(Reading time: 18 - 35 minutes)

ப்ப என்ட்ட அறை வாங்க போற பாரு நீ……பேச்சுக்கு கூட இப்படி சொல்லாத….நான் ரொம்ப வருஷம் நல்ல ஹெல்த்தோட இருந்தே ஆகனும்…..வேற ஏதாவது பேசு….” அத்தனை நேரம் முகத்தில் இருந்த துள்ளல் எல்லாம் மறைந்து சட்டென ஒரு வித இறுக்கமும் நடுக்கமுமாய் மாறி இருந்தாள் நிலவினி. அவள் முகம் பயத்தில் நீலம் பாய்ந்தது போல் இருந்தது.

அடுத்த நொடிதான் தான் என்ன பேசி இருக்கிறோம் என்பதே உறைத்தது பவிஷ்யாவுக்கு.

“சரி சரி வேற ஏதாவது யோசிப்போம்….ஆங் ஒன்னு செய்யலாம் அந்த மாப்பிள்ளை ஊர் ஏதோ வில்லேஜ்னு தானே சொல்ற….நீ அல்ட்ரா மார்டனா ட்ரெஸ் போட்டுக்க… என் காலேஜ் கேங் ஒன்ன வர சொல்றேன்…. அவங்கல்லாம் அதி அல்ட்ராமார்டன்….கூட சேர்த்துக்கிட்டு  அந்த ஊருக்குள்ள நாலு ரவ்ண்ட் போய்ட்டு வா…..அந்த கேங் உன் இமேஜை இனஃப் டேமேஜ் செய்து தருவாங்க…….எப்படியும் மாப்ள வீட்டுக்கு நியூஸ் போய்டும்…..குடும்பத்துக்கு ஒத்து வராது இந்த கேடி பொண்ணுன்னு சொல்லி கல்யாணம் கேன்சல்….எப்படி…?”

“சீ போடி இவளே….ஜெயநாதன் பொண்ணு இப்படி  கன்னா பின்னான்னு கேடியா  சுத்திச்சுன்னு இங்க எங்க வீட்டு வரைக்கும் நியூஸ் வருமே…அதை கொஞ்சம் யோசி….”

“ஆமா அதுவும் பாய்ண்ட்….பக்கத்து ஊருன்றப்ப எப்படியும் உங்க சொந்தக்காரங்க நாலஞ்சு பேர் இருக்கத்தான் செய்வாங்க….”

“அதுவும் பாய்ண்ட் இல்லை…அதுதான் பாய்ண்ட்….என்னைப் பத்தி தப்பா, கெட்டதா எதுவும் அப்பா காதுக்கு வரக்கூடாது…. அப்பா காதுல விழுந்தாலும் அவங்க சந்தோஷப் படனும் அப்படி  நல்லதா எதாவது சொல்லிதான் வெட்டிங்கை நிறுத்தனும்…..சோ பொய் fakeலாம் வேண்டாம் சொதப்பிடும்…உண்மைதான் எப்பவும் ஸ்ட்ராங்…”

 “நல்லதும் உண்மையுமா?”

“ஆமா”

“அப்பா கேட்டா சந்தோஷப்படனுமா?”

“யெஸ்ஸு”

“அப்ப ஒன்னு செய்வோம்….”

“சொல்லு”

 “எங்க நிலவினிட்ட ஒரு பெரிய ப்ரச்சனை…..அவ எப்ப பாரு வித விதமா சமைப்பா….வெரைட்டி வெரைட்டியா ப்ரொவிஷன் வாங்க உங்க பையன் ஊர் ஊரா சுத்த வேண்டியதாகிடும்…….”

“அது…..ஹேய் இந்த ஐடியா ஜூப்பரு….நீ மேல செப்பு”

“அவ சமைக்கிறது வேற நல்லா இருந்து தொலைக்றதால தெருவுல உள்ள நாலு வீட்ல இருந்தாவது  தினமும் குழம்பு தாங்க கூட்டுதாங்கன்னு ஆள் வந்து நிக்கும்…உங்க சொத்தெல்லம் ஊருக்கு சாப்பாடு போட்டே காலி ஆகிடும்… “

“பாய்ண்டு மா பாய்ண்டு…..மேல சொல்லு”

“தினமும் ஸ்வீட் வேணும் அவளுக்கு, அதனால அது வேற செய்து வைப்பா….அத சாப்டன்னு சுத்து வட்டாரத்துல உள்ள அத்தனை குழந்தையும் உங்க வீட்லதான் காச்சு மூச்சுன்னு கத்திகிட்டு கிடக்கும்…”

“இது டாப்நாட்ச்…சும்மா நச்சு பிச்சு…..”

“அந்த குட்டீஸெல்லாம் உங்க வீட்ல இருக்ற புக் செல்ஃப கலைக்கும்….ஃபிஷ் டேங்க உடைக்கும்….”

“ஹேய் நிறுத்து நிறுத்து…….இது எங்கப்பா காதுல விழுறப்ப எங்க வீட்டு பிஷ்டேங்க உடச்சது எதிர் வீட்டு ஜோயல்னு கண்டு பிடிச்சுடுவாங்க” 

“போடி இவளே….” தலையில் அடித்துக் கொண்டாள் கேட்டிருந்தவள்.

“சும்மா சும்மா கல்யாணம் செய்ய மாட்டேன் செய்ய மாட்டேன்னு ஓவர் பில்டப் கொடுக்றது போதும் நிலு….நிச்சயமா நான் உன்னை கிண்டல்லாம் பண்ணமாட்டேன்….அதை அவாய்ட் செய்றதுக்குன்னு இவ்ளவு ஆக்ட் செய்ய வேண்டாம்….அண்ணாவைப் பத்தி இப்பயாவது சொல்லு….அவங்க என்ன செய்றாங்க? போட்டோ பாத்தியா? பிடிச்சிருக்கா இல்ல ரொம்ப பிடிச்சிருக்கா?” கிண்டலை நிறுத்தி ஆவலும் ஆர்வமுமாய் இயல்பான தொனிக்கு வந்தாள் பவிஷ்யா.

பவிஷ்யாவின் வீடு நிலவினி வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளிதான். ஸ்கூலிங் முழுவதும் இருவரும் இணைந்து தான் டீச்சர்களை ரகளை செய்து களேபரபடுத்தியது. காலேஜ்தான் நிலவினிக்கு எஞ்சினயரிங் நேட்டிவிலேயே……பவிஷ்யாவை மெடிசின் படிக்க ரஷ்யா அனுப்பி இருந்தனர். நிலவினி பிஜி முடித்த இந்நேரம் பவிஷ்யா யூஜி முடித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறாள்.

நிலவினிக்கு காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் என ஒரு கூட்டம் இருந்தாலும் பவிஷ்யாதான் க்ளோஸ் டு ஹார்ட். மற்றவர்களிடம் சிரிப்பாய் பேசுவது மட்டும் தான் அவள் வழக்கம். இவளிடம் மட்டும் மனதின் ஆழத்தில் இருக்கும் விஷயங்களும் அவ்வப்போது வெளியிடப் படும்.

மத்த ஃப்ரெண்ட்ஸ்ட்ட எனக்கு வரப்போறவன் இப்டிலாம் இருக்கனும் என வழியே இல்லாத கண்டிஷன்ஸை சொல்லி சிரிப்பாளெனில் இவளிடம் மட்டும்  நான் மேரேஜே செய்யப் போறதில்லை என உள் மன உணர்வை அப்படியே சொல்வாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.