(Reading time: 22 - 43 minutes)

"து நானே செஞ்சது பிருத்வி... நீங்க கேக் கட் பண்ணியிருப்பீங்கன்னு தெரியும்... நான் அப்போ இல்லல்ல... அதான் இதை செஞ்சு எடுத்துக்கிட்டு வந்தேன்..."

"உண்மையை சொல்லனும்னா... உனக்கு கொடுக்க கேக் இல்ல யுக்தா... எங்க கம்பெனி ஸ்டாப்ஸ் குழந்தைகளோட வந்தாங்க... அவங்களுக்கு கொடுத்து அனுப்பிட்டேன்... நீ இதுக்கு மேலே வரமாட்டேன்னு நினைச்சிட்டேன்... சரி இப்போ இதை கட் பண்ணிடலாம் விடு..."

அவளே அதை டேபிள் மேல் வைத்து... கூடவே எடுத்துக் கொண்டு வந்த ஒரு மெழுகுவர்த்தியை சொருகி அதை ஏற்றினாள்... அவன் அதை ஊதி அணைத்தான்... பிறகு அதை வெட்டி ஒரு துண்டை எடுத்து அவள் வாயில் ஊட்டினான்... முதலில் வாங்கலமா என்று தயக்கம் காட்டியவள் பிறகு வாங்கிக் கொண்டாள்..

ஒரு துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டி வாழ்த்துக்கள் சொன்னாள்... மீதி கேக்கை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றவன் ஒரு ட்ரேயில் இரண்டு தட்டுக்கள் வைத்து... அதில் அந்த கேக்கை இரண்டாக பிரித்து இரண்டு தட்டிலும் வைத்து... கூடவே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த டிஃபன் மற்றும் இரண்டு கிளாசில் கூல் ட்ரிங்க்ஸ் வைத்து எடுத்து வந்தான்..

"என்ன பிருத்வி இதெல்லாம் எதுக்கு நான் வீட்டுக்கு போய் சாப்டுக்கிறேன்... "

"ஹே.. வந்து எதுவும் சாப்டாம போறதா.. இங்கப் பாரு நானும் இன்னும் சாப்பிடல... நல்லவேளை நீ செஞ்ச கேக்கை சாப்பிடதான் சாப்பிடாம இருந்தேனோ... என்னவோ...??"

"நீங்க இன்னும் சாப்பிடலையா...?? சரி வாங்க சாப்பிடலாம்.." இருவரும் சாப்பிட்டார்கள்.

ஏனோ நண்பர்கள் சாப்பிட சொன்ன போது கூட அவன் வேண்டாமென்று சொல்லிவிட்டான்... இப்போது அவளோடு சாப்பிட்டான்... மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோஷம் அவனுக்கு... அவளுக்கும் தான்.. இந்த நாளையும் அவள் மனதில் பொக்கிஷமாக சேர்த்து வைத்தாள்...

அவன் மனதில் தோன்றிய சந்தோஷத்திற்கான காரணத்தை அவன் உணர்வதற்கு முன்பே அது காணாமல் போகப் போகிறது... அந்த சந்தோஷத்தின் நீட்டிப்பு இன்னும் சில மணி நேரங்கள் தான்...

சாப்பிட்டு முடித்ததும் அவனுக்கு வாங்கி வந்த பரிசுப் பொருளை அவனிடம் கொடுத்தாள்... "ஹே கேக் மாதிரி இது என்ன சாக்லேட்டா.." என்று கூறிக் கொண்டே அதைப் பிரித்தான். அதில் இருந்த அந்த ப்ரேஸ்லெட்டை பார்த்தான்...

எங்கே அதை தவறாக புரிந்து கொள்ளப் போகிறானோ என்று யுக்தாவே அதற்கு விளக்கம் கொடுத்தாள்...

"பிருத்வி இந்த SP க்கு அர்த்தம் சப்னா பிருத்விராஜ்...

