(Reading time: 21 - 41 minutes)

ன் யுக்தா... சப்னா பிருத்வியோட காதலி, வருங்கால மனைவி... இந்த நேரம் அவளுக்குரியதில்லையா..?? இந்த நேரத்தில் நீ பிருத்வியை தொந்தரவு செய்யப் போகிறாயா..?? என்று மனது கேள்வியும் கேட்டது..??

சரி ஃபோன் செய்து பார்ப்போம் லைன் கிடைக்கவில்லையென்றால்... கட் செய்துவிடலாம் என்று அவனுக்கு தொடர்பு கொண்டாள்... 12 மணியாக சில நொடிகளே... அவனுக்கு லைன் கிடைத்தது... இந்த நேரத்தில் அவனை தொந்தரவு செய்வதாக நினைப்பானோ...?? கட் பண்ணிடலாமா...?? அவள் நினைத்த நேரம் முதல் ரிங்கிலேயே அவளது அழைப்பு ஏற்கப்பட்டது..

"ஹலோ யுக்தா..."

அவளுள் மௌனம்... சரியாக மணி பன்னிரண்டு... "பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிருத்வி.." அவள் நினைத்ததுபோல் வாழ்த்திவிட்டாள்.

"தேங்ஸ் யுக்தா.."

"நீங்க ஃபோனை எடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல.."

"ஆனா நீ ஃபோன் பண்ணுவன்னு நான் எதிர்பார்த்தேன்..."

"......."

"யுக்தா... நான் ஒன்னு கேக்கலாமா...?? உன்னோட நிலைமை புரியுது.."

"பிருத்வி அதைப் பத்தி பேச வேண்டாமே.. நான் உங்கக்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது தான்... உங்க மனசை கஷ்டப்படுத்திட்டேன்னு தெரியுது... இனி அதைப் பத்தி பேசாம இருப்பது தான் நல்லது...

நான் உங்களுக்கு பர்த்டே விஷ் செய்ய தான் ஃபோன் பண்ணேன்... நான் ஃபோனை வைக்கிறேன்..."

"யுக்தா ஒரு நிமிஷம்... நானும் அதைப் பத்தி பேசலை... இதுல நீயே தெளிவா இருக்கும் போது நான் எதுவும் பேசறதுகில்ல..."

"......."

"யுக்தா... உனக்கு சின்ன வயசுல நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் போது... என்னோட பிறந்தநாளும் உனக்கு ஞாபகம் இருக்கும்னு எனக்கு தெரியும்... அது ஞாபகம் இருக்கும் போது...

நான் எல்லாத்தையும் மறந்துட்டதா நீ நினைச்சிக்கிட்டு இருந்தா... உன்னோடு கொண்டாடிய அந்த பிறந்தநாளை என்னால மறக்க முடியாதுன்னு சொன்னேனே... அப்புறம் நான் எப்படி அதை மறந்திடுவேன்... நீ ஃபோன் பண்ணுவேன்னு நான் வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன்..."

"பிருத்வி.."

"அந்த பிறந்தநாளை நீ ஞாபகம் வச்சிருக்கன்னா... ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் உன்னை மிஸ் பண்ணுவேன்னு நான் சொன்னதையும் நீ மறந்திருக்க மாட்ட...

நீ நியூயார்க் போகப் போறேன்னு சொல்ற... நாம திரும்பவும் சந்திப்போமான்னு தெரியல..."

"......."

"இந்த நாள் நீ இங்க இருக்க... நீ விஷ் பண்ணதுல சந்தோஷம்... நீ பார்ட்டிக்கும் வந்தீன்னா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்...

இது கட்டாயம் இல்ல... உன்னை நான் சங்கடப்படுத்த விரும்பல... ஆனா நீ வந்தா நான் சந்தோஷப்படுவேன்... உன்னை எதிர்பார்த்துக்கிட்டு இருப்பேன்..." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.

அவன் சொன்ன விஷயத்தை கேட்டு அவளுக்கு சந்தோஷம்.... அவன் ஞாபகம் வச்சிருக்கானா... இல்லையான்னு குழம்பிக் கொண்டு இருந்தப்ப... இவ்வளவு தெளிவா எல்லாம் ஞாபகம் இருக்கிறது என்று அவனே கூறிவிட்டான்...

அவன் இவளை ஒரு நல்ல தோழியாக ஞாபகம் வைத்திருப்பதே இவளுக்கு சந்தோஷமாக இருந்தது... அவன் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்ல முடிவெடுத்துவிட்டாள்... அந்த நிமிடம் அவள் எல்லாவற்றையும் மறந்து போனாள்... சப்னாவை, பிருத்வியை விட்டு ஒதுங்கி இருக்கச் சொல்லி கவி கூறியதை.... அவனை விட்டு விலக வேண்டும் என்று இவள் எடுத்த முடிவை... எல்லாமே அவள் மறந்து போனாள்...

என்ன மறந்தேன்...

எதற்கு மறந்தேன்..

என்னைக் கேட்டேனே...!!

உன்னை நினைத்து...

என்னை மறந்தேன்...

எல்லாம் மறந்தேனே...!!

உண்மையில் அவள் மறந்து போனாள் என்பதை விட அவற்றை ஒதுக்கி வைத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்...

தனக்குள்ளே இருந்த காதலை மறைத்து ஒரு தோழியாக அவளால் அவனோடு பழக முடியாது... ஆனால் இங்கு வந்ததிலிருந்து அவனோடு பழகிய நாட்களை அவள் மனதில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கிறாள்... அவன் சொல்வது போல் இவள் நியூயார்க் போய்விட்டால் அவனை பார்க்கும் சந்தர்ப்பம் திரும்ப அவளுக்கு கிடைக்குமோ என்னவோ...??

இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டால் அவனோடு இருந்த இந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டே அவள் வாழ்ந்துவிடுவாள்... அப்படி நினைத்துதான் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல முடிவெடுத்தாள்.

ஆனால் விதி இவள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்துவிட்டது என்று இவளுக்கு தெரியுமா என்ன..?? பிருத்வியையும் இவளையும் இணைக்கும் வழியை விதி விபரீதமாக முடிவு செய்து வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவள் அங்கு செல்ல நினைத்திருப்பாளா...?? விதியை வெல்ல யாரால் முடியும்..??

முடியும் விதியை மதியால் கூட சில நேரத்தில் வெல்ல முடியும்... ஆனால் அவன் பேசியதை கேட்டு இவள் மதியும் தான் இப்போது மயங்கி கிடக்கிறதே... பிறகு எப்படி முடியுமாம்...?? இவள் வாழ்க்கையில் விதி விளையாடப் போவதை இவள் பார்த்து இல்லையில்லை அனுபவித்து தானே ஆக வேண்டும்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.