(Reading time: 7 - 13 minutes)

ப்ச்ச்ச்… முதல்ல உன் வீட்டுக்கு போகுற வழிய பாரு..நேற்று கூடஃபோன்ல  நீ உங்கம்மா கிட்ட பேசுறத நான் கேட்டேன்…இன்னும் எத்தனை நாள் நீ இங்க இருந்தாலும் நான் உன்ன மன்னிக்க போறது இல்ல.. எதுக்கு ஒரு அம்மாவின் மனசை அழ வெச்சு அந்த பாவத்தையும் என் தலையிலகட்டுற ? ஏற்கனவெ கொலைப்பழி……….”

“..”

“ப்ளீஸ்… இங்க இருந்து போயிரு…  நீ ஒன்னும் என் எதிரி இல்லை..நண்பனும் இல்லை.. அவ்வளவுதான் போதுமா.. தேவை இல்லாம உன் நேரத்தை வீணடிக்காதே”

“ உன்ன விட்டாஎனக்கு வேற யாரு இருக்கா சுபி .. நீ பேசலன்னாலும் நாம அப்போ காலெஜிலிருந்தோம்… தூரத்திலிருந்து உன்னை பார்த்து நிம்மதியா இருந்தேன்.. இப்போ அதுக்கும் வழி இல்ல..எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்”

“ நீதான் என்னை பைத்தியம் ஆக்குற இப்போ ..சொல்றது புரியலையா ? ஜஸ்ட் லீவ் மீ”

“அப்போ எனக்கு மன்னிப்பே கிடையாதா ?”

“ உனக்கு ஏன் புரிய மாட்டிங்குது ? மன்னிக்கிற தகுதி எனக்கே கிடையாது..நானெ குற்றஉணர்ச்சியில் தானே இருக்கேன்..இதுல நான் யாரு உன்னை மன்னிக்க?”

“ஏன் இப்படி திங்க் பண்ணுற…? குணாவுக்கு உன் மீது ஈடுபாடு வர்ரதுக்கு நாந்தானே காரணம்?”

“அதுனாலத்தான் உன்ன கெஞ்சி கேக்குறேன் என் கண் முன்னாடி நிக்காதே…உன்ன பார்த்தா,எனக்கு குணா ந்யாபகம் வருது” என்று குரலை உயர்த்தியே இருந்தாள் சுபத்ரா… (*போச்சுடா…இனி அவ்வளவுதான்… கடைசிவரை இது சரியாகாதுன்னு நினைக்கும்போதுதான் கதையில ட்விஸ்டு… இந்தமஹாபாரதம்,ரமாயனன் சீரியலில் எல்லாம் உச்சகட்டத்துல ஒரு சங்கு சத்தம் கேக்குமே, அந்த மாதிரி கற்பனை பண்ணிகோங்க…)

சில நிமிடங்களுக்கு முன்பு , சந்துருவின் வீட்டில்..!

தன் தாயிடம்பேசிவிட்டு வந்த சந்துரு முதல் வேலையாய் தனது தந்தையை அழைத்தான்..

“அப்பா”

“ம்ம்ம்”

“எங்கப்பா இருக்கீங்க ?”

“ சொல்லுங்கப்பா”

“ஈ.சீ.ஆர்”

“உடனே வீட்டுக்கு வாங்கப்பா “

“..”

“ அப்பா என்ன நடந்ததுன்னு அம்மா சொல்லித்தான் எனக்கே இப்போ தெரிஞ்சது ! நான் அம்மாவுக்கு மட்டும் பிள்ளை இல்லப்பா..உங்களுக்கும் தான் ..என் மேல நம்பிக்கை இருந்தா தயவு செஞ்சு வாங்கப்பா”

“..”

“அப்பா,நந்திதாவுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை…போதுமா ?இப்போவாச்சும் வாங்க “ என்றான் சந்துரு..மகனின்  வார்த்தை மீது நம்பிக்கை முழுமையாய் வரவில்லை என்றாலும் கூட,அவநம்பிக்கையும் எழவில்லைதான்..எனவே வீட்டிற்கு த்ரிஉம்பி வர ஒப்புகொண்டார் அவர்…

சந்துருக்குத் தான் தலை வலித்தது… நீண்ட நாட்களுக்கு பிறகு குணாவை நினைத்து கொண்டான் ..குணா,சந்துருவிற்குதம்பிபோல மட்டுமில்ல,உற்ற தோழனாகவும் இருந்தான்.. இப்போது எப்படி கதிர் அவனுக்கு சரிபாதியோ அப்படித்தான் குணாவும்… அவன் இல்லாமல் பித்து பிடித்தவன் போல இருந்த நாட்களும், உயிரே இல்லாமல் நடந்த நாட்களும் நினைவில் நின்றன…சட்டென மனதிற்குள் “பிரபு அத்தான்” என்று நந்து அழைப்பது போல இருந்தது.. அவள்தான்! அவள்தானே அவனை மீட்டெடுத்தாள்? இன்று மீண்டும் பழைய நிலை வந்துவிட்டதோ?மீண்டும் நான் தனிமையிலா ? லேசாய் சுரீர் என்றது அவனுக்கு… இப்போதைக்கு தனிமை அவசியம் என்றெண்ணி நீண்ட நாட்களாய் பூட்டி வைக்கப்பட்ட குணாவின் அறைக்குள் நுழைந்தான் சந்துரு…

“ கதிர்”-நளினி

“ என்னம்மா ?”

“சந்துரு குணா ரூமுக்குள்ள் போயி ரொம்ப நேரம் ஆச்சு..போ கூட்டிட்டு வாப்பா”என்றாரவர்…சட்டென கதிரின் முகம் வெலுத்தது… அவன் மனதிற்குள்பூட்டி வைத்த அந்த உண்மை கோரமாய் சிரித்தது…

“அம்மா நீங்கலே..”

“இல்லகதிர் அப்பா வந்துருவார்…நான்  அவர்கிட்டபேசனும்…நீ போ” ..வேறு வழியின்றி அந்த அறையை நோக்கி நடந்தான் கதிர் !

அடுத்த திகிலை நாம அடுத்த அத்தியாயத்தில் படிப்போமா?ஹா ஹா 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 28

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 30

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.