(Reading time: 21 - 41 minutes)

தும்மலால் மொத்தமாக சோர்ந்து போக தலை வேறு வின்னென்று தெறித்தது. ஆதி கொடுத்து மாத்திரையை போட்டு உறங்க முடிவெடுத்து மெத்தையில் சென்று படுத்து உறங்கியவள் திடீரென மூக்கில் ஏற்பட்ட அரிப்பில் எழுந்து அமர்ந்த அடுத்த நொடி "ஹச்ச்... ஹச்ச்.." என ஒரு பத்து தும்மல் அடுக்கடுக்காக இடைவெளி விடாமல் தும்மினாள். கண்கள் கலங்க மூக்கு முகமென எல்லாம் சிவந்து போய் நிமிர்ந்தவளின் முன் கிரேக்க சிலை போல் கணிணி மேஜையில் ஏறியமர்ந்து முட்டியில் கையூன்றியப்படி அடிப்பார்வை பார்த்து கொண்டிருந்தான் ஆர்யன். அப்போது தான் தன் மிக அருகில் பொசு பொசு முடியுடன் ஒரு நாய் நாக்கை தொங்கப் போட்டப்படி அருகில் நின்றதை கவனித்தாள்.  இவன் தெரிந்து தான் விளையாடுகிறான் என புரிந்ததும் "ஹே யு.." என ஆர்யனை நோக்கி ஏதோ திட்ட ஆரம்பிப்பதற்குள் மீண்டும் அந்த நன்றியுள்ள ஜீவன் உடலை வெறித்தனமாக உதற அதன் முடி தவறாமல் இந்திராவின் மூக்கை குறி வைத்தது. திரும்ப ஒரு இருபது தும்மல்களை தும்மினாள். இது சரி வராது என எழுந்து வெளியே செல்ல போனவளை கண்டு வேகமாக இறங்கி அவளருகில் ஓடி வந்து "எங்கடி ஓடுற.." என்றப்படி வன்மையாக அவளின் கைகளை பிடித்து திருப்பினான்.

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

 

கண்கள் மூக்கு என கண்முன் தெரியாமல் எரிந்து நீர் வடியவும் ஏற்கனவே சோர்ந்து போயிருந்தவள் அவன் வலிமையாக இழுத்த இழுப்பில் "ஆவ்வ்வ்வ்.." என்ற சத்தத்துடன் அவனின் நெஞ்சிலேயே விழுந்தாள். அவளின் முழு பாரத்தை சற்றும் எதிர்ப்பார்க்காதவன் "ஹே ஏய் ஏ.." என தடுமாற ஒரு கட்டத்தில் இருவரும் வாங்கி வைத்த கரடி பொம்மையின் ஒரு பாதி மேல் அடித்துக்கட்டி விழுந்தனர். கடைசியில் கரடி பொம்மை முழுவதுமாக அவர்களின் மேல் விழுந்து அதோடு அதன் பின்னாடி இருந்த சிறு ப்ளாஸ்டிக் ஷெல்ஃபும் அதனோடு சரிந்தது. அவன் கீழே இவள் மேலே என்றிருக்க இந்திராவால் ஒரு விரல் நுனியை கூட அசைக்க முடியவில்லை. அவனின் இதயம் துடிப்பது ஏதோ டி.டி.எஸ் சவுன்டில் காதுகளில் ஒலிக்க போதாதற்கு கரடி பொம்மையின் சிறு பஞ்சு ரோமம் அவளை இன்னும் சோதித்தது. 'இவளால் முடியாது' என்றுணர்ந்தவன் அவளின் இடையை தன் கைகளால் வளைத்து மறுப்பக்கம் இழுக்க அவனின் முகத்தினருகில் இவளின் கழுத்தடி மோதியது. "ஏய் என்ன மேன் ..." என கத்தியவளை சட்டை செய்யாது மீண்டும் அவளை இழுத்தவன் "நீ கீழ வாடி.. உன் காண்டாமிருகத்து மேலே என்னமோ விழுந்திருக்கு... உன்னால தூக்க முடியாது..." என எரிச்சலாக முனங்கினான். ஒருவழியாக அவள் கீழே வர இவன் மேலே போனான். இரண்டு நிமிடத்தில் இருவரும் எழுந்து நிற்க கையில் மாட்டியிருந்த அவளின் துப்பட்டாவை சுருட்டி அவள் முகத்திலேயே விசிரி அடித்துவிட்டு அறையை விட்டு விறுவிறுவென வெளியே சென்றான். இந்திராவிர்கு ஏதோ சுழல் காற்றில் சிக்கி வெளியே வந்தது போல் இருந்தது. "ஹுஃப்ப்.." என்று நிம்மதியாக மூச்சு விட்டவள் மீண்டும் தும்ம ஆரம்பித்தாள்

தொடரும்

Episode # 02

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.