(Reading time: 20 - 40 minutes)

க்கா பேசிக் கொண்டு போக….நிலவினிக்கு புறை ஏறுகிறது என்றால் அம்மா அக்காவின் பேச்சில் பாதியில் இடையிட்டார்.

“அப்டின்னா சொல்ற தம்மு….. அப்ப நான் பிள்ளய எப்படிடி வளத்துறுக்கேன்….என் பிள்ள தேவையில்லாம ஒருத்தர்ட்டயும் ஒரு வார்த்தை பேசாது….படிக்க போனமா வந்தமான்னு இருக்கும்…. என் சேலைய பிடிச்சுட்டே சுத்தும்னு நினச்சுகிட்டு இருக்கேன்….இவ இப்படி வேலை பார்த்திருக்கா…..” தனது கவலையின் ஆங்கிளை திருப்பினார் சுசிலா இப்போது.

“என்ன சித்தி நீங்க….அவளுக்கு பிடிக்கலைனாலும் அழுறீங்க பிடிச்சிருக்குன்னாலும் புலம்புறீங்க…..நம்ம நிலுவைப் பத்தி தெரியாதா….அதலாம் அவ தங்கம்…. படிப்பு முடிஞ்ச பிறகு இத்தனை மாசத்துல உங்க கூட தவிர  எங்கயாவது போயிருக்காளா வந்திருக்காளா? இல்லை ஃபோன்ல ரொம்ப நேரம் பேசிருப்பாளா…? அதெல்லாம் வரையறையாதான் பழகிருப்பாங்க… ரெண்டு பேரும் பார்த்தே மாசக் கணக்கா ஆச்சோ? வருஷ கணக்காச்சோ….? அதான் இன்னைக்கு ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததும்….அதுவும் தட்டு மாத்தியாச்சுன்னதும்…..” அக்கா நடந்ததை என்னதாய் காரணபடுத்துகிறாள்….கடவுளே கடவுளே!!!!

 “அதோட மாப்ள கிளம்புறார்னதும் இவ முகம் சரியில்லை……இனிமே நிச்சயதார்தத்துல தான பார்த்துக்க முடியும் அவங்க ரெண்டு பேருக்கும்….”

அக்கா நீ டிஃபென்ட் பண்றேன் பேர்வழின்னு என்னை படு டேமேஜ் ஆக்கிட்டியே….. ஆனா நான் வந்து இதெல்லாம் உண்மை இல்லை…எனக்கு மாப்ளய பிடிக்கலைனு இப்ப சொன்னா என் அம்மா திரும்பவும் நெஞ்ச பிடிச்சுடுவாங்களோ? நிலவினி இப்படியாய் முழிக்க

“நீ சொல்றதும் சரியாதான் இருக்குது…. மாப்ள வீட்டு ஆட்கள் போன பிறகு நிலு ரூமை விட்டு வெளியவே வரலை….” அம்மாவோ  யோசனையில் இப்படியாய் கணக்கு போட்டார்.

“சரி சரி…இப்ப அதையெல்லாம் கணக்கு பார்க்காம பதினஞ்சு நாளோ ஒரு மாசமோ கல்யாணத்தை சீக்கிரமா வைக்க பாருங்க சித்தி…… அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்… எனக்கு தெரிஞ்சி நிச்சயதார்த்தம் அது இதுன்னு இன்னும் இழுக்க வேண்டாம்னு சொல்லுவேன்….நேர கல்யாணமே வச்சிடலாம்….வேணும்னா கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட் எங்கேஜ்மென்ட் வச்சுகிடலாம்…” அக்கா மொத்தமாய் ஆட்டத்திற்கு  செக் மேட் வைத்தாள்.

கேட்டிருந்த நிலவினியோ ‘முதல்ல மாப்ள வீட்ல இருந்து கல்யாணத்தை நிறுத்த வைக்கனும்….. அடுத்து அம்மாட்ட வந்து இதெல்லாம் உண்மை இல்லைனு சொல்லி விளக்கனும்…அதுவரைக்கும் அம்மா நிம்மதிக்காக நான் வாயை மூடிட்டு இருக்கனும்…’ இப்படியாக முடிவுக்கு வர வேண்டியதாயிற்று.

