(Reading time: 16 - 31 minutes)

வனது தோள்களில் அப்படி என்ன நிறைவு கண்டாளோ, எழும் எண்ணமே இல்லாது அவன் தோள்களே கதி என்று கிடந்தாள் அவள் கண் மூடி…

அவளின் நிலை தான் இப்படி என்றால், அவனோ, இத்தனை நாள் தன்னை பிரிந்திருந்த உயிர் மீண்டும் வந்து தன் உடலில் தங்கியது போல் அவள் சாய தன் தோள்களை தந்து இமை மூடி மெய் மறந்திருந்தான் அவன்…

ஜோடி இளங்குயில்களுக்கு அவர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை… ஒருவரை ஒருவர் தங்களது பாஷையில் சத்தமிட்டு கொஞ்சிக்கொள்ள, அவைகளின் காதல் அவர்களை நனவுலகுக்கு கொண்டு வர,

மெல்ல விழி திறந்தாள் ருணதி…. விழி திறந்தவளுக்கு சாய்ந்திருப்பது தன்னவனின் தோள் என்று தெரியவர, ஒரு விநாடி இமை மூடி ரசித்து, உதட்டில் புன்னகையை மலர விட்டவளுக்கு, “ஹ்ம்ம்… சகி…..” என்ற வார்த்தைகளும் தன்னை மீறி வர, அப்பொழுது விழித்தது அதுவரை அவனின் காதலில் கட்டுண்டிருந்த அவளது மனம்…

சட்டென அவனிடமிருந்து அவள் அதிர்ந்து விலக, அவன் பதறி கண் விழித்தான்….

“நா………………….ன்………………… நா…………..ன்………………” என்றவள் திக்கித் திணற, அவன் அவளையேப் பார்த்தான்…

“சா…………..ரி………………” என்ற வார்த்தைகளோடு அங்கிருந்து வேகமாக அகன்றவள் விரைவாக கோகிலவாணி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்…

“வந்துட்டியா?... கிளம்பலாமா?....” என கோகிலவாணி கேட்க, அவள் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள்…

“என்னாயிற்று இந்த நதிக்கு?...” என யோசித்தவர், “நடந்து முடிந்த நிகழ்வுகளின் தாக்கமாக இருக்கும்… அழுத்தக்காரி… இப்போவரை சத்தியம் செய்யலையே… அப்படி யாருதாண்டீ நதி உன் மனசை இந்த அளவு பாதிச்சது… எங்கடி இருக்குறான் உன் மனசில இடம் பிடிச்சவன்?...” என கோகிலவாணி மனதினுள் அவளிடம் கேள்வி கேட்டு முடிக்கையில்,

“மதர்… நான் இங்க தான் இருக்குறேன்….” என தன்னை தேடிய காவேரிக்கு கை காட்டி குரல் கொடுத்தான் மகத்…

பின்னர் அனைவரும் கிளம்புகையில், “அம்மா… இந்த ஜித் காரை எடுத்துட்டு போயிட்டான்… இப்போ என்ன பண்ண?...” என விஜய் கேட்க,

“அவன் எடுத்துட்டு போயிட்டானா?... சரி விடு… நாம ஆட்டோ பிடிச்சு போயிடலாம்…” என்றார் வைஜெயந்தி…

“ஹ்ம்ம்…” என்று விஜய் காலால் தரையை உதைத்த போது,

“ஆன்ட்டி… இப்போ நாங்க வந்த கார் பெரிசு தான்… காவேரி அம்மாவோடது…. நாம எல்லாரும் அதிலேயே போயிடலாமே…” என பவித்ரா சொல்ல, அனைவருக்கும் அது சரி என்று பட்டது…

கோகிலவாணி, காவேரி, வைஜெயந்தி மூவரும் முதலில் அமர, காவேரியின் மடியில் நதிகாவும், வைஜெயந்தியின் மடியில் துருவனும் இருந்தனர்… பின்னாடி இருந்த சீட்டில், ருணதி மற்றும் பவித்ரா அமர்ந்து கொள்ள, மகத் காரை எடுத்தான்… அவனருகில் விஜய் வந்து அமர, அவனுடன் ஒட்டிக்கொண்டே பிரபுவும் அமர்ந்தான்…

“பிரபு… பின்னாடி தான் இடம் இருக்கே… நீ பவித்ரா பக்கத்துல போய் உட்காரேன்…” என காவேரி சொன்னதும்,

“அதெல்லாம் வேண்டாம் மதர்… எனக்கு இங்க ஒரு சின்ன வேலை இருக்கு…” என்றான் அவன்…

“என்ன வேலைப்பா?...” என கோகிலவாணி கேட்க,

“அம்மா… இதென்ன கேள்வி… வயசுப்பசங்க எதாவது சிரிச்சி பேசிண்டு வருவாங்க… நீ ஏன் கேள்வி கேட்டுண்டு இருக்குற இப்போ… பேசாம வா…” என வைஜெயந்தி தன் அம்மாவை பேசவிடாது செய்ய, பிரபு சிரித்தான்….

