(Reading time: 11 - 21 minutes)

தே நேரம் தனக்கு வந்த பூங்கொத்தையும் கேக்கையும் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சகிதீபன் ... அவன் அறை நண்பர்கள் மூவரும் வெளியில் சென்றிருந்தனர் .. தான்யாவிற்காக தனது அறையில் அமர்ந்திருந்தான் அவன் ... காலிங் பெல் ஒலி கேட்கவும்

" உள்ள வா மைதா மாவு " என்றான் அவன் ..

" ஹே சகீ .. என்ன நீயே போன் பண்ணி வான்னு சொல்லி இருக்க .. என்ன விஷயம் மேன் ? ஹே வாவ் சாக்லட் கேக் ... பட் இன்னைக்கு என் பர்த்டே இல்லையே டா "

" உனக்கு பெர்த்டே கொண்டாடத்தான் உன்னை கூப்பிட்டேன்னு நான் சொன்னேனா ?"

" அதானே பார்த்தேன் ... கஞ்ச பிரபு ஆச்சே நீ "

" அடியேய் "

" ஹீ ஹி ... ரிலாக்ஸ் மேன் .. சொல்லு என்ன விஷயம் ?"

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

" இது ஆன்லைன்ல இருந்து எனக்கு வந்த கிபிட் " என்றபடி கேக் , பூங்கொத்து கூடவே இருந்த அந்த சின்ன வாழ்த்து அட்டையையும் காட்டினான் ..

" உனக்கு யாருடா இதெல்லாம் அனுப்பினது ? ஒருவேளை , அனுப்பறதுக்கு யாரும் இல்லையேன்னு உனக்கு நீயே அனுப்புனியா ? "

" உன் மூஞ்சில கேக் அபிஷேகம் செய்யலாம்னு இருக்கேன் .. நீ என்ன நினைக்கிற ?"

" ச்ச .. நீ எவ்வளவு நல்லவன் நண்பா.. இதுக்கெலாம் டென்ஷன் ஆகிட்டா , சகியை இந்த உலகம் என்ன பேசும் "

" ஆ ...தாங்க முடியல டீ உன் அறுவை "

" ஹீ ஹீ .. சரி கார்ட் ஐ திற "

" திறந்தாச்சு திறந்தாச்சு "

" படிச்சு பாரு "

" படிச்சாச்சு படிச்சாச்சு "

" யாரு அனுப்பி இருக்கா ?"

" சொன்னா நீ ஷாக் ஆகிடுவியே மைதாமாவு ?"

" உன்னால , நான் எரிச்சல் ஆகுறது விட ஷாக் ஆகுறது பரவாயில்ல தான் "

" அப்படிங்குற ?"

" ஆமாங்குறேன் "

" சரி அப்போ இந்தா நீயே படி " அந்த கார்ட்டை எடுத்து அவளிடம் நீட்டினான் சகி ..அதை வாங்கி கொண்டே நண்பனின் முகத்தை பார்த்தாள் தான்யா .. அவன் முகத்தை வைத்து அவனது மனநிலையை அவளால் கணிக்க முடியவில்லை ..

" சரியான கல்லுளி மங்கன் " என்று அவனுக்கு பட்டப்பெயர் வைத்தபடி கார்ட்டை திறந்தாள் ..

" வானம் நீலம்

நீ தான் என் பாலம் ............ டேய் இது சென்னை 28 படம் டைலாக் ஆச்சே "

" ஹா ஹா முழுசா படியேன் "

" வானம் நீலம்

நீதான் என் பாலம்

இப்படியெல்லாம் கவிதை சொல்லித்தான் உனக்கு விஷ் பண்ணனுமா ?

நான் ஜெர்ரி ன்னா , நீ டாம் !

சோ மை டியர் திருட்டு பூனை

மிஸ் யூ ..

ரொம்ப எல்லாம் மிஸ் பண்ணல ..ஜஸ்ட் கொஞ்சமா தான் ..

கேக் சாப்பிடு சந்தோஷமா இரு ..

