(Reading time: 12 - 23 minutes)

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!

அள்ளியணைத்திடவே-என்முன்னே

ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!

உள்ளம் குளிருதடீ;

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்

ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளருதடி

மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்

கள்வெறி கொள்ளுதடீ

உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா

உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்

உத்திரங் கொட்டுதடி;

என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ!

என் உயிர் நின்னதன்றோ!

என் உயிர் நின்னதன்றோ!

என்று நிறுத்த அந்த நொடியில் ஆனந்துக்கு தெரிந்து போனது இவள் என்னவள்.. எனக்கென பிறந்தவள் என்று..

You might also like - Barath and Rathi... A free English romantic series

படபடவென்று கைத்தட்டல் ஒலியில் கண்களைத் திறந்த பைரவிக்குள் சிறு வெட்கம் பரவியது..நிமிர்ந்து ஆனந்தை பார்த்தவளுக்குள் ஒரு சிறு சிலிர்ப்பு ஓடியது..ஏன் இவன் இப்படி பார்க்கிறான்..

கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த ராமனாதன்..சில நிமிஷங்கள் பேச்சை மறந்து ஏதோ ஓர் உலகிற்கு கொண்டு செல்லப் பட்டார்..

மெல்ல தன்னை சுதாரித்தவர்..

"மை காட்.. என்னம்மா சொன்ன நீ ஏதோ பாடுவேன்னு.. இது ஏதோவா.. இது தான் இசை.. கட்டி போட்டுடுத்து என்னை..எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை..ஆனா.. காட் ப்லெஸ் யூ மை சைல்ட்.. ", என்று தழுதழுத்தார்..

"தாங்க்ஸ்.. அங்கிள்..அதனால் தான் யோசித்தேன்.. இந்தப் பாட்டு எப்பவும் மனசை ஏதோ பண்ணிடும்..எங்கப்பா அம்மா நியாபகம் வரும்.. அவா ரெண்டு பேரும் இப்படித்தான்.. ஒருவருக்கு ஒருவர்ன்னு.. இருப்பா", என்றாள்.

அதன் பிறகு நேரம் சென்றது அவர்களுக்கே தெரியவில்லை.. ஒருவழியாய் இரவு பதினோறு மணிக்கு வீடு திரும்பினர் இருவரும்.. சலனமற்ற இரவில் பைரவியின் உள்ளத்தில் சிறு சலனம் அவளறியாமல் உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொண்டது.. ஆனந்தை பற்றியே யோசித்து கொண்டிருந்தவள், 'கூடவே இருக்கும் அஜய்யுடன் தோன்றாத ஏதோ ஒரு உணர்வு இன்று ஆனந்தை பார்த்தவுடன் ஏன் ஏற்படுகிறது??.. இந்த உணர்வுக்கு என்ன பெயர்??.. இரவு வெகு நேரம் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டவள், மனம் குழம்ப, இனி இதை பற்றி யோசிக்க வேண்டாம், வந்த வேலையை முதலில் பார்க்கலாம் என தீர்மாணித்து , கண்களை மூடியவள், மெல்ல உறக்கத்தை தழுவினாள்.

தொடரும்

Episode 14

Episode 16

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.