(Reading time: 21 - 41 minutes)

"ன்னாச்சு சுஜா... அம்மாவும் பொண்ணும் நியூயார்க் போலாம்ன்னு சொல்றீங்க... அங்க இருந்தவரைக்கும் எப்போ இந்தியா போப்போறோம்ன்னு கேட்டுக்கிட்டு இருந்தீங்க...

ரெண்டுப்பேரும் ஒரே மாதிரி ஆச்சே... ரெண்டுப்பேருக்கும் ஃப்ரண்ட பார்க்காம இருக்க முடியாதே... ரெண்டுதடவை நாம இங்க வருவதக்கு கிளம்பி என்னால தடைப்பட்டு போச்சு... ஒருதடவை உடம்பு சரியில்லை... ஒருதடவை வேலை வந்துடுச்சு... நீங்க போங்கன்னா உங்களை தனியா விட்டுட்டு போகமுடியாதுன்னு சொல்லீட்டீங்க...

உங்களுக்காக தான் ரெண்டுமாசம் லீவ் போட்டுட்டு வந்தது... இப்போ எனக்கே இங்கேயே இருந்துடலாமான்னு தோனுது... நீங்க கிளம்பலாம்னு சொல்றீங்க..."

"என்னங்க ரொம்ப வருஷமாச்சு ஃப்ரண்ட பார்த்து அதான் பார்க்கனும்னு தோனுச்சு... அதுக்காக ஃப்ரண்ட் கூடவே இருக்க முடியுமா...?? எனக்குன்னு குடும்பம் இருக்கு... வேலை இருக்கு... அத பார்க்க வேணாமா..??

யுக்தாவுக்கும் அப்படித்தான்... கவிய நேர்ல பார்க்கனும்னு இருந்துச்சு... இப்போ பார்த்ததும் 12 வருஷம் அங்கேயே இருந்தவ இல்லையா... இங்க இருக்க ஒருமாதிரி இருக்கு போல... அதான் போகனும்னு சொல்றா..."

"உன்னையும் என்னையும் சொல்லு ஒத்துக்குவேன்... ஆனா நம்ம யுக்தாக்கு இங்க இருக்கனும்னு தான் ஆசை... இங்க வந்ததுக்கு அப்புறம் அவ திரும்பி நியூயார்க் வரமாட்டான்னு தான் நினைச்சேன்...

அதான் லஷ்மி தேவாவுக்கு யுக்தாவை கேட்டப்போ... சீக்கிரம் ரெண்டுபொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணி இங்கேயே செட்டில் பண்ணிட்டோம்னா... ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்பாங்கன்னு நினைச்சேன்..."

"அதயே தாங்க நானும் சொல்றேன்... நாம இங்க ரெண்டுமாசம் ஏன் இருக்கனும்னு நினைச்சோம்... யுக்தா இல்லைன்னா கவிய தேவாக்கு பேசலாம்னு இருந்தோம்...

யுக்தா தேவாவை வேண்டாம்னு சொல்லிட்டா... கவிக்கு தேவாவை பேசலாம்னா இந்த லஷ்மி அமைதியா இருப்பாளா... அதுக்கும் ஏதாவது பேசுவா..."

"இதுக்குமேல அவ வீட்டுக்கு நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கனுமா... அதெல்லாம் சரிபட்டு வராது சுஜா..."

"அதுக்குதாங்க நாம இப்போ போவோம்... ஆறுமாசம் கழிச்சு திரும்பி வருவோம்... இந்த சொந்தம், தெரிஞ்சவங்க, ஃப்ரண்ட்ஸ் இப்படியெல்லாம் இல்லாம அசல்ல நம்ம பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்போம்...

எத்தனையோ மேட்ரிமோனியல் வெப்சைட் வந்துடுச்சு... அதுல ரிஜிஸ்டர் பண்ணோம்னா... நம்ம அங்க இருந்தே நல்ல வரனா தேடலாம்... அப்புறம் இங்க செந்தில் அண்ணாக்கிட்ட விசாரிக்கச் சொல்லி முடிவு பண்ணலாம்..."

"நம்ம பொண்ணுங்களுக்கு என்ன குறை சுஜா... நல்ல மாப்பிள்ளைங்க தேடி வருவாங்க... கல்யாணம் இப்போ பெரிய விஷயமில்லை... இன்னும் ஒரு வருஷம் கழிச்சுக் கூட பண்ணிக்கலாம்..  நாம அதுக்குதான் வந்தோம் அதை முடிச்சிட்டு தான் போகனும்னு இல்ல...

அண்ணியையும் கவியையும் பத்தி யோசிச்சியா... அண்ணன் போன கையோட நாமும் இங்க இருந்து போய்ட்டோம்... பன்னிரண்டு வருஷம் தனியாவே இருக்காங்க... லஷ்மி கதை தான் உனக்கே தெரியும்... ஏதோ தேவா தான் கொஞ்சம் உதவியா இருக்கான்... இனி லஷ்மி அதுக்கும் தடை போடுவாளோ என்னவோ...??

இந்த ரெண்டுமாசமாவது நாம அவங்கக் கூட இருந்தா சந்தோஷப்படுவாங்க இல்ல... என் நிலைமையில எங்க அண்ணன் இருந்திருந்தா... வெளிநாட்டு வேலை வேண்டாம்னு இங்கேயே இருந்திருப்பாரு... எனக்கு அது சின்ன வயசு ஆசை அதை விட முடியல... இந்த ரெண்டுமாசமாவது இங்க இருப்போமே..."

"சரிங்க... எனக்கு மட்டும் அவங்க மேல அக்கறையில்லையா...?? நாம ஏற்கனவே முடிவு பண்ணா மாதிரியே இருந்துட்டு போவோம்... நீங்க கவலைப்படாதீங்க நம்ம தேவா லஷ்மி சொன்ன பேச்சை கேட்டுகிட்டு இவங்களை கவனிக்காம எல்லாம் இருந்துடமாட்டான்..." என்று ஆறுதல் கூறினாள்... கணவனின் முடிவுக்கு ஒத்துக் கொண்டாலும் தன் மகளின் நிலையை குறித்து அவளுக்கு வருத்தமாக தான் இருந்தது...

சரி சாவித்திரி அக்காவும் கவியும் வரட்டும்... அவர் சொன்னது போல எங்கேயாவாது டூர் மாதிரி போய்ட்டு வந்தால் தன் மகள் சரியாகிவிடுவாள் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள் சுஜாதா.

ன்று முழுவதும் தொடர்ந்து சம்யுவின் செல்லுக்கு தொடர்பு கொண்டு லைன் கிடைக்காததால் மறுநாள் தொடர்புகொண்டாள் கவி...

சில நேரங்களில் இவர்கள் அறையில் சிக்னல் கிடைக்காது... மற்றவர்கள் செல்லில் கூட பேசலாம்... ஆனால் பிருத்வி விஷயமாக பேச இருப்பதால் அவள் அப்படி பேச நினைக்கவில்லை... சித்தப்பா சித்திக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர்கள் மறுப்பு சொல்லப் போவதில்லை... இருந்தாலும் அதற்கு காலம் நேரம் வரட்டும் என்று சம்யுவுக்கே தொடர்பு கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.