சரிம்மா வர வர நீ ரவி மனசுல நிறைய இடம் பிடிச்சிட்டு போற ...இப்பல்லாம் ஆதிய பத்தி பேசுறத விட உன்னை பத்தி தான் அதிகம் பேசுறார் ....ரொம்ப நல்ல மனசு மா உனக்கு .....மெல்லிய புன்னகை ஒன்றை அவள் உதிர்த்தாள்.
ஆமா, மனோம்மா ...என்ட்ட கூட உன்னை பத்தி நிறைய சொல்லி இருக்காரு நாம தேடி இருந்தா கூட இப்படி ஒரு நல்ல பொண்ண பார்த்திருக்க மாட்டோம்னு நிறைய தடவ சொல்லியிருக்காரு முத்து கூற அவ்வார்த்தைகளை கேட்ட படி அங்கே வந்தான் ஆதி ..இன்னும் இவள இப்படியே விடக்கூடாது என்ற எண்ணத்தில் ...
மேல வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்
இவன் இன்னும் என்ன சொல்ல போறானோ பயத்துடன் தான் சென்றாள் மனோ...
நீ நினச்சத சாதிச்சுட்ட இல்ல...ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கு ..?
ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
என் அம்மாயி சாப்பாட்டுல உப்பு உரைப்பு மட்டும் போட்டு வளக்கல..தன்மானம் அப்படீங்கற ஒன்னையும் சேத்து தான் வளத்தாங்க ...இப்ப நான் உங்ககிட்ட ஒரு விஷயத்த உறுதியா சொல்லிடுறேன் ..என் மனசு தெளிவா இருக்கு ஆதி ...டீல் முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன் எந்த மாற்றமும் இல்ல எந்த சூழ்நிலைலயும் அது மாறாது...