(Reading time: 10 - 20 minutes)

வள் சென்ற சற்று நேரத்தில் ஆதியும், மெதுவாக தண்ணீரை விட்டு வெளியே வந்தவன், மதி சென்ற பாதையில் சென்றான். கொஞ்ச தூரத்தில் அவளை கண்டவன், அவளோடு நடக்க ஆரம்பித்தான்.

மதிக்கு, ஆதியை அவ்வளவு அருகில், அதுவும் வெறும் துண்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டு பார்த்து வெட்கமாக இருந்தது. தலையே நிமிராமல் நடந்து கொண்டிருந்தாள்.

ஆதி, “வினு, எனக்கு இங்கே வந்த பின் நம் சிறு வயது ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம் நீயும், நானும் ஒருவரை விட்டு ஒருவர் எங்கியும் போக மாட்டோம். இருவரும் இந்த தோட்டம் முழுவதும் ஓடிபிடித்து விளையாடியதும், அந்த மாமர ஊஞ்சலில் ஆடியதும் நினைவுக்கு வருகிறது. உனக்கு அது எல்லாம் நினைவு இருக்கிறதா?” என்றான்.

“எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது.” என்றாள்.

“அப்போது வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாய்? இப்போ அவ்வளவு பேசுவதில்லையே? ஏன் வினு?”

You might also like - Moongil kuzhalanathe... A family drama...

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.”

“இந்த பதினைந்து வருஷத்தில் உன்னிடம் நிறைய மாற்றம் வினு.. ஒவ்வொரு லீவ்க்கு வரும் போதும் அந்த வருஷ கதையே என்னிடம் சொல்வாய். இப்பொழுது நான் கேட்டால் மட்டும் தான் சொல்கிறாய். சரி. நீ சொல். இத்தனை நாள் உனக்கு எப்படி போனது? படிச்சது, பிரெண்ட்ஸ் பற்றி சொல்லு.”

மதியும் அவன் கேட்டவற்றை சொல்ல ஆரம்பித்தாள். படிப்பு பற்றி சொல்லியவள், “பிரெண்ட்ஸ் என்று யாரும் அதிகமாக இல்லை. எல்லோரோடும் நன்றாக பழகுவேன், வெளியில் பார்த்தால் அடையாளம் கண்டு பேசுவேன் அவ்வளவுதான்.” என்றவள், “உங்களை தவிர யாரிடமும் நான் உரிமையோடு பழகியதில்லை. பிறகும் யாரிடமும் நான் நெருங்கவில்லை” என்றாள்.

மதியின் இந்த பதிலில் அவளை நேராக பார்த்தவன் , அவளை தன்னோடு இழுத்து அணைத்தவாறு நடந்தான்.

இப்பொழுது மதி ஆதியிடம் “நீங்கள் உங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?” என

ஆதி “உன்னை போல் தான் நானும், உனக்கு பின் எனக்கு பள்ளியில் நெருங்கிய பிரெண்ட்ஸ் யாரும் கிடையாது. யாரிடமும் சண்டையிடுவது கிடையாது. அதே சமயம் நெருக்கம் கிடையாது. ஆனால் கல்லூரியில், நீ பார்த்தாயே அவர்கள் இருவரும் கொஞ்சம் க்ளோஸ். மேலும் நான் வெளிநாடு சென்ற போது அந்த ப்ரண்ட்சோடு ஒரே அபார்ட்மெண்டில் ஷேர் செய்ததால் அவர்கள் கொஞ்சம் க்ளோஸ். மற்றபடி என்றும் எனக்கு நெருக்கமானவள் நீ மட்டும் தான். “

இதைக் கேட்ட மதி அவன் தோளில் தலை சாய்த்தாள். அவர்கள் இருவரும் கொஞ்ச நாட்களாக நன்றாக பழகினாலும், மதியாக உரிமை எடுத்து ஆதியிடம் நெருங்கியது இதுவே முதல் முறை. இருவருக்குள்ளும் இடையே சிறுவயதில் இருந்த  நேசம் வெளிப்பட ஆரம்பித்தது.

சற்று நேரத்தில் பேச்சு குரல் கேட்க, மதி ஆதியிடமிருந்து விலகினாள். அப்போது அங்கே வந்த மற்றவர்கள், ஆதியை பார்த்து

“என்ன தனிமையிலே இனிமை காண வந்தீங்களா” என.

ஆதியோ “நீங்க ப்ரீ யா என்ஜாய் செய்யலமேன்னு வந்தேன்” என்றான்.

