(Reading time: 8 - 16 minutes)

ம், அவர்கள் வளர்ந்த விதம் அவ்வாறு. தங்களின் தாய் தந்தை சிறு வயதில் இருந்தே இவர்களின் கருத்தையும் சந்தோசத்தையும் கேட்டு கேட்டு அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து கூறி வளர்த்த விதம் இவனை இப்படி பட்டென்று கூற வைத்தது. ஆனால், அவனின் எண்ணம் , இது இவன் மனதில் ஏற்பட்ட உண்மை காதலா இல்லை.... தடுமாற்றமா?... ஏனென்றால் திவ்யாவை  இவன் சந்தித்து முழுதாக ஒரு மணி நேரம் கூட நெருங்காத நிலையில் இவன் இப்படி பேசுவது தான் அவனுக்கு எதோ தடுக்க... அதற்கு மறுப்பு கொடுக்கும் வண்ணம் ... நிச்சயத்தின் போது சந்தியாவை சில நிமிடங்களுக்கும் குறைவான நிமிடத்தில் பார்த்த தனக்கே ... தன் மனதிற்கே இவள் என் மனைவி என்ற எண்ணம் வருகையில் தன் தம்பியின் இடத்தில் இதுவும் சாத்தியமே.... என்றவோர் எண்ணம் இவன் மற்ற எண்ணத்தை அடியோடு அகற்றியது.... ஆக தன் தமையனின் இந்த முடிவுக்கு தானும் ஏன் தன் குடும்பமே முழு சம்மதம் தெரிவிப்போம் என்று அவன் எண்ணம் தறிகெட்டு ஓடியது.

திவ்யாவின் எண்ணமோ "என்ன இவன் இப்படி அக்கா அத்தான் முன்னாடி புரப்போஸ் பண்றான்... என்று வெட்கம் பிடுங்கி தின்னது.

தன் கொழுந்தனின் வார்த்தையில் வாயை பிளந்து நின்ற சந்தியா அய்யோ இதுக்கு இவ கடுப்பாகி கண்ட வார்த்தைலலாம் திட்டிற கூடாதே என்று பதறி போய் திவ்யாவை காண அவளின் அந்த கூடுதல் வெட்கம் இவளுக்கு மயக்கத்தையே கொடுத்தது எனலாம்.
மூவரின் இந்த மோன நிலையை சரோவின் குரல் தான் நடப்பிற்கு கொண்டு வந்தது...

என்ன எல்லாரும் அமைதுயாய்டீங்க...
திவ்யா நா கேட்டதுக்கு பதில் சொல்லு என மேலும் கூற அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்.

ஹேய், திவ்யா .... என்ற சந்தியாவின் குரல் அவளின் செய்கையை உணர்த்த
என்ன அண்ணி உங்க தங்கை பறந்துட்டாளா பதில் சொல்லாம?... என்று வினவ

ஆமாம், சரவணன் ஆனா.... என்று அவள் இழுக்கவே சந்திரன் இடை புகுந்து... சதி... அதெல்லம் அப்புறம் பேசிக்கலாம் ... டேய் நீ இடத்த காலி பண்ணு .... நா கட்டிக்க போறவள்ட்ட என்ன  தவிர எல்லரு பேசுரீங்க...என்று அங்கலாய்க்க..
பதிலாக புன்னகையை  சிந்தினாள். 
நாகரிகம் கருதி சரோவும் நகர , அதன் பின் தன் சந்தேகத்தை அவனிடம் கூறி விட்டு தனக்கு கிடைத்த தகவலையும் கூறினாள்.

அதன் பின்னரே இருவரும் "  நாம் நினைப்பது நடந்தால் மிகவும் நன்றாகவே இருக்கும்  "  என்று ஒருமித்தமாக முடிவெடுத்தனர்.

சிறிது நேரம் அவர்கள் இருவரும் தங்களின் கற்பனையில் மிதந்தனர்.

அதன் பின்னும்  திருமண வேலைகள் நன்றாய் அமைய...