கல்யாணத்தை நிறுத்துனா கூட பிரவாயில்லை, இவளுக்கு பிடிக்காத கல்யாணம் நடக்க கூடாதுன்னு அம்மா நினைக்காங்க…..சோ அந்த முடிவை தாங்கிப்பாங்க….  அப்பாவால இனி நிறுத்த முடியவே முடியாதுன்னு தானே அம்மாக்கு பயம்….. அதுக்கு மாப்ளை வீட்லயே நிறுத்திடாங்கன்னா கஷ்டமா இருந்தாலும் அப்பா ஏத்துப்பாங்கதான்… இப்படி ஒரு எண்ணத்தில் அவள் அடுத்த கட்டத்துக்கு போனாள்.

திபனுக்கு இருள் கவிழ கவிழவே மனதிற்குள் தவிப்பாய் தான் இருந்தது. எவ்ளவு நேரம் இருட்ல கார்ல தனியா உட்காந்திருப்பா அவ? அதோடு இவர்கள் எல்லோரும் இங்க பொண்னு வீட்ல சாப்டுவாங்க….அவள்?

சாப்பாடு பந்தி தொடங்கவும் மெல்ல எழுந்து அம்மாவைத்தான் தேடிச் சென்றான். மரகதமோ இவனைப் பார்க்கவும் முதல் கேள்வியே “அனுவ எங்கடா? கண்ணுலயே காணோம்…..” என தொடங்கியவர்

“ இங்க இருந்து எந்திருச்சி வர முடியலை…..மறக்காம அவள சாப்ட சொல்லனும்….அனுவ இங்க வரச் சொல்லேன்” என்றவாறு இவன் முகத்தைப் பார்த்தார். அவர் தன் மகன் மனதை படிக்க முயன்று கொண்டிருந்தார்.

“இல்லமா….அவ கார்ல இருக்கா…..நீங்க போய் கூப்டுட்டு வரமுடியுமா?” அவனது இந்த பதில் அம்மாவுக்கு திருப்தியாகவே இருந்தது. அவன் ஆஃபீஸ்ல எத்தனை பொண்ணுங்க வேலை பார்க்காங்க….அவங்கட்டல்லாம் பேச இப்டியா யோசிச்சுகிட்டு நிக்கான்?

அதே நேரம் “அம்மா அனுவ கூட வச்சுகோங்கம்மா….” என்ற குரல் அபயனோடது.

திரும்பிப் பார்த்தால் அனுவுடன் வந்து நின்றான் அவன்.

“கார்ல போய் தனியா உட்கார்ந்துட்டு இருக்கா…..நான்ந்தான் உருட்டி மிரட்டி கூப்டுட்டு வந்திருக்கேன்…. கூடவே வச்சுகோங்க….மறக்காம சாப்ட சொல்லுங்க…. ”

அனுவைப் பார்க்கவும் “வாம்மா….. “ என்று அவள் கை பற்றிய மரகதம் “ஏன் போன? என்னாச்சு? என எந்த கேள்வியும் அவளைக் கேட்காமல்

“வயசுப் பொண்ண இப்டித்தான் அவ இவன்னு பேசுவியா? ஒழுங்கா நீங்க போங்கன்னு பேசு “ என அபயனைப் பார்த்து சொன்னவர் அனுவுடன் சாப்பிட சென்றார். எல்லாம் நன்றாக செல்வது போல்தான் அப்போதைக்கு பட்டது அதிபனுக்கு.

அன்று விழா முடிந்து காரில் ஏறியதும் மரகதம் கொடுத்த செயினை அதிபன் கண்ணெதிரே கழற்றி கொடுத்தாள் அனு. அவள் அப்படித்தான் நடந்து கொள்வாள் என எதிர்பார்த்திருந்ததால் அதிபன் அதை கண்டு கொள்ளவில்லை,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.