(Reading time: 31 - 61 minutes)

மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலா

ன்??? ஏன்??? இந்த கனவு இப்போது கண்முன்னே வருகிறது. ஏதாவது தவறாக நடக்கப்போகிறதா??? மனதிற்குள் பல நூறு அலைகள் அடித்து ஓய்ந்தன. சந்திரிக்கா இருந்த அந்த மனநிலையில் கூட மேகலா அழிந்து விடவேண்டும் என்று அவரால் மனதார நினைக்க முடியவில்லைதான்.

'அந்த கனவில்  ஒரு மலைப்ரதேசம் போன்றதொரு இடத்தைத்தானே பார்த்தேன். அப்படி ஒரு இடத்துக்கு செல்லாத வரையில் அது பலிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. புரியவில்லை அவருக்கு.

ரிஷி கிளம்ப எத்தனிக்க, சந்திரிக்காவிடம் நிறையவே யோசனை. தானும் அவனுடன் சென்றால் என்ன என்றே தோன்றியது அவருக்கு. இந்த பிரச்சனையில் தானும் சம்மந்தப்பட்டிருப்பதால் ரிஷியுடன் செல்வதே சரியென பட்டது அவருக்கு.

Manathora mazhai charal

காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது அந்த தினசரி!!!! 'வேலைக்காரியாக ரிஷியின் அன்னை.!!!! தவிக்க விட்ட ரிஷி!!!!!

ஜானகி அம்மாவின் பார்வையில் மறுபடியும் பட்டன அந்த வார்த்தைகள். ஆரம்பத்தில் இருந்தே சந்திரிக்காவுடன் இருந்ததினாலோ, இல்லை சில நாட்கள் சஞ்சாவின் வீட்டில் இருந்ததினாலோ என்னவோ இது போன்ற செய்திகள் நடிகர்களை எத்தனை பாதிக்கும் என்று அறிந்து தான் இருந்தார் ஜானகி அம்மா. தானும் ரிஷியுடன் சென்று எல்லாருக்கும் எல்லாவற்றையும் தெளிவு படுத்தி விடுவதே சரி என தோன்ற ஆரம்பித்தது அவருக்கும்,

'நானும் வரேன் ரிஷி. அதுதான் சரியா இருக்கும்' என்றார் சந்திரிக்கா.

'நானும் வரணும்பா' இது ஜானகி அம்மா.

'வேண்டாம். யாரும் வேண்டாம்.' தீவிரமாக மறுத்தான் ரிஷி. அங்கே தேவை இல்லாம ஆயிரம் கேள்வி கேட்பாங்க. உங்களுக்கு எல்லாம் கஷ்டமா இருக்கும் எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லிக்கறேன்'

'இல்லப்பா நான் வரலைன்னா நீ என்னை ஒதுக்கி வெச்சிருக்கேன்னு தான் எல்லாரும் பேசுவாங்க. நான் வர்றது தான்  சரி. இதுக்கும மேலே எல்லாரும் உன்னை தப்பா பேசறதை நான் விரும்பலை.' சொன்னார். ஜானகி அம்மா.

'ஜானகி சொல்றது கரெக்ட். அவளை கூட்டிட்டு போ' ரிஷி என்றார் அப்பா.

'அம்மா நீயாவது இங்கேயே இரும்மா. உன்னை தேவை இல்லாம வருத்தப்பட வைப்பாங்க...' ரிஷி சொல்ல கொஞ்சம் வாடியது அம்மாவின் முகம்.

அவன் சொன்ன எந்த சமாதானத்துக்கும் கட்டுப்பட விரும்பவில்லை இரண்டு அம்மாவும். வேறு வழியே இல்லாமல் அவர்களையும் அழைத்துக்கொண்டு வாசலில் வந்து நின்றான் ரிஷி. உடல் பலம் அதிகம் இல்லாததனால் ஜானகி அம்மாவை கொஞ்சம் தாங்கியபடியே அழைத்து வந்தான் ரிஷி.

இரண்டு பக்கமும் இரண்டு அம்மாக்கள் நின்றிருக்க, நடுவில் அவன் கம்பீரமாக நின்றிருக்க  அதுவே பல கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டதை போலத்தோன்றியது பலருக்கு.

கூட்டம்!!! அவனது ரசிகர் கூட்டம்!!! அவன் வெளியில் வந்து நின்றதுமே ரசிகர்களின் உற்சாக கூச்சல் புறப்பட, காமேராக்களில் இருந்து புறப்பட்டது சடசட  ஒளி மழை.

'ரிஷ்,,.....ஷி...... ரிஷ்...ஷி.......' கோஷங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்க 'வி ஆர் வித் யூ ரிஷி...' என்ற பேனர்களுடன் அவனது ரசிகர்கள் அங்கே குழுமி இருந்தனர். கொஞ்சம் வியந்து மகிழ்ந்து போனான் ரிஷி. இத்தனை மக்களா??? இத்தனை அன்பா என் மீது??? இது தான் சினிமா துறையில் நான் இருப்பதால் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரமா???

உதவி என்று என்னை தேடி வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்ததை தவிர அவர்களுக்கு வேறென்ன செய்துவிட்டேன் நான்??? அவனது பிறந்த நாட்களில், விழாக்களில் அவனது ரசிகர் கூட்டத்தை பார்த்திருக்கிறான் தான். ஆனால் இன்று இத்தனை பேர் அவனுக்காக இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவனுக்கு ஒரு புது சக்தியை கொடுத்தது போலே இருந்தது.

எல்லாரையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பினான் ரிஷி. அவன் முகத்தில் அப்படி ஒரு தெளிவு. இரண்டு அம்மாக்களின் முகத்திலும் நிறைவான புன்னகை. அவர்களுக்கு பாதுக்காப்பாக இரண்டு உதவியாளர்கள் நின்றிருந்தனர்.

பத்திரிக்கையாளர்கள் முன்னால் வந்தால் கேள்விக்கணைகள் பாயும் என்பதாலேயே அவர்கள்  கண்ணில் படாத தூரத்தில் நின்றிருந்தார் மேகலா.

'அட வந்து விட்டாளா சந்திரிக்கா???  'பார்த்தே ஆக வேண்டும்!!!!!. எல்லார் முன்னிலையிலும் ரிஷி ஜானகியை எனது அம்மா என்று சொல்லும் காட்சியை பார்த்தாக வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை அதே கேள்வி திரும்ப திரும்ப கேட்க படும். அப்படிதான் ஏற்பாடு!!! அவன் சொல்லியே ஆக வேண்டும்!!! சந்திரிகா அழுதே ஆக வேண்டும்!!!

யாருடைய பார்வையோ தன்னை ஊடுறுவுவதை உணர்ந்தவராக சட்டென திரும்பினார் சந்திரிக்கா!!! அங்கே அவர் கண்ணுக்கெட்டும் தூரத்தில் மேகலா!!!

தேளின் இயல்பு கொட்டுவது என்றால் தேனின் இயல்பு இனிப்பது அல்லவா??? அவை தங்களது இயல்புகளை எந்த நிலையிலும் மாற்றிக்கொள்வதில்லையே!!!!  அதே போல்தான் சந்திரிக்காவும். இந்த நிலையிலும் மேகலாவை பார்த்தவுடன் அவர் மனதில் எழுந்த முதல் கேள்வி......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.