திருமண நாளான இன்றும் அவர்களின் வீடு களைக்கு மேல் களை கட்டியது.
ஒரு பக்கம் பெரியவர்களின் சடங்கு வேலைகள் , இள வயது கன்னிகளின் அலங்காரங்கள், அதை ஓர கண்ணால் ரசிக்கும் இளமை பட்டாளங்கள், சின்னஞ்சிறு மொட்டுகளின் துள்ளல்கள்,  அதுவரை அந்த ஊரில் புது மண தம்பதி என்று பெயர் எடுத்தவர்களின் கண் ஜாடை மொழிகள், இப்படி எல்லாமும், சேர்ந்து அந்த திருமண மண்டபத்தையே பிரம்மாண்டமாய் காட்டியது.

மண மகனின், அருகில், மண பெண் அமர, அவளின் சங்கு கழுத்தில், நாண் பூட்ட அவளின், செம்மையான முகத்தை காண துடுத்தான், சரோ
அவனின், முகம்  காண வெட்க பட்டு நிலம் நோக்கி குனிகிறாள், திவ்ய மங்கை..
அக்னி குண்டத்தில் இருந்து  சூடு கையில் பட்டதோ என்னவோ, சூடு தாங்காமல் இருக்கையை விட்டு துள்ளி எழுந்து விட்டான்,

டேய், என்னடா உக்காந்துட்டே தூங்குற என்று அருகில்  காபியோடு நின்று கொண்டிருந்தான் எழில்.

ஹிஹிஹி... என்று அசடு வழிய.. நின்றான் சரோ.

ஆனாலும் அவன் பார்வை திவ்யாவை  தேடியது. கொஞ்ச நாட்களாக அவள் இவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள். 
சரியாக கூற வேண்டுமானால் இவன் தன் காதலை  கூறியதிலிருந்து... 
ஆனால் அவளால் அதிக விளையாட்டு காட்ட முடியாதவாறு... அவன் பார்வையில் சிக்கினாள்.

வெள்ளையும் பிஸ்தா க்ரீமும் கலந்த காக்ரோ சோளியில் .

அவன் தன்னை மறந்து அவளை சைட் அடிக்க ....

போச்சுடா இவன் மறுபடியும் கனவுலகத்துல சஞ்சரிக்க ஆரம்பிச்சுட்டான்... இது வேலைக்காகாது... என்று எண்ணி கொண்டிருக்கும் போதெர் இவன் பின்னிருந்து

ம்க்ம்... என்று தொண்டையை செருமும் சத்தத்தில் பின்னால் திரும்ப அங்கோ அவன் கோமதி...

மாமா...

ஹேய், மதி...

மாமா... இந்த டிரெஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு ....
அவளின் அந்த நாணம் கூடிய சொல்லில் அவன் மேலே பறந்தான்.

இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்க்க இதை பார்த்த திவ்யாவோ, குறும்பு பார்வையுடன் அவர்கள் அருகே நெருங்கினாள். ஆனால், இவள் தன்னை நோக்கி வருவதாய் முதலில் எண்ணிய சரோவோ அவள் கண்கள் கூறிய செய்தியில் , என்னமோ நடக்க போகுது என்று இரண்டு ஸ்டெப் பின் வாங்கினான்.

டேய், எலி.... உன்ன எங்கலாம் தேடுறது... என்ற அவளின் கேள்வியில் உலகம் மீண்டனர் இருவரும்.

என்னையா? ஏன் தேடுன? அவன் அப்பாவியாய் வினவினான். தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல்,

அதோ அந்த வெள்ளை கலர் சுடிதார் போட்ட பொண்ணு பேர் கேட்டியே.... அவ பேர்  ... நி..வே..தி..தா... வாம் என்று அழுத்தி கூறி அங்கிருந்து நழுவ அவள் பின்னோடு சரோவும் சென்றான்.

சற்று முன் காதல் பார்வை பார்த்த மதியின் முகம் இப்போப்து அனல் பார்வையை கக்க...அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளின் பின்னோடு மதிய்ய்ய்ய் என்று அழைத்தவாறு எழில் சென்றான்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும் . . .

Episode # 05

Episode # 07

{kunena_discuss:960}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.