(Reading time: 7 - 13 minutes)

டுத்ததாக குஹன் வந்தான்.

“நீங்க கதிரவனோட பிரென்டா?”

“ஆமாம் ஒரு காலத்துல பிரெண்ட். பிரெண்ட்ஷிப் பேரை சொல்லி என்னை பிஸ்னஸ் பார்ட்னராக சொல்லிட்டு எல்லா பணத்தையும் எடுத்துகிட்டு ஓடி போன நல்ல பிரெண்ட் அவன்”

“போலீஸ்ல கதிரவன் பத்தி கம்ப்ளெயின்ட் செய்யலையா நீங்க?”

“செய்தேன் ஒரு பிரோயோஜனமும் இல்லை. கடைசியா ஒரு ப்ரைவேட் டிடக்டிவ் வச்சு கண்டுபிடிச்சு இங்கே வந்தேன்”

“கதிரவன் உங்களை வீட்டை விட்டு துரத்தாதது உங்களுக்கு ஆச்சர்யமா இல்லையா?”

“எப்படி துரத்துவான் அவன்? என் கிட்ட தான் அவனோட ஏமாத்து வேலையை நிருபிக்குற சாட்சி இருந்ததே. இவன் செய்த அயோக்கியத்தனத்தால என் மனைவியோட வியாதியை கூட கவனிக்க முடியாமல் அவளை பறி கொடுத்துட்டேன். செய்த பாவத்துக்கு அவனுக்கு இந்த முடிவு தேவை தான்.”

“நீங்க கதிரவனை கடைசியா எப்போ பார்த்தீங்க?”

“தூங்க போறதுக்கு முன்னாடி பார்த்தது தான் அப்புறம் காலையில் அந்த பொண்ணோட அழுகை சத்தம் கேட்டு தான் முழிச்சேன்”

“யார் அவர் வைஃப்பா”

“இல்லை இல்லை கதிரவனோட பொண்ணு. இவங்க இரண்டு பேருல சொத்து யாருக்கு போகும் சார்?”

“ஏன் கேட்குறீங்க? “

“அவங்க இரண்டு பேர்ல ஒருத்தர் தான் இந்த கொலையை செயதிருக்கனும்”

“சொத்துக்காக செய்திருப்பாங்கன்னு நினைக்குறீங்களா?”

“ஆமாம். இவனெல்லாம் ஒரு மனுஷன். உயிர் வாழ தகுதி இல்லாதவன். செத்து போனதே சரி தான். அவ்வளவு தானே சார், நான் போகட்டுமா?”

“யெஸ், கடைசியா ஒரே ஒரு கேள்வி. இந்த ரூம்ல உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா தெரியுதா?

தேனின் கையில் இப்போதும் அந்த பேப்பர்வெயிட் இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்த குஹன்,

“பெருசா ஒன்னும் தெரியலை. டேபிள்ல அவன், அவன் பொண்ணும் முதல் மனைவியும் இருந்த போட்டோ ஒன்னு இருந்துச்சு. அதை தவிர எனக்கு ஒன்னும் தெரியலை”

“சரி நீங்க போகலாம்.”

டுத்ததாக சுமா அழுதபடி வந்தாள்.

“உங்க அப்பா இறந்ததில் உங்களுக்கு அவ்வளவு வருத்தமா?”

“என்ன சார் இப்படி கேட்குறீங்க? எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவர்”

“அப்போ உங்க காதலனை துரத்தினதுக்கு கோபம் இல்லையா?”

சுமா அழுகையை நிறுத்தி விட்டு அவனை பார்த்தாள்.

“சொல்லுங்க சுமா”

“அவர் என்ன செய்தாலும் என் அப்பா. அவர் இறந்தது எனக்கு பெரிய இழப்பு தான்”

“உங்க சித்தியை பத்தி என்ன நினைக்குறீங்க?”

“என்ன நினைக்க? எனக்கு அக்காவா இருக்கும் வயசில இருக்காங்க. இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.”

அந்த பேச்சில் இருந்த குத்தல் தேனின் கவனத்திற்கு வந்தது.

“நீங்க உங்க அப்பாவை கடைசியா எப்போ பார்த்தீங்க?”

“நேத்து நைட் எப்போதும் போல தூங்கும் முன் இந்த ரூம்ல இருந்த இரண்டு பேர் கிட்டேயும் குட் நைட் சொல்ல வந்தேன்”

“ஓகே. இந்த ரூமில உங்களுக்கு வித்தியாசமா ஏதாவது இருக்கா?”

“சித்தி சொன்னாங்க. இங்கே இருந்த அப்பா அம்மா போட்டோவை நான் தான் எடுத்தேன்”

“கொலை நடந்த இடத்துல இருக்கிறது எல்லாமே எவிடென்ஸ் அதை நீங்க தொடக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?”

“சாரி சார். “

“அதை போய் எடுத்துட்டு வாங்க”

சுமா எழுந்து செல்ல, தேன் அபினவை பார்த்தான்.

“என்ன அபினவ், இப்போ யாரு நம்ம ப்ரைம் சஸ்பெக்ட்ன்னு உங்களுக்கு தெரியுதா?”

“யெஸ் சார்”

“எங்கே உங்க தியரியை சொல்லுங்க பார்ப்போம்”

அபினவ் தன் தியரியை சொல்லும் போதே, துப்பறியும் புலிகளான நீங்களும் உங்க தியரியை சொல்லுங்க.

விடை அடுத்த வியாழன் வெளியாகும்.

Episode # 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.