(Reading time: 20 - 40 minutes)

வன் என்ன பதில் சொல்வான்?

என்ன நினைத்தாரோ “போய் அனுவ யாரையாச்சும் கூட்டிட்டு  வரச் சொல்லேன்….” இவன் முகத்தைப் பார்த்தார்.

இவனுக்கும் அவளை நேற்று விட்டு வந்த கோலத்திற்கு இப்போது இவனே போய் பார்க்க வேண்டும் போல இருக்கிறது…..

இவன் அவளிடம் கோபத்தை காட்டிவிட்டு வந்திருக்கிறான்…… அங்க அவள் வீட்டை சுத்தி புதராக வேறு கிடந்தது…. தண்ணிக்கு சம்ப் கட்டி, மோட்டர் வைக்க வழி பண்ணனும் என்ற பல காரணங்கள் இவன் வசம்.

“சரிமா “ என அம்மாவிடம் ஆமோதித்துவிட்டு தங்கள் வீட்டில் சமையல் வேலை பார்க்கும் குருவம்மாவை அனுவை அழைத்து வர அனுப்பி வைத்தான்.

சில நிமிடங்களில் இவனும் கிளம்பி அனு வீட்டிற்கு சென்றான். அனு இப்ப தனியா இருக்க மாட்டாளே…. வீட்டு வேலையை கவனிக்க மாதிரி போய் நிக்கனும்….. அந்த குருவம்மா கூப்ட்டு இந்த அனு வரவா? இவன் ஏதாவது அழுத்தி சொல்லி அவளை இங்க வர வைக்கனும். இப்படி நினைத்துக் கொண்டு தான் இவன் போனது.

இவன் போகும் போது அந்த குருவம்மாவுடன் அனு அந்த வீட்டு சமயலறையில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருப்பது வீட்டு வாசலில் நின்று பார்க்கும்  இவனுக்கு தெரிகிறது.

பகல் வெளிச்சத்தில் வீட்டினை இப்போது தான் கவனித்தவன் கண்ணில் உள்ளிருந்த பழைய மர பீரோ மேல் அறுந்து தொங்கும் வயர் படுகிறது.

‘தெரியா தனமா அனுவோ யாரோ தொட்டு வச்சுடக் கூடாது…’ என்ற ஒரே எண்ணத்தில் சென்று அதை எப்படி எங்கு கனெக்ட் செய்ய வேண்டும் என ஆராயும் விதமாக வயரையே பார்த்தபடி அருகிலிருந்த பீரோவில் கை ஊன்றினான்.

பழைய பீரோ அல்லவா….இவன் கை ஊன்றிய விதத்தில் கிர் கரக் என ஆட… இப்பொழுது அதன் மீது இவன் கவனம் போக…பாதி திறந்துவிட்ட கதவின் இடுக்கில் தெரிகிறது இவனது A என்ற மோதிரம்.

அவனையும் மீறி அனிச்சை செயலாய் அவன் கையை பார்க்கிறான் அங்கு அவன் மோதிரம் இல்லை. நேற்று நிலவினி வீட்டிற்குள் நுழைய படி ஏறுகையில் தடுமாறிய அனுவை இவன் கை நீட்டி பிடித்த அந்த காட்சி மனதில் வருகிறது.

இவன் பிடித்த வேகத்தில் அவளும் இவன் கையை பிடித்ததாக நினைத்தானோ அப்போது…

அம்மா பக்கத்திலே இருந்தாளே…. சீட்டை தொட்டு தொட்டு தேடியது…. இவள் ஒளித்து வைத்த நகையை யாருக்கும் தெரியாமல் எடுக்கத்தானா?

தெரிஞ்சு வாங்கின நகையை நல்லவ மாதிரி திருப்பி கொடுத்துட்டு…. உள்ளுக்குள்ள இப்படி ஒரு திட்டம் போட்டு திருட்டா?

இந்த திருடி என்னமா ஏமாத்திட்டா??????

தொடரும்!

Episode # 05

Episode # 07

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.