இந்த கேக்கும் நானும் ஒண்ணுதான் .. லிமிட்டா இருந்தா எப்பவுமே

சோ ஸ்வீட் - விஷ்வா "

என்று கையொப்பம் இட்டு இருந்தந்து ..

" விஷ்வா ... ஹே .. வினயா ? உன் தங்கச்சியா டா உனக்காக இதெல்லாம் அனுப்பினா ?" விழிகள் மின்னிட கேட்ட தோழியை பார்த்து சிரித்தான் சகீ ..

" ஹே , அதுக்கு நீ ஏன் இவ்வளவு எக்சைட் ஆகுற ?"

" ஹே பின்ன , நீ தான் உன் தங்கச்சியை எதிரி மாதிரி ட்ரீட் பண்ணுற .. அவளை பார்த்தியா ? சோ ஸ்வீட் ல ?"

" அவ எனக்கு எதிரியா ?" என்றவன் எழுந்து ஜன்னலோரமாய் நின்று கொண்டான் .. மனதிற்குள் ஏதேதோ நினைவுகள் கண்முன்னே நிற்க , வானத்தை வெறித்தான் சகிதீபன் .. அதை கவனிக்காமல்

" வா டா கேக் சாப்பிடலாம் " என்றாள் தான்யா .. அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் , அவனை திரும்பி பார்த்தாள் அவள் ..

" சகி "

" என்னடி ?"

" ஆர் யூ ஓகே ?"

சட்டென தலையை உலுக்கி கொண்டவன்

" யா யா .. என்ன சொன்ன , அவ எனக்கு எதிரின்னா ? லூசு , மாமானுக்கு எதிரியாகுறதுக்கு கூட ஒரு தகுதி வேணாமா ? கிறுக்குபயபுள்ள " என்றான் இடக்காய் ..

" மாமானா ?? கிறுக்குபய புள்ள ? எங்கப்பாவை கிறுக்குன்னு சொல்லுறியா ? டேய் உன்ன என்ன பண்ணுறேன் பாரு " என்றபடி அவனை விரட்ட தொடங்கினாள் தான்யா .. அதுக்கப்பறம் அவங்க ரெண்டு பேரும் நல்லா சண்டை போட்டுட்டு கேக் சாப்பிடட்டும் ,.. நாம நம்ம அபி சாரை பார்ப்போமா ?

ரவாகிவிட்டது ..! அடிக்கடி அந்த அறைக்குள் ஏதாவது காரணம் சொல்லி வந்தவள் அந்த பூங்கொத்தை தேடி கொண்டிருந்தாள் ..அவளது மனநிலையை உணர்ந்தாலும் , அதை வெளிகாட்டி கொள்ளாமல் போனில் தங்கையை அழைத்தான் ..

" ஹெலோ "

" அண்ணா ???" உற்சாகமாய் ஒலித்தது விஷ்வானிகாவின் குரல் ..

" ம்ம்ம் நான்தான் .... " என்றவனுக்கு என்ன பேசுவது என்றே கொஞ்சம் திணறலாய் இருந்தது ..அந்த தயக்கத்தை மறைத்தபடி

" எ ..என்ன பண்ணுற ? சாப்பிட்டியா ?" என்றான் ..

" ம்ம்ம் நான் சாப்டேன் அண்ணா .. நீங்க ?"

" ம்ம்ம் சாப்டேன் டா.... "

" ம்ம்ம்ம் அப்பறம் அண்ணா "

" அது "

" ரோசஸ் கிடைச்சுது போலிருக்கே "

" ம்ம்ம் ஆமா "

" இதை சொல்ல இவ்வளவு தயக்கமா அண்ணா "

" அதில்லை .. என்ன திடீர்னு ?"

" நம்ம வீட்டுக்கு நான் திரும்பி வரும்போது சொல்லுறேன் "

" எனக்கே ரகசியமா ?"

" ஹா ஹா ஏன் ? எங்கண்ணா கிட்ட நான் விளையாட கூடாதா ?"

" ஹா ஹா சரிதான் "

" ம்ம்ம் பாட்டி கூப்பிடுறாங்க அண்ணா ..அப்பறம் பேசுறேன் .."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.