“எதுக்குடா சிரிக்குற?...” என கேட்ட விஜய்யிடம்

“இல்ல… உன் அம்மா உன் கிரிமினல் புத்தி தெரியாமலே சப்போர்ட் செய்யுறாங்களே… அத நினைச்சேன்… சிரிச்சேன்…” என்றான் பிரபு…

“டேய்… வாய மூடிட்டு பேசாம வா… என்னை தொந்தரவு பண்ணாத…”

“நான் ஏண்டா தொந்தரவு செய்ய போறேன்… கண்டிப்பா பேசாம தான் வருவேன் மச்சான்… யூ டோன்ட் வொரி…”

“ஹ்ம்ம்… அது…” என்றவன், நினைவு வந்தவனாக, “ஆமா, ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீயே… என்ன வேலை அந்த சின்ன வேலை?...” என சந்தேகத்தோடு கேட்க

“ஹாஹாஹா… எதுமில்ல மச்சான்…” என சிரித்த பிரபுவை தோளோடு சேர்த்து பிடித்தவன்,

“டேய்… உன்னை எனக்கு நல்லாவே தெரியும்டா… உன் வேலை என்னை கண்காணிக்கிறது தான?... தெரியும்டா டேய்….” என சொல்லிவிட்டு, அங்கிருந்த கண்ணாடியினை பவித்ரா தெரியும்படி அட்ஜஸ்ட் செய்ய, மகத், அவனை பார்த்தான் கேள்வியோடு…

“ருணதி அங்க இருக்குறாங்க பாஸ்… கார் ஓட்டும்போது பார்த்துட்டே வண்டியை ஓட்டுங்க… பாவம் எத்தனை நாள் பிரிஞ்சிருந்தீங்க என் அண்ணனால… ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி… அக்செப்ட் செய்துக்கோங்க டாக்டர்….” என கண்சிமிட்டியவனைப் பார்த்து மகத், “தேங்க்ஸ்…” என சொல்லிவிட்டு, கண்ணாடியில் பார்வையை பதிக்க, அதை தொடர்ந்து விஜய்யும் அங்கே பார்க்க,

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா……” என பாடினான் பிரபு…

திரும்பி பார்த்து சிரித்த விஜய்யிடம், “ நீ நடத்துடா விஜேந்திரா…. உன் காட்டுல அடைமழை தான்…. என்ஜாய்….” என்றான் பிரபு அவனின் காதோரமாக…

“மகத்… தம்பி… அப்படியே அந்த ரேடியோவை கொஞ்சம் தட்டி விடுங்க… எனக்கும் கொஞ்சம் நேரம் போகும்…” என சொல்ல, மகத், அவனை திரும்பி முகம் மலர்ந்து பார்த்துவிட்டு, ரேடியோவை ஆன் செய்தான்…

பவித்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த விஜய்க்கு அந்நேரம் ஒலித்த பாட்டு தோதாக அமைந்தது…

கவிதையே தெரியுமா?...

என் கனவு நீ தானடி

இதயமே தெரியுமா?...

உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதேஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே….” என பாடல் ஒலிக்க

காதலே……..” என்றான் பிரபு வாய்விட்டு சத்தமாக….

விஜய் சட்டென்று அவன் வாயை பொத்தி, அடுத்த பாட்டை ஒலிக்க விட,

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே

இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே…”

என பாடலுடன் சேர்ந்து பாடிக்கொண்டே கண்ணாடியை பார்க்க அந்நேரம் எதேச்சையாய் பவித்ராவும் அவனைப் பார்த்துவிட்டு திரும்ப, அவன் அடுத்த பாட்டை ஒலிக்க விட்டான்…

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் இதயம் தெரிந்து நான் இதுபோலே இல்லையே….

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை வாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா

என்னைக்கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே….”

“அது சரி… இன்னும் வேண்டுமா?...” என பிரபு கேலி செய்து சிரிக்க, விஜய்யும் சிரித்தான் அவளைப் பார்த்துக்கொண்டே… அவள் அதனை கவனித்துவிட, எதுவோ சரியில்லை என உணர்ந்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.