(Reading time: 21 - 41 minutes)

வளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கவிக்கும் இவளுக்கும் பிறந்தநாள் என்றால்... இருவருக்குமே புது உடை, காலையில் சாவிம்மா செய்யும் கேசரி இல்லை சர்க்கரை பொங்கல் இதோடுதான் ஆரம்பிக்கும்... முன்நாளே அம்மா வளர்ந்த ஆசிரமத்துக்கு சென்று இனிப்பு மற்றும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடை செய்துவிட்டு இரவே கிளம்பி விடுவார்கள்...

அம்மாவும் அப்பாவும் வந்ததும் எல்லோரும் கோவிலுக்கு செல்வார்கள்... மதியம் வடை பாயசத்தோடு அந்த ஊரில் தெரிந்தவர்களுக்கு கேசவன் அப்பாவின் ஏற்பாடால் சாப்பாடு... இப்படித்தான் இவர்கள் பிறந்தநாள் கொண்டாடப்படும்... இவர்களது எட்டு வயதிருக்கும் போது இவர்களுக்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாக ஒரு அக்கா திருமணம் ஆகி வந்தார்கள்...

இவர்கள் இருவரையும் கூப்பிட்டு அவர்கள் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள்... அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த மாமாவிற்கு பிறந்தநாள் என்று கேக் வாங்கிவந்தார்கள்... கேக் வெட்டும்போது நாங்களும் வரட்டுமா என்று இவர்கள் கேட்டதற்கு... இரவு12 மணிக்கு தான் கேக் வெட்டுவோம்... அப்போது இருவரும் தூங்கிவிடுவீர்கள்... அதனால் காலையில் வாருங்கள் கேக் தருகிறேன் என்று கூறினார்கள்..

ஏன் இரவு தூங்கும்போது கேக் வெட்டனும் என்று இருவரும் கேட்டார்கள்... அதற்கு அந்த அக்கா.. இரவு 12 மணிக்கு தான் அடுத்த நாள் பிறக்கும்... முதல் வாழ்த்து உங்க மாமாவுக்கு நான் தான் சொல்லனும்.. அப்போது தான் கேக் வெட்டப் போகிறேன் என்றார்...

இவர்களும் 12 மணி வரை முழித்திருந்து பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டனர்... அன்றிலிருந்து இவர்கள் பிறந்தநாளையும் இப்படி தான் கொண்டாடுவார்கள்... கேசவன் அப்பாவிடம் சொல்லி மதுரையில் கேக் வாங்கி வரச்சொல்லி.... 12 மணிக்கு கேக் வெட்டுவர்... அதேபோல் நியு இயர், கிறிஸ்துமஸ்க்கூட கேக் வெட்டுவர்...

அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் பிரிந்திருந்த போது கூட அவர்கள் அதை செய்ய மறந்ததில்லை... கேக் வெட்டலைன்னா கூட 12 மணிக்கு அவரவர் பிறந்தநாளுக்கு மற்றவருடைய வாழ்த்து தான் முதலாக இருக்கும்...

இப்படித்தான் 2 வருடம் பிருத்வி வீட்டில் இருந்த போது பிருத்வியின் பிறந்தநாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்ட வேண்டும் என்று அடம்பிடித்தாள் சுஜாதாவிடம் இவள்...

சாயந்திரம் கேக் வெட்டுவாங்க... இப்போ எதுக்கு வேண்டாம் என்று சுஜாதா மறுத்தாள்... பின் மதியும் செந்திலும் தான் இவளுக்காக சிறியதாக கேக் வாங்கி வந்தார்கள்...

பிருத்விக்கு தெரியாமல் 12 மணிக்கு குடும்பத்தோடு அவனை எழுப்பி அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாள்... அவனுக்கு உண்மையிலேயே இது சர்ப்ரைஸ் தான்...

இரவு ஒரு கொண்டாட்டத்தோடு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது... மறுநாள் யுக்தாவை தேடி வந்த பிருத்வி...

"யுகி... நான் இந்த சர்ப்ரைஸ்ஸ எதிர்பார்க்கல... இது உன்னோட ஐடியான்னு அம்மா சொன்னாங்க....

அம்மாக்கும் அப்பாக்கும் பர்த்டே டேட் தெரியாததால எங்க பர்த்டேவ பார்ட்டி வச்சு செலப்ரேட் பண்ணுவாங்க...

ஆனா இப்படி நான் பர்த்டே கொண்டாடுனதில்லை.... எனக்கு இந்த பர்த்டேவ மறக்க முடியாது... நீ நியூயார்க் போனாக்கூட நான் என்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..." என்றான்... பிறகு மாலையில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டமும் கலை கட்டியது...

இப்போது இது பிருத்விக்கு நினைவிருக்குமான்னு இவளுக்கு தெரியல... இதை விட ஸ்பெஷலான பிறந்தநாளெல்லாம் அவனுக்கு இருந்திருக்கலாம்... ஆனா அவனது ஒவ்வொரு பிறந்தநாளையும் அவன் கொடுத்த பொம்மையை வைத்து அவள் கொண்டாடியிருக்கிறாள்... அந்த நேரம் அவனோடு பேசலாமா?? என்று நினைத்து பின் விட்டுவிடுவாள்...

இப்போது இந்தியா வந்த போது கூட இந்த பிறந்தநாளுக்கு பிருத்வியோடு இருக்கப்போகிறோம் என்று மகிழ்ந்தாள்... அவனோடு பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொள்வாளா..?? என்று தெரியவில்லை... ஆனால் அவனை நேராகப் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லவாவது முடியுமே.. என்று சந்தோஷப்பட்டாள்...

ஆனால் இங்கு வந்து நன்றாக பழகிய பின்னும் இவன் பிறந்தநாளில் கலந்துக் கொள்ள முடியவில்லையே... என்று வருத்தமாக இருக்கிறது... இப்போதோ இன்னும் சிறுது நாள் கழித்துக் கூட சப்னாவை பற்றி தெரிந்திருக்கலாமே.. என்று கூட தோன்றுகிறது.

ஆனால் அவனுக்கு அருகில் இருக்கிறோம்... அவனது செல் நம்பர் தெரியும்... பிறகு ஏன் எப்போதும் போல பொம்மைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்... 12 மணியாக சில நிமிடங்கள் தான் இருக்கிறது ஃபோனிலேயே வாழ்த்து சொல்லலாமா..?? அவனை தவிர்க்க வேண்டும் தான்... அவனை பார்க்கவோ.. பேசவோ செய்யாமல் இருப்பது நல்லதுதான்... ஃபோனில் வாழ்த்து சொல்வதில் என்ன தவறு... மனது இப்படியெல்லாம் நினைக்கிறது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.