகேப்பா… நீ போயிட்டுவா… நான் பாட்டியை பார்த்துக்கறேன்… தொல்லை குடுக்க மாட்டேன்… சேட்டை பண்ண மாட்டேன்… சமத்தா இருப்பேன் நீ சொன்ன மாதிரி…” என்ற மகளின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டுவிட்டு அவன் டாட்டா சொல்ல, அவளும் கை அசைத்தாள்…

“சிவா தாத்தா… டாட்டா…. பார்த்து போயிட்டு வாங்க….” என அவள் அவருக்கும் கைஅசைத்து டாட்டா சொல்ல,

“சரிடா கண்ணு…. வரேன்…” என அவரும் சென்றார் மகத்-உடன்…

காரில், சென்றுகொண்டிருந்த பொழுது,

மகத், காவேரிக்கு போன் செய்தான்…

“ராஜா… நதிகா எப்படி இருக்குறாப்பா?...” என எடுத்த வேகத்தில் அவர் கேட்க, அவன் முகத்தில் புன்னகை வந்திருந்தது…

“நல்லா இருக்குறா மதர்… வந்து முழுசா ஒரு நாள் கூட ஆகலை…. அதுக்குள்ள அவளைத் தேட ஆரம்பிச்சாச்சா?...”

“ஆமாப்பா… அவ இல்லாம என்னவோ போல இருக்கு… சாப்பிட்டாளாப்பா அவ?...”

“இப்பதான் மதர் சாப்பிட்டா…”

“சரிப்பா… உங்கூட அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறீயாப்பா?...”

“இல்ல மதர்… நான் சொல்லியிருக்கேன்ல… சதாசிவம் தாத்தா- பார்வதி பாட்டி… அவங்க வீட்டுல தான் விட்டுட்டு வந்திருக்கேன்… பாட்டி பார்த்துக்கறேன்னு சொன்னாங்க….”

“நல்லதுப்பா…”

“ஹ்ம்ம் மதர்… நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணினேன்…”

“சொல்லு ராஜா…”

“மதர்… சரவணப்பெருமாள் ஐயா கொஞ்சம் முடியாதவர்… அவருக்கு அதிகமான வேலையோ, இல்ல கஷ்டமான வேலையோ கொடுக்க வேண்டாம்… சும்மா குழந்தைங்க கூட இருக்கட்டும் குழந்தைங்களுக்கு துணையா… சரியா மதர்?...”

“அன்னைக்கே நீ சொல்லிட்டியே ராஜா… ஹ்ம்ம்… நீ கவலைப்படாத…. நான் பார்த்துக்கறேன்… அவருக்கு நான் எந்த வேலையும் கொடுக்கமாட்டேன் சரியா?...”

“அச்சோ மதர்… அப்படி செஞ்சிடாதீங்க… அவர் உழைக்கணும்னு ஆசைப்படுறவர் ரொம்ப… தான் சம்பாத்தியத்துல தன் மனைவியை காப்பாத்தணும்ன்ற வைராக்கியம் உள்ளவர்… அதனால அவரை குழந்தைங்களை பார்த்துக்க சொல்லுங்க… அவர் கேட்டா அதுதான் அவரோட வேலை அங்கன்னு சொல்லிடுங்க… அது போதும்….”

“நல்ல புள்ளைப்பா நீ…” என சிரித்தவர், “சரிப்பா… நீ சொல்லுறபடியே செஞ்சிடுறேன்… ஆகட்டுமா?...” எனக்கேட்க, அவனும் “சரி…” என்றபடி போனை வைத்தான்…

“எல்லாருக்கும் நல்லது செய்யுற மகத்… ஆனா உன் வாழ்க்கையில ஏன் எந்த நல்லதும் நடக்கமாட்டேங்குது?...”

