(Reading time: 21 - 41 minutes)

சில நிமிடங்கள் கழித்து சம்யுவின் செல் எடுக்கப்பட்டது.. "ஹலோ கவி"

"நேத்துலேருந்து உன்னோட செல்லுக்கு ட்ரை பண்றேன்... உன்னோட செல்லை எங்க வச்ச... ஏன் சம்யு பிருத்வி உன்னோட காதலை ஏத்துக்கிட்டத தேவா சொல்லி தான் எனக்கு தெரியனுமா...?? ஏன் என் மேல இன்னும் உனக்கு கோபம் போலயா..??

"என்ன உளர்ற... உன் மேலே எப்பவும் எனக்கு கோபம் வராது... அப்புறம் நான் தேவாக்கிட்ட சொன்னது பொய்... அந்த பொய்யை உன்கிட்ட ஃபர்ஸ்ட் சொல்லலைன்னு தான் இப்படி குதிக்கிறியா...??"

"என்ன சொல்ற சம்யு... பொய்யா..?? பிருத்வி பக்கத்துல இருக்கும்போது நீ அப்படி சொன்னதா தேவா சொன்னாங்களே..." அதிர்ச்சியாக கேட்டாள்..

"ஆமா நான் அப்படிதான் சொன்னேன்... ஆனா அது தேவா ஒருவேளை என்ன விரும்பியிருந்தா... அதான் என் மனசுல என்ன இருக்குன்னு தேவா தெரிஞ்சிக்கனும்னு அப்படி சொன்னேன்..."

"பிருத்வி சிரிச்சுக்கிட்டே கைகுலுக்கினதா தேவா சொன்னது..?? என்ன சம்யு எனக்கு ஒன்னும் புரியல..."

"அது நான் எதுக்காக அப்படி சொன்னேன்னு பிருத்விக்கு தெரிஞ்சிடுச்சு... அதான் அப்படி நடந்துக்கிட்டாரு.."

"என்ன சம்யு உன் விருப்பம் நிறைவேறிடுச்சுன்னு நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்...  ஒருவேளை உன் காதல் ஜெயிக்கலைன்னா உன்னோட மனசு ஒடஞ்சிடக்கூடாதுன்னு தான் நம்ம குலதெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டதே...

ஆனா அந்த அம்மன் உன்னோட காதலையே ஜெயிக்க வச்சிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன் தெரியுமா.. ஆனா அது உண்மையில்லையா.."

"அது உண்மையில்லை தான்... ஆனா அந்த அம்மன் உன்னோட வேண்டுதலை நிறைவேத்திட்டாங்க பார்த்தியா..."

"என்ன சொல்ற சம்யு..."

"பிருத்வி வேற ஒரு பொண்ணை காதலிக்கிறாரு... அவ பேரு சப்னா.. ஊரிலிருந்து வந்த ரெண்டு நாளிலேயே எனக்கு அது தெரிஞ்சிடுச்சு... இருந்தும் இப்போ உன்கிட்ட நல்லாதானே  பேசறேன்... நான் அதை ஏத்துக்கிட்டேனே... பிருத்வி எனக்கு இல்லைன்னு நான் புரிஞ்சிக்கிட்டேனே... அப்போ அந்த அம்மன் எனக்கு அத ஏத்துக்கிற தைரியத்தையும் பக்குவத்தையும் கொடுத்துட்டாங்க தானே..."

"சம்யு... அதான் நீ பேசும் போது குரல் ஒருமாதிரி இருந்துச்சா... நான் உடனே கிளம்பி ஊருக்கு வரேன்...(என்னதான் சம்யுக்கிட்ட வருவதா சொன்னாலும்.. இவ எந்த நேரத்துல அவ காதல் நிறைவேறுமான்னு சந்தேகப்பட்டு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டாளோ அதே மாதிரியே நடக்குதே... என்னதான் சம்யு நான் கவலைப்படக் கூடாதுன்னு சாதாரணமா பேசினாளும் அவ உள்ளுக்குள்ள கஷ்டப்படுவா... இதுல வேண்டுதலை நிறைவேத்தாம போனா..இன்னும் ஏதாவது அவளுக்கு கஷ்டம் வந்துடுமோன்னு பயமாகவும் இருக்கிறது அவளுக்கு)

"இங்கப்பாரு நீ இந்த வேண்டுதலை நிறைவேத்தாம வந்துட்டா... உனக்கு சங்கடமா இருக்கும்... நீ அதை முடிச்சிட்டே வா.. நான் நல்லா தான் இருக்கேன்... "

"சம்யு... நீ வருத்தப்படாத இன்னிக்கு அம்மா கிளம்பி வருவாங்க... புதன் கிழமை பௌர்ணமி அன்னைக்கு பூஜை முடிந்ததும்... வியாழன் நைட் ட்ரெயின் ஏறிடுவேன்... அப்புறம் உன்கூடவே தான் இருப்பேன்...

இங்கப்பாரு இனி நீ பிருத்வி வீட்டுக்கு போகாத... நீ அவனை அவாய்ட் பண்ணு... இல்லை உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்... என்ன சொல்றது புரியுதுல்ல...??"

"கவி... எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை... நானும் அப்படித்தான் முடிவெடுத்துருக்கேன்... நீ முழுசா வேண்டுதலை முடிச்சுட்டு வா..." என்று அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டாள்.

யுக்தாவுக்கே இப்போது கவியை கட்டிக்கொண்டு அழுதாள் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று தான் தோன்றுகிறது... ஆனால் அங்கு இருப்பவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று தான் கொஞ்சம் தைரியமாக பேசினாள்..

அதுமட்டுமல்ல பிருத்வியிடம் தன் காதலை சொன்னதையோ... திரும்ப நியூயார்க் போகப் போவதையும் கூட அவள் கவியிடம் சொல்லவில்லை...இங்கையே தன்னோடு இவ இருக்கப் போறதா கவி நினைத்துக் கொண்டு இருப்பாளே... அவக்கிட்ட எப்படி இதை சொல்வது என்று குழப்பமாகவும் இருந்தது...

எல்லாம் கவி வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று மனதிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்தாள்... கஷ்டப்பட்டும் கொண்டிருந்தாள்... இப்படி யாரிடமும் வெளிப்படையாக அவள் பேசாமல் குழம்பிக் கொண்டிருந்தது தான் எல்லாவகையிலும் அவளுக்கு பிரச்சினை ஆகிப் போனதோ...??

"ன்ன சங்கு பிருத்வி யுக்தாவை லவ் பண்ணலையா...??" அதிர்ச்சியாக கேட்டான் தேவா... சம்யுவுக்கு ஃபோன் செய்ததுக்கு பிறகு தேவாவுக்கு ஃபோன் செய்து சம்யுவைப் பற்றி கூறினாள் சங்கவி..

"ஆமா தேவா... உனக்காக தான் அவ அப்படி சொல்லியிருக்கா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.