நீங்க சொன்ன மாதிரி நாம திரும்பவும் பார்ப்போமான்னு தெரியல... உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியுமான்னு தெரியல... அதான் இது உங்க பர்த்டேக்கு மட்டுமில்ல உங்க கல்யாணத்துக்குமான கிஃப்ட்... "

அவள் சொன்ன மற்றதையெல்லாம் காதில் வாங்காமல்... திரும்பவும் பார்ப்போமா என்று சொன்னதை மட்டுமே நினைத்து வருந்தினான்... "யுக்தா இது கோல்ட் போலயே.."

"இது என்னோட பணத்துல வாங்கினது பிருத்வி... நான் சொல்லியிருக்கேன் இல்ல.. பார்ட் டைம்மா வொர்க் பண்ணேன்னு... அதுல வாங்கினது.. அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க.."

 "யுக்தா அன்னிக்கு போலவே இந்த பர்த்டேவும் எனக்கு ஸ்பெஷல்... அப்புறம் இந்த கிஃப்ட்டும் ஸ்பெஷல்" என்றான்.

"என்ன பிருத்வி இது ஸ்பெஷலா...?? உங்க ஃப்ரண்ட்ஸ் என்ன கிஃப்ட் கொடுத்தாங்க... அப்புறம் சப்னா என்ன கொடுத்தா..??"

"அதெல்லாம் இன்னும் நான் பிரிச்சுப் பார்க்கல... ரூம்ல தான் இருக்கு... ஹே வா அதெல்லாம் என்ன கிஃப்ட்ன்னு பார்க்கலாம்..." என்று கூறிக் கொண்டே அவளது கையைப் பிடித்து அவனது அறைக்கு அழைத்துப் போனான்...

இருவருமே அந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்... இதுவரை இந்த வீட்டில் அவள் உரிமையோடு வலம் வந்திருந்தாலும் பிருத்வி இருக்கும் போது அவன் அறைக்கு அவள் சென்றதில்லை... அவனுமே அப்படி எந்தப் பெண்ணையும்... சப்னாவையும் சேர்த்து தான் அவனது அறைக்கு கூட்டிச் சென்றதில்லை...

ஏனோ அதைப்பற்றி இருவருமே யோசிக்கவில்லை... அவர்கள் மனதில் இருந்த அந்த சந்தோஷம் தான் காரணமா..?? இல்லை அவர்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதே அது காரணமா..??

அவர்கள் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திற்கு பிறகு... இருவருக்குமே நடையில் தடுமாற்றம், பேச்சில் குழறல், இந்த வீடே சுற்றுவது போல் தலை சுற்றியது... நேரம் செல்ல செல்ல அது ஏதோ போதை மயக்கம் போல் இருந்ததை இருவருமே அறிந்துக் கொண்டார்கள்... ஆனால் அதற்கு பிறகு நடக்கப் போவதை தான் அவர்கள் அறியவில்லை... அதற்கு பிறகு என்ன..??

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..

இன்னலை தீர்க்க வா..

உண்மையில் இந்த இரவு இன்னலை தீர்க்கவா வருகிறது..?? இத்தனை நாள் காதலில் உருகிக் கொண்டிருந்து அது தோல்வியில் முடிந்த போது... பிருத்வி எனக்கு இல்லையா..?? என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்தவளை இந்த இரவு பிருத்வியுடன் திருமண பந்தத்தில் இணைக்க போகிறது என்றால் அது இன்னலை தீர்க்க வந்த இரவு தான்...

ஆனால் விதி சொல்கிறது... இந்த இரவு யுக்தாவிற்கு இன்னலை கொடுக்க வருகிறது என்று... அப்படி இந்த இரவு இன்னலை கொடுக்க வருகிறது என்றால் அது தீரும் விடியல் எப்போது..?? அது இந்த இருட்டுக்கு தான் வெளிச்சம்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.