“இதுதான் பக்கத்துக்கு இலைக்கு பாயசமோ ?” என்று வாரினார்கள். பேசி கொண்டே எல்லோரும் வீட்டிற்குள் வர, பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பிரகாஷின் அப்பா, அம்மா “சம்பந்தி.. நாங்க இப்போ கிளம்பி எங்க ஊருக்கு போறோம் .. நீங்க எல்லோரும் நாளைக்கு காலையில் அங்கே வந்து விடுங்கள். பிரகாஷ், நாளைக்கு நம்ம கோவிலில் பூஜை, எல்லோரையும் அழைத்துக் கொண்டு வா” என்று விட்டு கிளம்பினர்.

அவர்களை வழியனுப்பி விட்டு அப்படியே முற்றத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

முதலில் சூர்யா சுந்தரத்திடம், “மாமா, நீங்கள் இவ்வளவு நெருங்கிய பிரெண்ட்ஸ் இருந்துட்டு எப்படி இத்தனை வருஷம் தொடர்பு இல்லாமல் இருந்தீங்க?” என்று கேட்க,

“நாங்கள் தொடர்பில் தான் இருந்தோம். நீங்கள் தான் அதாவது சிறியவர்கள் தான் தொடர்பில் இல்லை. நானும், ராகவனும், ஏன் உன் மாமா வாசுவும் கூட ஒவ்வொரு வருடமும் பார்த்து கொள்வோமே ..” என்றார்.

இது எல்லோர்க்கும் ஆச்சரியமே. ஜானகியும், மீனாட்சியும் மட்டுமே சாதாரணமாக இருந்தார்கள். அதிதி தன் அன்னையிடம் “அம்மா, உங்களுக்கும்  இது தெரியுமா?” என்றாள்.

“அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பது தெரியும். அதை போல் நானும், மீனாட்சியும் போனில் பேசிக் கொள்வோம். அவள் சென்னை வரும் போது கோவிலில் வைத்து பார்த்துக் கொள்வோம்.”

“எங்களுக்கு புரிந்த வரை நமக்குள் எந்த சண்டையும் இல்லை. வேறு அப்படி என்ன பிரச்சினை நம் குடும்பத்தில் ? “ என்று சூர்யா கேட்க, ஜானகி சொல்ல ஆரம்பித்தார். தங்கள் குடும்ப நட்புகளை பற்றி சொன்னவர்கள், ஆதி, மதியின் பாசமும், சூர்யா பிறந்ததினால், ஆதியிடம் கவனம் செலுத்த முடியாமல் போக, மீனாட்சி ஆதியை கவனித்துக் கொண்டதும், அவர்களோடு அவனுக்கு ஏற்பட்ட பிணைப்பு பற்றியும் சொல்லியவர், கடைசியாக ஆதி அவன் அத்தையிடம் அடி வாங்கிய வரை சொன்னார். இதை கேட்ட சூர்யா, அதிதி, வாணி மூவருக்கும் புரியவில்லை.

சூர்யா, “அந்த பதிமூன்று வயதில் அண்ணாவுக்கும், பத்து வயதில் அண்ணிக்கும் என்ன தெரியும் என்று அத்தை இப்படி செய்தார்கள்?” என்று கேட்க.

ராகவன் “உன் அத்தைக்கு அப்போதிருந்து எங்கே ஆதியும், மதியும் ஜோடி சேர்ந்து விடுவார்களோ என்று கவலை. அவர்கள் ஜோடி சேர்ந்தால் நம் ஆதி கன்ஸ்ட்ரக்ஷனில் பெரும் பங்கு நம் இருவர் குடும்பத்துக்கு மட்டுமே என்று எண்ணி விட்டாள்” என்றார். இதை கேட்ட ஆதி திடுக்கிட்டு அமர்ந்தான்.

 ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்னை மழை எல்லோரையும் ஆட்டுவித்ததில், நானும் மாட்டிக் கொண்டதால், இந்த அப்டேட் கொடுக்க ரொம்ப லேட் ஆச்சு. பொறுமையாக காத்திருந்த எல்லோருக்கும் நன்றி. இனிமேல் அப்டேட் கூடிய சீக்கிரம் கொடுக்க முடியும்னு நம்பறேன். வழக்கம் போல் உங்க கமெண்ட்ஸ் க்கு காத்திருக்கிறேன்.

சென்னையில் உள்ள நம்ம சில்ல்சீ பிரெண்ட்ஸ் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன். டேக் கேர் பிரெண்ட்ஸ்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.