“எனக்கு என்ன நல்லது நடக்கலை தாத்தா?... என்னை சுத்தி நீங்க எல்லாரும் இருக்கீங்க… எல்லாத்துக்கும் மேல என் பொண்ணு இருக்குறா… இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு?...” என அவன் கேட்க…

அவரோ அமைதியாய், “அப்போ குருமூர்த்தி சார் பொண்ணால நீ சந்தோஷமா இருக்குறீயா?...” என கேட்க

அவன் சட்டென்று காரை நிறுத்தி அவரைப் பார்த்தான்…

“தாத்தா…” என்றபடி அவன் அவரைப் பார்க்க

“சொல்லு மகத்… அந்த பொண்ணு வந்திருக்காதான இங்க?... காலையிலேயே குருமூர்த்தி சார் போன் பண்ணினார்…. நதிகாவை இங்க அழைச்சிட்டு வந்திட்டதா சொன்னார்…”

“ஆமா, தாத்தா… கன்யா வந்திருக்கா…”

“வழக்கம் போல இந்த தடவையும் உன்னை கேவலமா பேசினாளா?...”

“ஹ்ம்ம்ம் ஆமா…”

“உனக்கு கோபமே வரலையா மகத்?...”

“வந்துச்சு தாத்தா…”

“என்ன சொல்லுற வந்துச்சா?...” என ஆச்சரியமாய் கேட்டவரிடத்தில்,

காலையில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லியவன், மேலும் நடந்தவற்றையும் சொன்னான்…

குருமூர்த்தியிடம் பேசிவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பச் சென்றவன், அவர் தோட்டத்துப்பக்கம் செல்வதைப் பார்த்துவிட்டு, கன்யாவைத் தேடிச் சென்றான்… அவள் ஹாலில் அமர்ந்து டீவி பார்ப்பதை பார்த்துவிட்டு அவளருகில் சென்றவன்,

“ஒரு நிமிஷம்…” என்றான்…

அவள் “என்ன…” என்ற பாவனையில் அவனை கோபமாக பார்க்க,

“நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் கேவலமா பேசு… எனக்கு கவலை இல்ல… நான் வருத்தமும் படப்போறதில்லை… ஆனா நதிகாவை இன்னைக்கு சொன்னியே ஒரு வார்த்தை… அது இதுவே கடைசியா இருக்கணும்… என்னை அசிங்கப்படுத்துற மாதிரி அவளை எதாவது பேசணும்னு நினைச்ச, அப்புறம் என் கோபத்துக்கு நீ ஆளாகவேண்டியிருக்கும்… பார்த்துக்கோ… உன் அப்பாக்கு நீ முக்கியம்னா, எனக்கு என் பொண்ணு முக்கியம்… அவளுக்கு வார்த்தையால கூட எதுவும் பிரச்சினை வரக்கூடாது உன்னால… புரிஞ்சதா?...” என தெளிவான குரலில், அவளே அதிரும்படி பேசிவிட்டு அவள் பதிலுக்குக்கூட காத்திராது நேரான நடையுடன் சென்றுவிட்டான் மகத்…

நடந்ததை அவன் சொல்லி முடித்ததும், “நிஜமாவே நீதான் பேசினியா மகத்?... என்னால நம்பவே முடியலை…” என இன்னும் அதிலிருந்து மீளாதவராய் சதாசிவம் தாத்தா சொல்ல…

“நிஜம் தான் தாத்தா… காலையில கன்யாகிட்ட அப்படித்தான் சொல்லிட்டு வந்தேன்… அவ என்னை கேவலப்படுத்தியிருக்கா இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை… ஏன் இன்னைக்கும் என்னை கண்டபடி பேசினா தான்… ஆனா நான் கோபமே படலை தாத்தா... ஆனா நதிகாவை பேசிட்டா தாத்தா… என்னால அதை தான் தாங்கிக்க முடியலை…” என அவன் சொன்னதும்.

அவன் மனதை புரிந்து கொண்டவர், “அதுதான் அவளை அம்மான்னு கூப்பிட சொல்லியிருக்கல்ல மகத்… கன்யா மனசு மாறும்… நிச்சயம்…” என அவரும் அவன் கைப்பிடித்து சொல்ல… அவனும் புரிந்துகொண்டான் அவர் சொல்லும் அர்த்தத்தை…

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.