(Reading time: 21 - 41 minutes)

"ன்ன சங்கு நான் தான் அப்படி நினைக்கலன்னு சொன்னேனே... யுக்தா பிருத்வியை லவ் பண்றதா சொன்னப்போ... எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு... இப்போ அது நிஜமில்லைன்னது கூட பரவாயில்லை... ஆனா பிருத்வி வேற யாரையோ லவ் பண்றதுதான் கஷ்டமா இருக்கு...

யுக்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பா... நீ உடனே ஊருக்கு போக வேண்டியதுதானே..."

"இல்லை தேவா என்னமோ வேண்டுதலை நிறைவேத்தாம போக கஷ்டாமாயிருக்கு... தேவா நான் வரவரைக்கும் வேலை முடிஞ்சதும் யுக்தாவை பார்த்து கொஞ்ச நேரம் பேசிட்டுவாயேன்... அவ தனியா இருந்தா ஏதாவது யோசிச்சிட்டு இருப்பா..."

"என்ன சங்கு நீ சொல்லிதான் நான் செய்யனுமா... ஆனா நான் இப்போ டெல்லிக்கு ஆஃபிஸ் விஷயமா போக வேண்டியிருக்கு... நானே அத்தை மாமாவை பார்க்க வேண்டியிருந்தது அதுக்கே போக முடியல லீவ் எடுத்ததால நிறைய வொர்க்.."

"சரி தேவா... இன்னும் 4 நாள் தானே..

அவ ரொம்ப வருத்தப்படாத மாதிரி தான் தோனுது... நானே அங்க வந்துடுவேன்.."

"நானும் அதுக்குள்ள டெல்லியில் இருந்து வந்துடுவேன்.. அப்புறம் யுக்தாவோட ரெண்டுப்பேரும் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்.."

"ம்... சரி தேவா" என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

ஒரு மாலை வேளையில் சுஜாதாவின் வீட்டுக்கு வந்தாள் வளர்மதி... அப்போது வீட்டில் இருந்த மாதவன் தான் அவளை வரவேற்றார்..

"அடடே வாங்க மதி..."

"எப்படி இருக்கீங்க மாதவன்"

"நான் நல்லா இருக்கேன்... செந்தில் எப்படி இருக்காரு..."

"அவரும் நல்லா இருக்காரு.."மதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சமையலைறையில் இருந்து வெளியே வந்தாள் சுஜாதா...

"வா மதி.."

"என்ன சுஜாதா அன்னிக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீ வரவே இல்லையே..." எங்கே சுஜாதா கோபமா இருக்காளோன்னு ஒரு கவலை மதிக்கு..

"இல்லை மதி.. அக்காவும் வீட்ல இல்லையா... அதான் நிறைய வேலை இருந்தது..."

"ஆமாம் யுக்தா எங்க..?? அவளும் ஊர்ல இருந்து வந்ததிலிருந்து வீட்டுக்கு வரவே இல்லையே...??"

"அண்ணி நேத்து தான் ஊரிலிருந்து வந்தாங்க... அவங்கக் கூட கோவிலுக்கு போயிருக்கா... உங்களுக்கு சுஜா சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன் என் தங்கை பேசியத பத்தி... அதான் யுக்தா ஒருமாதிரி இருக்கா... வீட்டுக்குள்ளேயே இருக்கா..."

"எனக்கு கேட்டப்போ கஷ்டமாகத்தான் இருந்துச்சு... சரி விடுங்க லஷ்மி ஏதோ கோபத்துல பேசிட்டா...

யுக்தா இன்னும் அதையே நினைச்சுக்கிட்டா இருக்கா... அங்க வந்து பிரணதி கூட பேசிட்டு இருந்தா கொஞ்சம் சரியாவா இல்ல... பிரணதி கூட யுக்தாக்கு ஃபோன் பண்ணியிருக்கா... யுக்தாக்கு லைன் கிடைக்கலியாம்.... நீங்க நாளைக்கு அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுங்க..."

"இல்லை மதி.. வெள்ளிக்கிழமை கவி வந்துடுவா... அப்புறம் அவ சரியாயிடுவா..."

"சரி சுஜா... அப்புறம் நான் வந்தது நம்ம பிருத்விக்கு வர வியாழக்கிழமை பர்த்டே... சின்னதா ஒரு பார்ட்டி வச்சிருக்கோம்... நீங்க எல்லோரும் வரனும்..."

"என்ன மதி... இன்னும் உன்னோட பிள்ளைங்களுக்கு பர்த்டே பார்ட்டி கொண்டாடிக்கிட்டு இருக்கியா...??"

"என்ன சுஜா... நீயே இப்படி பேசுற... பிறந்த தேதி, அப்பா, அம்மா இதெல்லாம் தெரியாமத்தானே வளர்ந்தோம்... அந்த ஆசரமத்துல இருந்து வெளியே வந்தப்போ நமக்கும் இப்படி குடும்பம், கணவன், குழந்தைங்க இதெல்லாம் அமையும்ன்னு நினைச்சிருப்போமா...??

நாம தான் அப்படியிருந்தோம்... நம்ம பிள்ளைங்க பர்த்டேவை கொண்டாடுவோமே..."

"என்ன மதி... உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா... நான் விளையாட்டுக்கு சொன்னேன்.."

"சரி சுஜா நா கிளம்பறேன்... நீங்க எல்லோரும் கண்டிப்பா வரனும்..."

"எனக்கு அன்னைக்கு ஒருவேளை இருக்கு மதி... என்னால வரமுடியாது... சுஜாதாவும் யுக்தாவும் கண்டிப்பா வருவாங்க..."

"சரி மாதவன்... சுஜா நீ யுக்தாவை கூட்டிக்கிட்டு வந்துவிடு... ஆ அப்புறம் சாவித்திரி அக்காவையும் கூட்டிட்டு வா.." சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைப்பெற்றாள்.

புதன் இரவு மணி 11.30... அவள் அறையில் விழித்துக் கொண்டிருந்தாள் யுக்தா... இன்னும் அரை மணிநேரத்தில் மறுநாள் தொடங்கிவிடும்... பிருத்வியின் பிறந்தநாள்... சிறுவயதில் அவன் பிறந்தநாளை கொண்டாடியது அவளுக்கு ஞாபகம் வந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.